Connect with us

Beauty

பற்களில் உண்டாகும் மஞ்சள் கறையை வீட்டிலேயே எளிமையாக போக்குவது எப்படி?

Published

on

நாம் சிரிக்கும் போதும், பாடும் போதும் நமக்கு அழகை அதிகரிப்பது நமது வெண்மையான பற்கள் தான். ஆனால் நமது சில கெட்ட பழக்கங்கள் மற்றும் பற்களை சரியாக பராமரிக்காதது என சில காரணங்களினால் நமது பற்களில் மஞ்சள் நிற கறை ஏற்பட்டு பற்களே மஞ்சள் நிறமாக மாறுகின்றன.

பற்களில் ஏற்படும் மஞ்சள் கறையை போக்கி, பற்களை முத்துப் போன்று வெண்மையாக வைத்துக் கொள்ள வீட்டிலேயே செய்யக்கூடிய மிக இலகுவான தீவைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

முதலில் நமது பற்களில் ஏன் மஞ்சள் கறை ஏற்படுகிறது என்பதை பற்றி சிறிது அறிந்துகொள்வோம். பெரியவர்களுக்கு பற்களில் மஞ்சள் கறை படிவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காரணங்களாலும், பான் மசாலா போன்றவற்றை பயன்படுத்துவதால் தான்.

இது பெரியவர்களுக்கு மாத்திரம் தானே என்று பார்த்தால் சிறியவர்களுக்கும் பற்களில் மஞ்சள் கறை படிகிறது. சிறியவர்களுக்கு பற்களில் மஞ்சள் கறை படிவதற்கு காரணமாக இருப்பது செயற்கை நிறம் அதிகமாக ஊட்டப்பட்ட பொருட்களை அதிகம் உண்பதாலும், அதை உண்டுவிட்டு வாயை நன்றாக சுத்தம் செய்யாமல் இருப்பதனாலும் பற்களில் பாக்டீரியா உருவாகி அது காலப்போக்கில் மஞ்சள் கறையாக மாறிவிடுகிறது.

வழி 1:-

இந்த மஞ்சள் கறையை வீட்டிலேயே போக்குவதற்கு என்ன தீர்வு ?

தேவையான பொருட்கள்:-

  • சிறிய துண்டு இஞ்சி
  • பாதி எலுமிச்சை பழம்
  • சிறிது உப்பு
  • பாத்திரம்

செய்முறை:-
முதலில் ஒரு சுத்தம் செய்யப்பட்ட பாத்திரத்தை எடுக்கவும், பின்னர் ஒரு சிறிய துண்டு இஞ்சியை நன்றாக தோலை சீவி விட்டு, அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இஞ்சிப் பேஸ்டில் ஒரு ஸ்பூனை எடுத்துக்கொள்ளுங்கள், அத்துடன் பாதி எலுமிச்சம் பழச்சாறை சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது பற்களில் உள்ள மஞ்சள் கறையைப் போக்கும் பேஸ்ட் தயாராகிவிட்டது. இதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.

பயன்படுத்தும் முறை:-
இந்த உப்பு, எலுமிச்சைச் சாறு, இஞ்சி கலந்த கலவையை காலையில் வழமையாக நாம் பற்துலக்குவது போன்ற, இந்த பேஸ்ட்டை இரண்டு நிமிடம் துலக்கினால் விரைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கி பற்கள் முத்துப் போன்று வெண்மையாக்குவதை நீங்களே அவதானிக்கலாம்.

இது எப்படி வேலை செய்கிறது?
இந்தக் கலவையில் சேர்க்கப்பட்டிருக்கும் உப்பு, எலுமிச்சை, இஞ்சி, இவைகள் வெளுக்கும் தன்மை உள்ளது. அதாவது நன்றாக சுத்தம் செய்யும் தன்மை இதற்கு இருக்கின்றது, எனவே இது நிச்சயமாக பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது, அது மட்டுமில்லாமல் பற்கூச்சம் வாய், துர்நாற்றம், ஈறு வீக்கம் போன்றவைகளை இது குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

வழி 2:-
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள கருஞ்சீரகத்தை கொண்டு பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்குவதற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கருஞ்சீரகப்பொடி 1 ஸ்பூன் பொடி
  • உப்பு – 1/2 ஸ்பூன்
  • எலுமிச்சை – பாதி

சுத்தமான ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் அரை ஸ்பூன் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்போது பற்களை வெண்மையாக்கும் கருஞ்சீரக கலவை தயாராகிவிட்டது. இந்தக் கலவையை பிரஷ்ஷில் எடுத்து 3 நிமிடம் வரை வரை பற்களில் பிரஸ் செய்து கொள்ளுங்கள், பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட கருஞ்சீரகம் கலவையை வாரத்துக்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

வலி 3:-
பல மருத்துவக் குறிப்புகளில் பிரதானமாக இருக்கும் பூண்டை கொண்டு பற்களில் உள்ள மஞ்சள் கறையைப் போக்க முடியும்.

