Connect with us

Livestock

கோழிப் பண்ணையில் நஷ்டம் ஏற்பட சில காரணம், அதை தடுக்க சில வழிகள்

Published

on

கோழிப் பண்ணையில் நோய்த் தாக்கத்திற்கு அடுத்ததாக நஷ்டத்தை உண்டு பண்ணுவது நாய், கீரி, பருந்து, பாம்பு போன்ற விலங்குகளினால்தான். குறிப்பாக கோழிப்பண்ணைகளில் தொல்லை கொடுக்கக் கூடிய ஒரு உயிரினமாக பாம்பு இருக்கின்றது. இந்த கட்டுரையில் கோழி பண்ணையில் பாம்புகள் வருவதற்கான காரணம் என்ன? அவற்றை எப்படி தடுக்கலாம் என்ற முறைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பாம்புகள் வருவதற்கான காரணம் என்ன?

கோழிப் பண்ணையில் பாம்பு வருவதற்கான முதல் காரணம் கோழிகளின் எச்சம் தான். கோழிகளின் எச்சம் ஆனது பாம்புகளுக்கு பிடிக்கும் எனவே இந்த எச்சத்தில் இருந்து வரும் வாசனையால் தான் பாம்புகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

அடுத்த காரணமாக கோழிகளின் முட்டை பாம்புக்கு மிகவும் பிடித்தமான உணவு என்பது நம்மில் பலர் அறிந்திருப்போம். எனவே அதனால்தான் அடைகாக்கும் கோழிகள் இருக்கின்ற இடத்துக்கு அந்த முட்டைகளை சாப்பிடுவதற்காக வரும்.

பண்ணைக்கு அருகில் பாம்புகள் வசிப்பதற்கு உகந்த இடங்கள் அமைந்திருப்பது. உதாரணமாக கற்குவியல்கள், புதர்கள், மரப் பொந்துகள் போன்றவைகள்.

பண்ணைகளில் எலித் தொல்லை அதிகமாக இருக்கும்போது அந்த எலிகளை பிடிப்பதற்காக பண்ணையை நோக்கி பாம்புகள் வர வாய்ப்புண்டு.

இனி பாம்புகள் நமது கோழிப்பண்ணையில் வராமல் இருக்க முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்

தினமும் நமது கோழி பண்ணையில் உள்ள எச்சங்களை வாசம் ஏதுவும் வராதவாறு சுத்தம் செய்தல், அத்துடன் பண்ணையை சுற்றி சிறிய வலைகளை பாம்பு உள்ளே வராதவாறு கட்டி வைத்தல்.

கின்னிக்கோழிகளை வளர்த்தல்:- கின்னிக்கோழியானது ஏதாவது புதுவிதமான உயிரினங்களை கண்டால் சத்தமிடும் சுபாவம் கொண்டது, எனவே கின்னிக்கோழி வளர்ப்பதன் மூலம் இந்த பாம்பு வருவதை அறிந்துகொள்ளலாம்.

நாய்களை வளர்ப்பதன் மூலம் உள்ளே வரும் பாம்பு வேறு எங்கும் நகராமல் அதைப் பிடித்து அதை கொல்லக்கூடிய தன்மை கொண்டது எனவே நாய்களை கூட வளர்க்க முடியும்.

வான்கோழிக்கு உணவுத் தேவை அதிகம் இருப்பதனால்பூச்சி போன்ற சிறிய உயிரினங்களை சாப்பிடக்கூடியது, எனவே பண்ணைகள் வரும் சிறிய பாம்புகளையும் பிடித்து உண்ணக்கூடியவை.

மேலே குறிப்பிடப்பட்ட குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் கோழி பண்ணையில் பாம்புகள் வராமல் தடுத்துக் கொள்ளுங்கள், இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Featured

Agriculture4 weeks ago

செடியை தாக்கும் மாவுப்பூச்சியை விரட்ட இயற்கை வழிகள்.

வீட்டுத் தோட்டத்தில் செடி, கொடிகளில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் மாவுப்பூச்சியை எந்த ரசாயனங்களும் இன்றி இயற்கையாகவே எப்படி விரட்டுவது என்பது பற்றி பார்க்க போகிறோம். கோடை காலம்...

Health1 month ago

உடல் ஆரோக்கியம் என்று நினைத்து நாம் செய்யும் சில தவறுகள்.

உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து நண்பன் சொன்னான், வெளிநாட்டில் இருக்கும் மச்சான் சொன்னார், இவர் சொன்னார், அவர் சொன்னார் என்று நாம்...

Health1 month ago

கருப்பு கவுனி அரிசியின் சில ஆரோக்கிய நன்மைகள்.

வெள்ளையா இருக்கிறது தான் நல்லது என்றும் கருப்பாய் இருக்கிறதெல்லாம் கெட்டது என்றும் நாம் பழக்கப்பட்டுவிட்டோம், ஆனால் அது உண்மை இல்லை. இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பாரம்பரிய அரிசி...

Agriculture2 months ago

இரசாயன உரங்களால் மலடான மண்ணை வளமுள்ளதாக மாற்ற சில வழிகள்.

சனத்தொகை பெருகும் போது தேவைகளும் அதிகரிக்கின்றது, மக்களுக்கு தேவை அதிகரிக்கும் போது விளைச்சலும் அதிகமாகத்தான் தேவைப்படுகின்றது. எனவே நம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையை விட்டுவிட்டு விளைச்சலை அதிகமாக...