Connect with us

Technology

யூடியூப் சேனல் புதிதாக ஆரம்பிப்பவர்கள் செய்யும் சில பொதுவான தவறுகள்.

Published

on

மாதாந்தம் பில்லியனுக்கும் அதிக பயனர்களை கொண்டுள்ள ஒரு வலைத்தளம் யூடியூப் என்பது பலரும் அறிந்த விடயம். கூகுளுக்கு அடுத்ததாக உலகத்திலேயே இரண்டாவது அதிகம் பயன்படுத்தப்படும் வலைத்தளங்களில் யூடியூப் தான் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. சரி வாருங்கள் இப்போது பதிவுக்கு செல்வோம்.

இந்தப் பதிவில் யூடியூப் சேனல் ஒன்றை முதலில் ஆரம்பிப்பவர்கள் செய்யும் பொதுவான ஐந்து தவறுகளைப் பற்றி பார்க்கப் போகின்றோம்.

சேனல் பெயர் (channel name)

யூடியூப் சேனல் ஆரம்பிப்பவர்கள் செய்யும் முதல் தவறு அவர்களின் சேனலின் பெயரை தெரிவு செய்து கொள்வதுதான், உங்களுடைய யூடியூப் சேனலின் பெயர்தான் உங்களுடைய அடையாளம் எனவே உங்களுக்கென்று தனிப்பட்ட ஒரு பெயர் இருந்தால் தான் வரும் காலத்தில் தொடர்ச்சியாக உங்களுடைய சேனலை கொண்டு செல்லம் பொது நீங்கள் தனியாக தெரிவீர்கள். எனவே உங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட பெயரை தெரிவு செய்வது சிறந்தது.

நீங்கள் ஒரு பிரபலமான யூடியூப் சேனல்களில் பெயரை அப்படியே பிரதி (copy ) செய்து உங்கள் சேனலுக்கு அதே பெயரை சூட்டினாலோ, அல்லது அதனுடன் ABC அல்லது 123 என்று ஏதேனும் ஒன்றை சேர்த்து வைத்தாலோ. எதிர்காலத்தில் உங்களுடைய சேனல் பிரபலமாகும் போது குறிப்பிட்ட ஒரு பிரபலமான சேனலை அப்படியே பிரதிபலித்து உங்கள் சேனல் உருவாக்கி இருக்கிறது என்ற சில கருத்துக்கள் வர வாய்ப்புண்டு எனவே இதுபோன்ற அசௌகரியத்தை தவிர்த்துக்கொள்ள உங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட ஒரு பெயரை வைத்துக் கொள்வது மிகவும் சிறந்தது.

ஸ்பேம் கருத்து (Spam comment)

ஸ்பேம் (Spam) கருத்து (Spam comment) பதிவிடுதல். Spam comment என்றால் என்ன? குறிப்பாக பிரபலமடைந்து ஏதேனும் ஒரு யூடியூப் வீடியோவின் கருத்து பதிவிடலில் உங்களுடைய சேனலின் லிங்க் (Link) அல்லது “என்னுடைய சேனலுக்கு (Subscribers) பண்ணுங்கள்” என்றோ கூறும் போது அது ஸ்பேம் கருத்தின் பட்டியலில் சேர்க்கப்படும்.

இது தொடரும் பட்சத்தில் உங்களுடைய சேனல் ஸ்பேம் வரிசையில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது எனவே இதுபோன்ற கருத்துக்களை பதிவிடுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.

Tag மற்றும் Discription

வீடியோ பதிவேற்றம் செய்வதில் விடும் தவறுகள், முதலில் நீங்கள் தெரிவு செய்யும் வீடியோ பயனர்களுக்கு எந்த அளவுக்கு நன்மை தரும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பலருக்கும் பயன்தரும் அல்லது அதிகம் தேடப்படும் வீடியோக்களை உருவாக்கி பதிவேற்றம் செய்வது உங்கள் சேனலை விரைவில் வளர்க்க முடியும். அத்துடன் வீடியோவின் தலைப்பு, விரிவாக்கம் மற்றும் குறிச்சொல் (Tag) ஆகியவற்றை சரியாக கொடுக்கும் போதுதான் உங்களுடைய வீடியோ யூடியூப் தேடல் முடிவுகள் அதிகம் காண்பிக்கப்பட வாய்ப்புண்டு.

வீடியோவுடைய விரிவாக்கத்தை ஏழுதும் பகுதியில் பலவகையான குறிச்சொற்களை (Tags) மற்றும் வீடியோவுக்கு சம்பந்தமில்லாத குறிச்சொற்களையும் எழுதுவார்கள் இது ஒரு பெரும் தவறாகும். நீங்கள் வீடியோவுக்கான விரிவாக்கத்தை எழுதும் பகுதியில் உங்களுடய்ய வீடியோ பற்றி மாத்திரமே எழுத வேண்டும். மேலும் குறிச்சொற்களை இடுவதற்கு என்றே பிரத்தியோகமாக யூடியூப் தந்துள்ள பகுதில் வீடியோவுக்கான குறிச்சொற்களை மாத்திரமே எழுத வேண்டும். இது போன்ற தவறுகள் யூடியூபின் விதியை மீறும் ஒரு செயலாகும், மீறும் பட்சத்தில் உங்களுடைய சேனல் முடக்கப்பட வாய்ப்புண்டு.