தேவையான பொருட்கள்

  • பூண்டு – 4-5 பல்
  • சாதாரண டூத் பேஸ்ட் – சிறிது
  • உப்பு – சிறிது
  • நல்லெண்ணெய் – 1/4 ஸ்பூன்

நான்கு பூண்டுப் பற்களை எடுத்து அதன் தோலை உரித்து உரலில் போட்டு நன்றாக மசித்து எடுக்கவேண்டும். பூண்டை மசிக்கும் போது தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. பின்னர் ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்து அதில் ஒருவர் பயன்படுத்தும் அளவிற்கேற்ப சிறிது டூத் பேஸ்ட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சிறிது உப்பை சேர்க்கவும் அடுத்ததாக எடுத்துக்கொண்ட நல்லெண்ணெய்யில் 1/4 ஸ்பூன் சேர்த்து அதனுடன் நாம் மசித்து வைத்திருக்கும் பூண்டை சேர்க்க வேண்டும். பின்னர் அனைத்தையும் பேஸ்ட் போன்று நன்றாக கலக்கி கொள்ளவும்.

பூண்டு ஒரு மருத்துவ குணம் வாய்ந்த பொருளாக இருப்பதனால் அது ஆன்டிபாக்டீரியலாகவம், பற்களில் உள்ள மஞ்சள் கறையை உடனடியாக நீக்கும் வல்லமை கொண்டுள்ளது. அத்துடன் நல்லெண்ணெயை இதில் சேர்த்திருப்பதால் மஞ்சள் கரையை மட்டுமல்லாது வாய் துர்நாற்றத்தையும் நீக்கும்.

மேலும் இந்தக் கலவையுடன் டூத் பேஸ்ட் சேர்த்து தயாரித்து இருப்பதால் பூண்டினுடைய வாசமானது வாய்களில் வராது. இந்த கலவையை டூத் பிரஸ் அல்லது ஆள்காட்டி விரலைக் கொண்டு பற்களை துலக்கிக் கொள்ளும் முடியும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Featured

Agriculture4 weeks ago

செடியை தாக்கும் மாவுப்பூச்சியை விரட்ட இயற்கை வழிகள்.

வீட்டுத் தோட்டத்தில் செடி, கொடிகளில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் மாவுப்பூச்சியை எந்த ரசாயனங்களும் இன்றி இயற்கையாகவே எப்படி விரட்டுவது என்பது பற்றி பார்க்க போகிறோம். கோடை காலம்...

Health1 month ago

உடல் ஆரோக்கியம் என்று நினைத்து நாம் செய்யும் சில தவறுகள்.

உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து நண்பன் சொன்னான், வெளிநாட்டில் இருக்கும் மச்சான் சொன்னார், இவர் சொன்னார், அவர் சொன்னார் என்று நாம்...

Health1 month ago

கருப்பு கவுனி அரிசியின் சில ஆரோக்கிய நன்மைகள்.

வெள்ளையா இருக்கிறது தான் நல்லது என்றும் கருப்பாய் இருக்கிறதெல்லாம் கெட்டது என்றும் நாம் பழக்கப்பட்டுவிட்டோம், ஆனால் அது உண்மை இல்லை. இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பாரம்பரிய அரிசி...

Agriculture2 months ago

இரசாயன உரங்களால் மலடான மண்ணை வளமுள்ளதாக மாற்ற சில வழிகள்.

சனத்தொகை பெருகும் போது தேவைகளும் அதிகரிக்கின்றது, மக்களுக்கு தேவை அதிகரிக்கும் போது விளைச்சலும் அதிகமாகத்தான் தேவைப்படுகின்றது. எனவே நம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையை விட்டுவிட்டு விளைச்சலை அதிகமாக...