Connect with us

Beauty

ஏன் நமது உடல் பருமன் அதிகரிக்கிறது? இதற்கு என்னதான் காரணம்.

Published

on

நம்மில் பாதி பேருக்கு இருக்கும் முக்கியமான பிரச்சினை உடல் பருமன்தான். எல்லாரும் சாப்பிடுவதை தான் நானும் சாப்பிடுகிறேன் ஆனால் எனக்கு மாத்திரம் ஏன் இந்த உடல் எடை அதிகரிக்கிறது என்னும் கேள்வி நம்மில் பலருக்கு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நம்மைச் சுற்றி இருக்கும் பாதி நோய் பிபி, சுகர், பிசிஓடி, பேட்டிலிவர், கொலஸ்ட்ரால் போன்ற பல பிரச்சினைக்கு இந்த உடல் பருமன் தான் காரணமாக இருக்கிறது. ஒரு பக்கம் உடல் எடையை அதிகரிப்பதற்கு என்று பலதையும் சாப்பிடும் சிலர். இன்னொரு பக்கம் உடல் எடையை குறைப்பதற்கு என்று மூலிகை, மருந்து, கிளீனிக் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும் சிலர்.

வெற்றிகரமாக உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்பவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஏன் ஒருவரினால் உடல் எடையை சரிவர குறைக்க முடிவதில்லை என்றால், நமக்கு ஒரு அடிப்படையான கேள்விகளுக்கு விடை தெரிவதில்லை. ஏன் நமது உடல் எடை அதிகரிக்கின்றது எனும் கேள்விக்கு சரியான விடை கிடைத்தால் தான் நாம் வெற்றிகரமாக உடல் எடையை குறைக்க முடியும்.

இந்தப்பதிவில் ஒருவர் வெற்றிகரமாக உடல் எடையை குறைப்பது எப்படி என்பதை பார்க்கப்போகிறோம்.

உடற்பருமன் ஏற்படுவதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் உடல் பருமன் என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம். மிக இலகுவாக சொல்லப்போனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதனால் உடல்பருமன் ஏற்படுகிறது. இந்த தேவையற்ற கொழுப்புகள் உடலில் எங்கிருந்து வருகின்றது. சிலர் நினைத்துக் கொள்வார்கள் நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் கொழுப்பு மற்றும் எண்ணெய் போன்றவைகள் தான் நமது உடலில் கொழுப்பாக படிகிறது என்று. ஆனால் உண்மை என்னவென்றால் நமது உடலுக்கு தேவையான சக்தி மூன்று வகையான உணவுப் பொருட்களில் இருந்து கிடைக்கின்றது. மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச் சத்து போன்ற உணவுகள் நமது உடலுக்குள் சென்று சமிபாடடைந்து எரிசக்தியாக மாறி, நமது உடலுக்கு சக்தியைக் கொடுக்கின்றது ஆனால் எப்போது இந்த எரிசக்தி அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அதை நமது உடல் சேமித்து வைக்க முயற்சி செய்கின்றது. எனவே நமது உடலில் இந்த சக்தியை புரதம் ஆகவோ அல்லது மாவுச்சக்தியாகவும் சேமித்து வைப்பதற்கு இடம் இருக்காது. எனவே நீங்கள் எந்த சக்தியையும் மேலதிகமாக சாப்பிட்டாலோ அது கொழுப்பாக தான் நமது உடலில் சேமிக்கப்படுகிறது. இதைத்தான் நாம் உடல் எடை அதிகரித்தல் கொழுப்பு சேர்தல் என்று கூறுகிறோம்.

நாம் நினைப்பது போல் கொழுப்புச்சத்து மாத்திரம்தான் கொழுப்பாக நமது உடலில் சேருகிறது என்பது ஒரு தவறான கருத்தாகும். சரி இப்படிப் பார்த்தால் உடல் பருமன் உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடுபவர்கள், வேலைகள் எதுவும் செய்யாத சோம்பேறி என்றும், உடல் ஒல்லியாக இருப்பவர்கள் உணவு கட்டுப்பாடு உள்ளவர்கள் அல்லது அதிகம் உடலுழைப்பு செய்பவர்கள் என்றும் அர்த்தமாகிவிடாது. அப்படி என்றால் ஏன் உடல் எடை அதிகரிக்கின்றது?

பல காரணிகள் சேர்ந்துதான் ஒருவருக்கு உடல் எடையை அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்று தீர்மானிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால் மரபணுவும், மூளையில் சுரக்கும் பலவிதமான ஹார்மோன்கள் சேர்ந்து தான் ஒருவருக்கு எவ்வளவு பசி எடுக்க வேண்டும், எவ்வளவு கொழுப்பு அவர்களின் உடம்பில் சேமிக்கப்படுகிறது என்பதை தீர்மானிக்கின்றது, இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். இதனால்தான் சிலர் எவ்வளவு அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவே மாட்டார்கள்.

