Connect with us

Health

உடல் ஆரோக்கியம் என்று நினைத்து நாம் செய்யும் சில தவறுகள்.

Published

on

உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து நண்பன் சொன்னான், வெளிநாட்டில் இருக்கும் மச்சான் சொன்னார், இவர் சொன்னார், அவர் சொன்னார் என்று நாம் செய்யும் சில பழக்கவழக்கங்களில் ஒரு சிலது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

நமது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய நாம் அதை ஆரோக்கியம் என்று நினைக்கக் கூடிய சில பழக்கவழக்கங்கள் பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

சிலர் யாரோ ஒருவர் சொன்னார் என்று பல ஊட்டச் சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இது ஒரு ஆரோக்கியமான விடயமே இல்லை. ஒரு மருத்துவரின் ஆலோசனையுடன் நமது உடலுக்கு எவ்வளவு ஊட்டச்சத்து வேண்டும், எவ்வளவோ விற்றமின் தேவை என்று தெரிந்து கொண்டு எடுத்துக்கொள்வது சிறந்தது.

வாயை நாம் தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறோம் என்ற பெயரில் ஒவ்வொரு முறையும் ஏதேனும் சாப்பிட்டதற்கு பின்பு பல் துலக்குவார்கள், சிலர் இதை அன்றாட பழக்கமாகவே வைத்துக் கொள்வார்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக பற்பசை கொண்டு பற்களை துலக்குவதால் பற்களின் ஆரோக்கியம் மோசமான நிலைக்கு தள்ளப்படும். எனவே சாப்பிட்டதன் பின்னர் பற்களை சாதாரண தண்ணீரைக் கொண்டு கொப்பளித்தாலே போதுமானது.

வெயில் அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் வெயிலின் உஷ்ணத்தை சமாளித்து, சருமத்தை பாதுகாத்து கொள்வதற்கு அழகு நிபுணர்களால் சன் ஸ்கிரீன்கள் பரிந்துரை செய்யப்படுகின்றது. இந்த சன் ஸ்கிரீன்களை வெயில் காலத்தில் தொடர்ச்சியாக பயன்படுத்தும் நிலையில் நமது உடலுக்கு சூரியனிலிருந்து கிடைக்கும் விட்டமின் டி ஆனது பெரிதும் கிடைப்பதில்லை. இந்த விட்டமின் டி ஆனது நமது உடலில் ஏற்படும் பல நோய்களில் இருந்து பாதுகாக்க மிகவும் அவசியமாக இருக்கின்றது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை நன்றாக வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே நமது உடலில் குறைந்தபட்சம் சிறிது நேரமாவது சூரிய ஒளி சருமத்தில் படுவது மிகவும் அவசியமாக இருக்கின்றது.

சிலர் எனக்கு சிக்ஸ்பேக் வேண்டுமென்று அதிகமாக உடற்பயிற்சி செய்வார்கள் ஆனால் அப்படி தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்வது ஒருவகையான ஆபத்தை கூட ஏற்படுத்தும். ரத்த அழுத்தம், உடல் பருமன் என சில சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே உடற்பயிற்சியை அளவாக செய்து இதய ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

சிலர் சொல்வார்கள் நிறைய தண்ணீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது அதிலும் எட்டு டம்ளருக்கு மேல் நீர் அருந்த வேண்டும் என்றும். அதுமட்டுமில்லாமல் தாகம் எடுத்தால் அதிகளவிலேயே நீர் அருந் வேண்டும். ஆனால் இப்படி நீரை அளவுக்கு அதிகமாக அருந்தும்போது அது நமது உடலுக்கு தீங்கை விளைவிக்கும், இருந்தாலும் தாகம் எடுக்கும்போது மாத்திரமே நீரை அருந்துவது சிறந்தது.

அளவுக்கு அதிகமாக நீரை அருந்துவதால் உப்புசம், உடல் எடை அதிகரிக்கும், செரிமானம் மற்றும் சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிலும் மினரல் வாட்டர் தான் நல்லது குடிப்போம் ஆனால் இதுபோன்று பாட்டிலில் அடைக்கப்பட்டு உள்ள நீரை தொடர்ச்சியாக அருந்துவதால் உடல் ஆரோக்கியம்தான் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு. ஏனென்றால் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரில் புளோரைட் இருக்காது இதனால் புளோரைட் குறைபாடு ஏற்பட்டு பற்சொத்தை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவே வீட்டிலேயே சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான நீரை அருந்துவது சிறந்தது.

Featured

Agriculture4 weeks ago

செடியை தாக்கும் மாவுப்பூச்சியை விரட்ட இயற்கை வழிகள்.

வீட்டுத் தோட்டத்தில் செடி, கொடிகளில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் மாவுப்பூச்சியை எந்த ரசாயனங்களும் இன்றி இயற்கையாகவே எப்படி விரட்டுவது என்பது பற்றி பார்க்க போகிறோம். கோடை காலம்...

Health1 month ago

உடல் ஆரோக்கியம் என்று நினைத்து நாம் செய்யும் சில தவறுகள்.

உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து நண்பன் சொன்னான், வெளிநாட்டில் இருக்கும் மச்சான் சொன்னார், இவர் சொன்னார், அவர் சொன்னார் என்று நாம்...

Health1 month ago

கருப்பு கவுனி அரிசியின் சில ஆரோக்கிய நன்மைகள்.

வெள்ளையா இருக்கிறது தான் நல்லது என்றும் கருப்பாய் இருக்கிறதெல்லாம் கெட்டது என்றும் நாம் பழக்கப்பட்டுவிட்டோம், ஆனால் அது உண்மை இல்லை. இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பாரம்பரிய அரிசி...

Agriculture2 months ago

இரசாயன உரங்களால் மலடான மண்ணை வளமுள்ளதாக மாற்ற சில வழிகள்.

சனத்தொகை பெருகும் போது தேவைகளும் அதிகரிக்கின்றது, மக்களுக்கு தேவை அதிகரிக்கும் போது விளைச்சலும் அதிகமாகத்தான் தேவைப்படுகின்றது. எனவே நம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையை விட்டுவிட்டு விளைச்சலை அதிகமாக...