Connect with us

Agriculture

மிளகாய் செடி வளர்ப்பு மற்றும் பூச்சி தாக்குதல் பற்றிய சில தகவல்கள்.

Published

on

புதிதாக ஒரு தோட்டம் ஆரம்பிப்பவர்கள் கேரட், கோஸ் போன்ற செடிகளை வளர்ப்பதில் தான் மிகவும் சவாலாக இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் ஆரம்பித்து பார்த்தால்தான் தெரியும் தோட்டத்தில் மிகவும் சவாலாக இருப்பது மிளகாய் செடி வளர்ப்புத்தான்.

மிளகாய் செடி வளர்க்கும் முறை

நாம் வீட்டு சமையலுக்காக வாங்கிவரும் காய்ந்த மிளகாயில் ஒரு பெரிய மிளகாயின் விதைகளை எடுத்து மண் கலவையில் போட்டு ஒரு விரலால் லேசாக உள்ளே அழுத்தி தொடர்ச்சியாக நீர் தெளித்து வர 7 நாட்களில் நாற்று வர ஆரம்பித்துவிடும். 35 தொடக்கம் 40 நாட்களில் வளர்ந்த நாத்தை எடுத்து நல்ல சத்துள்ள மண் கலவையில் நடவு செய்ய வேண்டும்.

மாடித்தோட்டத்தில் மிளகாய் செடி வளர்க்க விரும்புபவர்கள் தேங்கா நாறு, மாட்டெரு, வேப்பம் புண்ணாக்கு சிறிது கலந்து மண் கலவையை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.மிளகாய் செடி வளர்ப்பதற்காக தயாரிக்கப்படும் மன்னனது பொறுப்பு தன்மையுடன் இருக்க வேண்டும் அதாவது மண்ணில் நீர் தேங்கி நிற்காத பாரு வேகமாகவே வடிந்து செல்லக் கூடியதாக இருக்க வேண்டும். நாம் மண் கலவை தயாரிக்கும் தேங்காய் நாரை சேர்த்தாலே போதுமானது. விதைகளை போடும் மண்ணானது இதேபோன்று தயார் படுத்திக் கொண்டால் நாற்றுக்களை வேருடன் பிடுங்கி எடுக்க மிக சுலபமாகவே இருக்கும்.

நாற்றுக்களை நடவுக்கு தெரிவு செய்யும் போது ஆரோக்கியமானதும் உறுதியானதுமான நாற்றுகளை தெரிவு செய்யவேண்டும். இரண்டு நாட்களுக்கான இடைவெளி 2 அடி இருப்பது மிக சிறந்ததாகும். நாற்றுக்களை பிரித்து நடவு செய்த உடனே பூவலியைக் கொண்டு நீர் தெளிப்பது அவசியமாகும்.

நடவு நட்ட 20 நாட்களில் மீன் அமினோ அமிலம் தெளிக்க வேண்டும். மிளகாய் செடியானது 50 தொடக்கம் 60 நாட்களில் மொட்டு விட ஆரம்பித்து விடும். மொட்டு வைத்து பூ விட ஆரம்பிக்கும் போது பெருங்காய கரைசலை தெளிக்கவேண்டும் இவ்வாறு செய்வதால் பூக்கள் உதிர்ந்து கீழே விழுவதை தவித்துக் கொள்ளலாம்.

மிளகாய் செடியில் காய் காய்க்க ஆரம்பிக்கும் போது அடி உரமாக கடலை புண்ணாக்கு இடவேண்டும், இப்படி செய்வதால் ஒரு செடியில் நிறைய காய் காய்க்க ஆரம்பிக்கும் மேலும் காய்கள் அல்ல திரட்சியாகவும் வரும்

மிளகாய் செடியை அதிகம் தாக்கும் இலைசுருட்டல்

மிளகாய்ச் செடியில் இலை சுருட்டல் நோய் வந்துவிட்டால் சரியாக விளைச்சல் எடுக்க முடியாமல் போய்விடும். ஆரம்பத்தில் மிளகாய் செடி வளர்க்கும் போது நல்ல செழிப்பாக வளரும் சிறிது நாட்களில் இலை சுருள ஆரம்பித்துவிடும். மிளகாய்ச் செடியில் அனைத்து இலைகளும் சுருண்டு உயிரில்லாமல் போனதும் சிலர் அதை பிடிங்கி எறிந்துவிடுவார்கள்.