ஒருவருடைய மரபணு எப்படி இருந்தாலும் என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் அவருடைய உடல் எடையை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருப்பது உணவு முறை மட்டும்தான், நமது உணவு முறை சரியாக இருந்தால் போதும் உடல் எடையை சமமாக வைத்துக் கொள்ளலாம். நமது உணவு முறையில் என்னென்ன பிரச்சனை உள்ளது என்பதை இலகுவாக பார்க்கலாம்.

எடை அதிகரிப்பதற்கு முக்கியமாக இருப்பது கார்போஹைட்ரேட் அதாவது
மாவுச்சத்துக்கள். இந்த கார்போஹைட்ரேட் ஆனது இன்சுலினை வேகமாக அதிகரித்து இரண்டே மணி நேரத்தில் எரிசக்தி யாகவோ அல்லது கிலிடேஜன்ட் ஆக மாற்றிவிடும் மிச்சமிருக்கும் அனைத்தையும் கொழுப்பாக மாற்றி நமது திசுக்களில் சேமித்துவிடும். இதனால்தான் நமக்கு அடிக்கடி பசி எடுக்கின்றது. எனவே இதுதான் நமது உடல் எடையை மேலும் மோசமாக கொண்டு செல்கின்றது.

மாவுச்சத்துக்கள் உள்ள உணவுகள் அனைத்தும் ஒரே மாதிரியா என்றால் அப்படி இல்லை. காய்கறி போன்ற உணவில் அதிக நார்ச்சத்து அடங்கியுள்ளது எனவே இதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அடிக்கடி ஏற்படும் பசியைக் தவிர்த்துக் கொள்ளலாம்.

சில நேரங்களில் சில உணவில் விருப்பம் இல்லாமல் இருக்கும் ஆனால் சில சமூக தூண்டுதலுக்காக அந்த உணவை சாப்பிடுதல். சமூக மாற்றங்களினாலும் உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைகின்றது.

உடல் எடையை அதிகரிப்பதற்கு ஒரு காரணம் என்று சரியாக குறிப்பிட்டு சொல்ல முடியாது, மரபணு, உணவு முறை, உடற்பயிற்சி, வேலை, குடும்ப மற்றும் சமூக சூழ்நிலைகள் என இதுபோன்ற பல காரணங்கள் ஒன்று சேர்ந்துதான் ஒருவருக்கு உடல் பருமன் ஏற்படுவது பற்றி தீர்மானிக்கின்றது. ஆனால் இதில் நமது மரபணு உறுதியாக இருந்தால் அவர்கள் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது. ஆனால் மற்றவர்கள் நமது உணவு முறையை சரியாக எடுத்துக்கொண்டாலே உடல் எடை எனும் கொடிய நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Featured

Agriculture4 weeks ago

செடியை தாக்கும் மாவுப்பூச்சியை விரட்ட இயற்கை வழிகள்.

வீட்டுத் தோட்டத்தில் செடி, கொடிகளில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் மாவுப்பூச்சியை எந்த ரசாயனங்களும் இன்றி இயற்கையாகவே எப்படி விரட்டுவது என்பது பற்றி பார்க்க போகிறோம். கோடை காலம்...

Health1 month ago

உடல் ஆரோக்கியம் என்று நினைத்து நாம் செய்யும் சில தவறுகள்.

உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து நண்பன் சொன்னான், வெளிநாட்டில் இருக்கும் மச்சான் சொன்னார், இவர் சொன்னார், அவர் சொன்னார் என்று நாம்...

Health1 month ago

கருப்பு கவுனி அரிசியின் சில ஆரோக்கிய நன்மைகள்.

வெள்ளையா இருக்கிறது தான் நல்லது என்றும் கருப்பாய் இருக்கிறதெல்லாம் கெட்டது என்றும் நாம் பழக்கப்பட்டுவிட்டோம், ஆனால் அது உண்மை இல்லை. இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பாரம்பரிய அரிசி...

Agriculture2 months ago

இரசாயன உரங்களால் மலடான மண்ணை வளமுள்ளதாக மாற்ற சில வழிகள்.

சனத்தொகை பெருகும் போது தேவைகளும் அதிகரிக்கின்றது, மக்களுக்கு தேவை அதிகரிக்கும் போது விளைச்சலும் அதிகமாகத்தான் தேவைப்படுகின்றது. எனவே நம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையை விட்டுவிட்டு விளைச்சலை அதிகமாக...