Connect with us

Technology

விமானம் பற்றி அடிப்படையான சில தொழில்நுட்பங்கள்.

Published

on

விமானம் எப்படி பறக்கிறது என்பதை நினைக்கும் போதே மனதுக்குள் வருவது “பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசனின் பாடல் வரிதான். மனித நாகரீகம் தோன்றிய நாட்களிலிருந்து பறவைகள் போலவே பறக்க வேண்டும் என்ற நிறைவேறாத ஆசைகளுடன் இருந்தான். இதை எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று பலர் பலவிதமான முயற்சிகளை செய்தும் அவைகள் எதுவும் கைகூடவில்லை. இறுதியாக இருவர்களின் முயற்சியில் 1903ம் ஆண்டு வெற்றிகரமாக முதல் முதலில் பறக்கும் விமானம் ரைட் சகோதரர்களால் உருவாக்கப்பட்டது.

ரைட் பிரதர்ஸ் குடும்ப அங்கத்தவர்கள் மொத்தம் நான்கு பேர் அதில் இரண்டாவதாக பிறந்த ஆர்வில் ரைட் மற்றும் அவரது அண்ணன் வில்பர் ரைட்ஸ் என்பவர்களே. வில்பர் ரைட் பிறந்தது 1867ம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதியாகும், ஆர்வில் பிறந்தது 1871ம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி ஆகும் மேலும் இவர் 1948ம் ஆண்டு இறந்துவிட்டார். ஆர்வில் தனது 25வது வயதிலேயே உலகில் முதல் பறக்கும் விமானத்தை வடிவமைத்தார், மேலும் அதை அவருடைய 32து வயதிலேயே வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்தார்.

அன்று அவர்கள் கண்டுபிடித்த விமானத்துக்கு இன்று உலகளவில் 40000 விமான நிலையங்கள் உருவாகிவிட்டன. அதில் 1200 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது. ரைட் பிரதர்ஸ் பிறந்த நாடான அமெரிக்காவில்தான் அதிக அளவில் விமானநிலையங்கள் இருக்கின்றது. சாதாரணமாக ஒரு விமானத்திற்கு மூன்று அல்லது நான்கு விமானிகளும் அதே போன்று விமான பணிப்பெண்களாக 30 தொடக்கம் 40 பேரும் இருப்பார்கள். இதை கடந்து ஒரு விமானத்தில் 250 தொடக்கம் 525 பயணிகள் வரை பயணிக்க முடியும். இவர்கள் விமானத்தைக் கண்டுபிடித்த நாட்களில் இருந்து இன்று வரை ஒரு லட்சத்தி ஐம்பது ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்கள் உருவாகிவிட்டது, அதிலும் மிகச்சிறந்த விமானமாக ஏர்பஸ் A350 என்று கருதப்படுகின்றது.

ரைட் சகோதரர்களால் உருவாக்கப்பட்ட முதல் விமானமானது 12 செக்கன்கள் பயணம் செய்து 120 அடிகள் கடந்தது. அன்று குறைவான நேரம் பறந்த விமானம் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் பல மணி நேரங்கள் பறக்கின்றது. சரி இப்போது விமானம் எந்தத் தொழில்நுட்பத்தில் வானில் பறக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

விமானங்கள் பறப்பதற்கு முக்கியமாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் காற்றழுத்தமாகும். விமானம் தரையில் வேகமாக ஓடும் போது விமானத்தின் இறக்கைகளில் உள்ள மடிப்பை கீழே நகர்த்துவதால், இறக்கையில் மோதும் காற்று கீழே தள்ளுகின்றது. இங்கே நியூட்டனின் மூன்றாம் விதி வேலை செய்கின்றது, இதனால் கீழே உள்ள காற்றழுத்தம் காரணமாக விமானம் மேலெழும்பி பறக்கச் செய்ய உதவுகின்றது.

இவ்வாறு மேலே சென்ற விமானம் சீராகவும், நேர்த்தியாகவும் பறக்க செய்ய அதனுடைய எஞ்சின்கள் உதவியாக இருக்கின்றது. தற்காலங்களில் அதிகமான விமானங்களில் பயன்படுத்துவது ‘டர்போ விசிறி’ என்ஜின்கள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இது அதிகப்படியான ‘த்ரஸ்ட்’ என்று அழைக்கப்படும் ஊந்து சக்தியை வெளிப்படுத்தி விமானத்தை வேகமாகவும் நேராகவும் பறக்க உதவி செய்கிறது.

விமானம் குறிப்பிட்ட உயரத்தை அடைந்த உடன் சிறகுகளில் உள்ள மடிப்புக்கள் இயல்புநிலைக்கு கொண்டுவரப்பட்டு நேராக பறக்கத் தொடங்கிவிடும். இப்படி நேராக பறந்துகொண்டிருக்கும் விமானத்தின் உயரத்தை மேலும் அதிகரிக்க விமானத்தின் வால் பகுதியில் உள்ள ‘எலிவேட்டர்’ சிறகை மேலே உயர்த்தினாள் போதுமானது.

விமானத்தை திசைதிருப்பும் அமைப்பானது வால் பகுதியில் உள்ள செங்குத்தாக இருக்கும் சிறகுதான். இந்த சிறகை திருப்பினால் விமானம் திரும்பும். மேலும் விமானம் தரை இறங்குவதற்கு வால் பகுதியில் உள்ள ‘எலிவேட்டரை’ கீழே இறக்கினால் விமானம் கீழே இறங்கும்.