இந்த இலை சுருட்டல் பிரச்சினையை சில இயற்கை தீர்வை பார்ப்பதற்கு முன் இந்நோய் வருவதற்கு என்ன காரணம் என்று முதலில் பார்ப்போம்.

இலை சுருட்டல் ஏற்படுவதற்கு பொதுவான ஒரு காரணம் மாவு பூச்சிகளால் தான். மிளகாய்ச் செடியின் இலைகளின் கீழ் ‘பவுடர்’ போன்று மாவு பூச்சி தாக்குதல் இருக்கும். இந்த மாவுப்பூச்சியானது ஒருவகையான வைரஸ் ஒன்றை பரப்பும். இதன் தாக்குதல் தான் இந்த இலை சுருட்டல் காரணமாக இருக்கின்றது.

இலை சுருட்டல் சரி செய்ய மீன் அமிலம் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கின்றது. இலை சுருட்டி உயிர் இல்லை என்று நினைத்து பிடிங்கி வீசும் செடிகளை கூட இந்த மீன் அமிலமானது உயிர்ப்பிக்கும் வல்லமை கொண்டது.

மீன் அமிலத்தை எப்படி பயன்படுத்துவது

நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் செடிகளுக்கு தொடர்ந்து ஒருவாரத்திற்கு மீன் அமிலத்தை தண்டுகள் நனையுமாறு தெளிக்க வேண்டும். மீன் அமிலம் தெளிக்கும் போது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது செடியின் தண்டுகளை நனைத்து, அதன் வழியாக வேருக்கு செல்ல வேண்டும் என்பதுதான். மீன் அமிலம் தெளித்து ஒரு வாரத்திலேயே நல்ல மாற்றத்தை காணலாம்.

அடுத்ததாக மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த ஒரு இயற்கை வழி பற்றி பார்ப்போம். ஒரு லிட்டர் நீரில் 2 டீஸ்பூன் மஞ்சளை கலந்து அதனுடன் இரண்டு பல் பூண்டையும் நறுக்கி போட்டு அடுப்பில் கொதிக்கவிட வேண்டும். பின்னர் இதை நன்றாக ஆற வைத்து வடிகட்டி எடுத்தால் பூச்சிவிரட்டி தயாராகிவிடும். இதை இலைகளுக்கு அடியில் தெளித்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

மேலும் சாதாரண நீரை மாவுப்பூச்சி இருக்கும் பகுதிகளில் வேகமாக தெளித்து வந்தாலும் நாளடைவில் இந்த மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த முடியும். மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை முயற்சி செய்து பலனைப் பெறுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Featured

Agriculture4 weeks ago

செடியை தாக்கும் மாவுப்பூச்சியை விரட்ட இயற்கை வழிகள்.

வீட்டுத் தோட்டத்தில் செடி, கொடிகளில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் மாவுப்பூச்சியை எந்த ரசாயனங்களும் இன்றி இயற்கையாகவே எப்படி விரட்டுவது என்பது பற்றி பார்க்க போகிறோம். கோடை காலம்...

Health1 month ago

உடல் ஆரோக்கியம் என்று நினைத்து நாம் செய்யும் சில தவறுகள்.

உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து நண்பன் சொன்னான், வெளிநாட்டில் இருக்கும் மச்சான் சொன்னார், இவர் சொன்னார், அவர் சொன்னார் என்று நாம்...

Health1 month ago

கருப்பு கவுனி அரிசியின் சில ஆரோக்கிய நன்மைகள்.

வெள்ளையா இருக்கிறது தான் நல்லது என்றும் கருப்பாய் இருக்கிறதெல்லாம் கெட்டது என்றும் நாம் பழக்கப்பட்டுவிட்டோம், ஆனால் அது உண்மை இல்லை. இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பாரம்பரிய அரிசி...

Agriculture2 months ago

இரசாயன உரங்களால் மலடான மண்ணை வளமுள்ளதாக மாற்ற சில வழிகள்.

சனத்தொகை பெருகும் போது தேவைகளும் அதிகரிக்கின்றது, மக்களுக்கு தேவை அதிகரிக்கும் போது விளைச்சலும் அதிகமாகத்தான் தேவைப்படுகின்றது. எனவே நம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையை விட்டுவிட்டு விளைச்சலை அதிகமாக...