Connect with us

Technology

கேஸ் சிலிண்டர் பற்றி தெரியாத சில நுட்பங்கள்.

Published

on

விறகடுப்பை பயன்படுத்தும் காலம் போய் இப்போதெல்லாம் எல்.பி.ஜி கேஸ் பயன்படுத்துவதுதான் அதிகமாகிவிட்டது. சொல்லப்போனால் குடிசைகளிலும் இதை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

கேஸ் அடுப்புகளை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினைதான் சமைத்துக் கொண்டு இருக்கும்போது கேஸ் முடிவது, இந்த சந்தர்ப்பங்களில் கூடுதலாக இன்னும் ஒரு சிலிண்டர் இருந்தால் பிரச்சினையில்லை. அதுவே மேலதிக சிலிண்டர் இல்லாத சந்தர்ப்பங்களில் உணவுகளை கடைகளிலிருந்துதான் வாங்கி சாப்பிட வேண்டியிருக்கும்.

சிலிண்டரில் உள்ள கேஸ் எப்போதும் முடியப்போகிறது என்பது முன்னாடியே தெரிந்தால் இதுபோன்ற அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ளலாம். இதற்காக சந்தையில் எரிவாயு அளவு மீட்டர்கள் இருக்கின்றது ஆனால் அதை விலை கொடுத்து வாங்க எல்லோரும் விரும்புவது இல்லை, சொல்லப் போனால் இப்படி ஒரு விடயம் இருப்பது இப்போதுதான் சிலருக்கு தெரியும். ஆனால் செலவே இல்லாமல் சிலிண்டரில் உள்ள எரிவாயுவின் (கேஸ்) அளவை எப்படி அறிந்து கொள்வது எப்படி என்று விரிவாக.

சாதாரணமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸில் 60 வீதம் பியூட்டேன் கேஸ் மற்றும் 40 வீதம் ப்ரோபைல் கேஸைய்யும் பயன்படுத்தித்தான் தயாரித்து இருப்பார்கள். ஆனால் சிலிண்டரில் எல்.பி.ஜி எரிவாயுவானது திரவ வடிவிலேயே இருக்கும். சிலிண்டரில் உள்ள திரவ எரிவாயுவானது -42°C டிகிரிலேயே ஆவியாகிவிடும் ஆனால் சிலிண்டரில் உயர் அழுத்தத்தில் இந்த எரிவாயு அடைக்கப்படுவதால் அறை வெப்பநிலையிலும் இந்த எரிவாயு ஆவியாகாது.

ஒரு முழுமையாக நிரப்பப்பட்ட கேஸ் சிலிண்டரில் 80 தொடக்கம் 85 வீதம் எல்.பி.ஜி கேஸ் ஆனது திரவ வடிவிலேயே இருக்கும், மிகுதி இடங்களில் எல்.பி.ஜி வாயு வடிவத்திலேயே இருக்கும். எனவே நாம் கேஸ் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது திரவ வடிவில் உள்ள எல்.பி.ஜியானது ஆவியாகி அடுப்பு எரிய பயன்படுகிறது. எனவே பயன்படுத்தும் அளவிற்கு சிலிண்டரில் உள்ள திரவ வடிவிலான எல்.பி.ஜி கேஸ் குறைந்து கொண்டே செல்லும்.

சிலிண்டரில் எந்த அளவிற்கு எல்.பி.ஜி திரவம் உள்ளது என்று அறிந்து கொள்வது எப்படி?

ஒரு டம்ளரில் நீரை எடுத்து சிலிண்டரின் மேல்ப் பகுதியில் இருந்து கீழ்ப்பகுதி வரை நனைக்க வேண்டும், பின்னர் 3 – 5 நிமிடங்கள் கழித்து பார்த்தால், எல்.பி.ஜி வாயு இருக்கும் பகுதிகளில் இருந்த நீர் ஆவியாகியம், எல்பிஜி திரவ வடிவில் இருந்த பகுதிகளில் நீர் ஓரளவு ஆவியாகி இருப்பதையும் அவதானிக்க முடியும். என்னவே இதைக்கொண்டு சிலிண்டரில் எவ்வளவு எல்.பி.ஜி திரவம் இருக்கும் அளவை நேரடியாக அறிந்து கொள்ள முடியும்.

அடுத்ததாக சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்து கொள்வது?