லொகேஷன்(Location)

வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் போது அட்வான்ஸ்(advance) எனும் பகுதியில் உள்ள வீடியோவுக்கான லொகேஷனை (location) தெரிவு செய்தல். குறித்த அம்சமானது நாம் பதிவேற்றம் செய்யும் வீடியோவானது எந்த இடங்களில் மாத்திரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதையே குறிக்கும். எனவே இதை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு அவரவர்களின் வசிக்கும் இடத்தையே தெரிவு செய்து கொள்கிறார்கள், இதனால் குறித்த வீடியோ அவர்களின் இடத்தில் இருப்பவர்களுக்கு மாத்திரமே காண்பிக்கப்படும் எனவே இவர்கள் குறைவான பயனர்களையே பெறுகிறார்கள். உங்களுடைய வீடியோ உலகம் முழுவதும் காண்பிக்கப்பட வேண்டுமாயின் நீங்கள் லொகேஷனை தேர்வு செய்யாமல் விடவேண்டும்.

கிளிக்பைட் (Clickbait)
கிளிக்பைட் என்றால் பதிவேற்றம் செய்யும் வீடியோவில் ஒரு வகையான கருத்தும், வீடியோவின் thumbnailயில் வீடியோவுக்கு சம்பந்தமே இல்லாத ஏதேனும் கவர்ச்சியான புகைப்படங்களையும் வைப்பது. உதாரணமாக வீடியோவில் யூட்யூப் சேனல் சம்பந்தமாக காட்சிப்படுத்தி அல்லது பேசிவிட்டு அந்த வீடியோ காண thumbnailயில் ஒரு பிரபல திரைப்பட நடிகையின் புகைப்படத்தை வைத்தல். இதுபோன்ற செயல்களை பல காலமாக யூடியூப் தரப்பிலிருந்து செய்யக்கூடாது என்று சொல்லி வந்த நிலையில் தற்போது இதை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் வீடியோவுக்கான thumbnailயை அமைக்கும் அம்சத்தை குறிப்பிட்ட காலத்திற்கு தடைசெய்கிறது.

உங்களுடைய உரிமை இல்லாத புகைப்படங்களை thumbnailலாகவோ அல்லது வீடியோவில் பயன்படுத்தும் பட்சத்தில் புகைப்படத்துக்கு உரிமையாளர் உங்களுக்கு எதிராக யூடியூப் இடம் பதிப்புரிமை புகார் செய்ய முடியும் இதனால் உங்களுடைய சேனல் பாதிப்பை ஏசந்திக்கக் கூடும். மேலும் இதுபோன்ற செயல்களால் வீடியோ பார்வையாளர்ககள் எரிச்சலடைந்து உங்களுடைய சேனலை புகாரளிக்க கூடும். எனவே இதுபோன்ற செயல்களில் இருந்து முற்றாக தவிர்ந்து கொள்வது நல்லது.

தொடர்ச்சியான வீடியோ பதிவேற்றுதல்

தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவேற்றம் செய்யாமல் இரண்டு வீடியோக்களுக்கு இடையில் அதிக கால இடைவெளி இருப்பது புதிய யூடியூப் படைப்பாளிகள் செய்யும் மற்றுமொரு தவறாகும். குறைந்த பட்சம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதால் உங்களுடைய வீடியோக்களின் பார்வையாளர்கள் அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு. மேலும் வீடியோக்களில் பார்வை அதிகரிக்கும் போது உங்கள் சேனலில் சந்தாதாரர்கள் (Subscribers) அதிகரிக்கக்கூடும். எனவே தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவேற்றம் செய்வது மிகவும் முக்கியமாக இருக்கின்றது.

சமூக சமூக வலைத்தளங்களின் சக்தியைப் பயன்படுத்துங்கள்

உங்களுடைய வீடியோக்களை பிரபலமான சமூக வலைத்தளங்களில் பகிர்வு செய்து உங்கள் நண்பர்களிடம் உங்கள் வீடியோ பற்றிய கருத்துக்களை கேட்டறிந்து, உங்களின் அடுத்த வீடியோக்களில் அந்தக் கருத்துக்கு அமைய வீடியோக்களை பதிவிடுங்கள்.

என்ன நண்பர்களே இந்தக் கட்டுரையில் யூடியூப் புதிதாக ஆரம்பிப்பவர்கள் செய்யும் சில தவறுகளை பற்றி பார்திருந்தோம், நிச்சயமாக இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், நன்றி.

-Sahana

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Featured

Agriculture4 weeks ago

செடியை தாக்கும் மாவுப்பூச்சியை விரட்ட இயற்கை வழிகள்.

வீட்டுத் தோட்டத்தில் செடி, கொடிகளில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் மாவுப்பூச்சியை எந்த ரசாயனங்களும் இன்றி இயற்கையாகவே எப்படி விரட்டுவது என்பது பற்றி பார்க்க போகிறோம். கோடை காலம்...

Health1 month ago

உடல் ஆரோக்கியம் என்று நினைத்து நாம் செய்யும் சில தவறுகள்.

உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து நண்பன் சொன்னான், வெளிநாட்டில் இருக்கும் மச்சான் சொன்னார், இவர் சொன்னார், அவர் சொன்னார் என்று நாம்...

Health1 month ago

கருப்பு கவுனி அரிசியின் சில ஆரோக்கிய நன்மைகள்.

வெள்ளையா இருக்கிறது தான் நல்லது என்றும் கருப்பாய் இருக்கிறதெல்லாம் கெட்டது என்றும் நாம் பழக்கப்பட்டுவிட்டோம், ஆனால் அது உண்மை இல்லை. இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பாரம்பரிய அரிசி...

Agriculture2 months ago

இரசாயன உரங்களால் மலடான மண்ணை வளமுள்ளதாக மாற்ற சில வழிகள்.

சனத்தொகை பெருகும் போது தேவைகளும் அதிகரிக்கின்றது, மக்களுக்கு தேவை அதிகரிக்கும் போது விளைச்சலும் அதிகமாகத்தான் தேவைப்படுகின்றது. எனவே நம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையை விட்டுவிட்டு விளைச்சலை அதிகமாக...