இறுதியாக விமானத்திற்கு ‘பிரேக்’ இருக்குமா என்று நம்மில் பலருக்கு சந்தேகம் உண்டு. உண்மையிலேயே விமானத்துக்கு இரண்டு வகையான ‘பிரேக்’ அமைப்புகள் உள்ளது. ஒன்று வால் பகுதியில் இருக்கும் ‘எலிவேட்டர்’, இரண்டாவது மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களைப் போலவே விமானத்தின் சக்கரத்தில் இருக்கின்றது.

விமானத்தின் சக்கரத்தில் 3 தொடக்கம் 4 டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் விமானம் தரையிறங்கும் போது 600000 கிலோவுக்கு அதிகமான அழுத்தத்தை அதனுடைய சக்கரத்துக்கு கொடுக்கின்றது இந்த சமயத்தில் விமானத்தின் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள பிரேக்குகளை திடீரென அழுத்துவதால் டயர் வெடித்து விமானத்திற்கு ஆபத்து ஏற்படும். எனவே விமானிகள் பொறுமையாகவே விமானத்தின் சக்கரத்திற்கு அழுத்தங்களை கொடுத்து நிறுத்துகிறார்கள்.

இவ்வளவு உயரத்தில் பறக்கும் விமானம் ஆனது விண்வெளியை தொட்டுவிட முடியுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு ஏற்படும். விமானம் பறப்பதற்கான அடிப்படை பற்றி தெரிந்து கொண்டால் இதுபோன்ற கோள்விகள் உங்கள் மனதில் தோன்றாது. மேலே கூறியது போல் விமானங்களின் இறக்கையில் ஏற்படும் காற்றழுத்தம் காரணமாகவே விமானம் மேலே எழும்புகிறது எனவே விமானம் தொடர்ச்சியாக பறக்க காற்று மிகவும் அவசியமாக இருக்கின்றது. எனவே விமானமானது பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்துக்கு செல்லும்போதோ காற்றின் அடர்த்தி குறைந்து பறக்கும் திறனை இழந்துவிடும். மனிதன் சுவாசிப்பதற்கு காற்று எவ்வளவு அவசியமோ அதே போன்றுதான் விமானங்களுக்கு காற்று அவசியமாக இருக்கின்றது இதனாலே விமானங்கள் விண்வெளியை தொட்டுவிட முயற்சிப்பதில்லை.

விமானம் பறக்கும்போது மனிதக்கழிவுகள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது பற்றி நம்மில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். சிலர் நினைத்திருப்பார்கள் விமானங்கள் பறக்கும் போது மனிதக்கழிவுகளை பூமியில் கொட்டிவிடுகிறது என்று, மாறாக விமானங்களில் மனிதக் கழிவுகள் நம் வீட்டில் இருக்கும் கழிவுகளை சேர்க்கும் தொட்டியை போன்று விமானத்திலும் சேர்க்கப்படுகின்றது. பின்னர் விமானம் தரையிறங்கிய பின்னர் அதற்கென்று ஒரு பிரத்தியோக இயந்திரத்தைக் கொண்டு வெளியேற்றி சுத்தம் செய்யப்படுகின்றன.

விமானத்தில் பல வகையான தொழில்நுட்பம் இருந்தாலும் விமானம் பறப்பதற்கு அடிப்படையான ஒரு சில தொழில்நுட்பத்தையே இந்த கட்டுரையில் காட்டப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Featured

Agriculture4 weeks ago

செடியை தாக்கும் மாவுப்பூச்சியை விரட்ட இயற்கை வழிகள்.

வீட்டுத் தோட்டத்தில் செடி, கொடிகளில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் மாவுப்பூச்சியை எந்த ரசாயனங்களும் இன்றி இயற்கையாகவே எப்படி விரட்டுவது என்பது பற்றி பார்க்க போகிறோம். கோடை காலம்...

Health1 month ago

உடல் ஆரோக்கியம் என்று நினைத்து நாம் செய்யும் சில தவறுகள்.

உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து நண்பன் சொன்னான், வெளிநாட்டில் இருக்கும் மச்சான் சொன்னார், இவர் சொன்னார், அவர் சொன்னார் என்று நாம்...

Health1 month ago

கருப்பு கவுனி அரிசியின் சில ஆரோக்கிய நன்மைகள்.

வெள்ளையா இருக்கிறது தான் நல்லது என்றும் கருப்பாய் இருக்கிறதெல்லாம் கெட்டது என்றும் நாம் பழக்கப்பட்டுவிட்டோம், ஆனால் அது உண்மை இல்லை. இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பாரம்பரிய அரிசி...

Agriculture2 months ago

இரசாயன உரங்களால் மலடான மண்ணை வளமுள்ளதாக மாற்ற சில வழிகள்.

சனத்தொகை பெருகும் போது தேவைகளும் அதிகரிக்கின்றது, மக்களுக்கு தேவை அதிகரிக்கும் போது விளைச்சலும் அதிகமாகத்தான் தேவைப்படுகின்றது. எனவே நம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையை விட்டுவிட்டு விளைச்சலை அதிகமாக...