நம்மில் பெரும்பாலானோர் நினைத்திருக்கிறார்கள் புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு பார்ப்பதற்கு புதிதாக காட்சியளிக்கும் சிலிண்டர்களே புதியது என்று, ஆனால் பெரும்பாலான சமயங்களில் பழைய சிலிண்டர்களுக்கு வண்ணம் தீட்டி வருகின்றது.இதற்க்கு தீர்வாக சிலிண்டரில் காலாவதி திகதியை வைத்தே உண்மையை அறிந்து கொள்ள முடியும். இதை சொல்லும் போது சிலிண்டருக்கும் காலாவதி திகதி இருக்கின்றதா! இன்று நம்மில் பலருக்கு கேள்விகள் இருக்கும் ஆனால் உண்மையிலேயே சிலிண்டருக்கு காலாவதி திகதி குறிப்பிடப்பட்டுள்ளது அதைப்பற்றி விரிவாக.

நாம் வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டர்களில் A26 அல்லது B26, C26, D26 என்று குறிப்பிட்டிருப்பதை நாம் அவதானித்து இருப்போம் இதுதான் அந்த சிலிண்டருக்குரிய காலாவதி திகதி, இதை எப்படி திகதி அடிப்படையில் கணக்கிட்டு கொள்வது என்று பார்ப்போம். ஒரு வருடத்தை A,B,C,D என 3 மாத இடைவெளியில் நான்காக பிரித்திருப்பார்கள், கூடவே 26 என்பது 2026 எனும் வருடத்தை குறிக்கின்றது. எனவே சிலிண்டர் வாங்கும் போது இந்த கணக்கீட்டை வைத்து நீங்கள் வாங்கும் சிலிண்டருக்கு திகதியே அது கொள்ள முடியும்.

சிலிண்டர் வெடிப்பதற்கு பொதுவான காரணம்.

நாம் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டரில் ரெகுலேட்டர் அல்லது சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் குழாயில் கசிவு ஏதும் இருந்தால் எல்.பி.ஜி கேஸ் ஆனது சமையலறையிலுள்ள காற்றில் கலக்கின்றது. இதன்போது சூரிய வெப்பம் அதிகமான பகுதிகளில் திடீரென தீப்பற்ற கூடியதாக இருக்கின்றது அல்லது மேலே சொன்னது போல் அறைகளின் காற்றில் நிரம்பியிருக்கும் கேஸானது அறைகளில் உள்ள ஏதேனும் மின்சாதனங்களை ‘ஆன்’ செய்யும்போது அதில் இருந்து வரும் சிறிய தீ போரினால் அறைகள் முழுவதும் தீ பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே நம் தற்பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிலிண்டர் இருக்கும் அறையில் ஏதேனும் கேஸ் வாடை வருமாயின் அறையின் ஜன்னல் கதவுகளை திறந்து விடவேண்டும். மேலும் எல்.பி.ஜி கேஸ் வாயுவானது எளிதில் ஆவியாகி செல்லக்கூடியதல்ல, இது அவைகளில் சில நேரங்கள் வரை இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்தப்பதிவில் நாம் வீட்டில் உபயோகிக்கும் கேஸ் சிலிண்டர் பற்றி சில அடிப்படையான, உபயோகம் உள்ள தகவல்களை பார்த்தோம். இத் தகவல் பிடித்திருந்தால் உங்கள் உறவுகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், நன்றி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Featured

Agriculture4 weeks ago

செடியை தாக்கும் மாவுப்பூச்சியை விரட்ட இயற்கை வழிகள்.

வீட்டுத் தோட்டத்தில் செடி, கொடிகளில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் மாவுப்பூச்சியை எந்த ரசாயனங்களும் இன்றி இயற்கையாகவே எப்படி விரட்டுவது என்பது பற்றி பார்க்க போகிறோம். கோடை காலம்...

Health1 month ago

உடல் ஆரோக்கியம் என்று நினைத்து நாம் செய்யும் சில தவறுகள்.

உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து நண்பன் சொன்னான், வெளிநாட்டில் இருக்கும் மச்சான் சொன்னார், இவர் சொன்னார், அவர் சொன்னார் என்று நாம்...

Health1 month ago

கருப்பு கவுனி அரிசியின் சில ஆரோக்கிய நன்மைகள்.

வெள்ளையா இருக்கிறது தான் நல்லது என்றும் கருப்பாய் இருக்கிறதெல்லாம் கெட்டது என்றும் நாம் பழக்கப்பட்டுவிட்டோம், ஆனால் அது உண்மை இல்லை. இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பாரம்பரிய அரிசி...

Agriculture2 months ago

இரசாயன உரங்களால் மலடான மண்ணை வளமுள்ளதாக மாற்ற சில வழிகள்.

சனத்தொகை பெருகும் போது தேவைகளும் அதிகரிக்கின்றது, மக்களுக்கு தேவை அதிகரிக்கும் போது விளைச்சலும் அதிகமாகத்தான் தேவைப்படுகின்றது. எனவே நம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையை விட்டுவிட்டு விளைச்சலை அதிகமாக...