Connect with us

Health

கருப்பு கவுனி அரிசியின் சில ஆரோக்கிய நன்மைகள்.

Published

on

வெள்ளையா இருக்கிறது தான் நல்லது என்றும் கருப்பாய் இருக்கிறதெல்லாம் கெட்டது என்றும் நாம் பழக்கப்பட்டுவிட்டோம், ஆனால் அது உண்மை இல்லை. இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பாரம்பரிய அரிசி வகைகள் உள்ளது அதிலும் மிக முக்கியமான வகை தான் “கருப்பு கவுனி அரிசி”. வெண்மையை மாத்திரம் விரும்புவோருக்கு இந்த அரிசியை விரும்ப வாய்ப்பு சற்று குறைவுதான், ஏனென்றால் இதன் பெயரில் உள்ளது போல் இந்த அரசின் நிறமும் பார்ப்பத்துக்குக் கருப்பாகத்தான் இருக்கும் ஆனால் இதனுடைய நிறம் ஆழ்ந்த ஊதா நிறம்தான்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, புழுங்கல் அரிசி, பச்சரிசியைவிட பல மடங்கு நன்மை கொண்டுள்ளது இந்த கருப்பு கவுனி அரிசியில். மற்ற வகையான அரிசிகளை விட இந்த கருப்பு கவுனி அரிசி மிகவும் குறைவான அளவிலேயே இந்தியாவில் பயிரிடப்படுகின்றது. இதனுடைய சிறப்பை தெரிந்துகொண்ட மேற்கத்தைய நாட்டவர்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

சீனாவில் இந்த கருப்பு கவுனி அரிசி தடைசெய்யப்பட்டுள்ளது இதுக்கு என்ன காரணமும் என்றால்.. சீனாவில் பண்டைய காலத்தில் அரசர்கள் அதிக அளவில் பயன்படுத்திய இந்த அரிசியை சீன மக்களும் அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் எனவே இதனுடைய உற்பத்தி மிக குறைவாக இருந்ததனால் கருப்பு கவுனி அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, எனவே இந்த அரிசியை பொதுமக்கள் பாவிக்க கூடாது என்று இருவரி சீன அரசு அந்த அரசுக்கு தடை விதித்துள்ளது.

ஏன் இந்த அரிசி கருப்பு நிறத்தில் உள்ளது?
இந்த கவுனி அரிசி கருப்பு நிறமாக இருப்பதற்கு காரணமே இதிலிருக்கும் ஆன்தோஷின் என்னும் நிறமி. இந்த ஆன்தோஷின் அதிகமாக இந்த இந்த அரிசியில் இருப்பதனால் நமது மூளை இதயம் என்பவற்றை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இது ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தியும் நல்ல கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிக்க உதவுகிறது மேலும் இது இதயத்திற்கு மிகவும் நல்லது.

வழமையாக நாம் பயன்படுத்தும் அரிசி வகைகளைவிட கவுனி அரிசியில் அதிகமான இரும்புச் சத்தும் புரதமும் குறைவான மாவுச் சத்தும் அடங்கியுள்ளதுமேலும் இதில் விட்டமின் E அதிகமாக இருப்பதனால் கண், தோல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்லதாக உள்ளது இன்னும் இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.

இதை எப்படி பயன்படுத்துவது?

பொதுவாக மற்ற அரிசியைப் போன்று இதை இலகுவாக சமைக்க முடியாது ஏனென்றால் இதை சமைக்க நேரம் அதிகமாகவே இருக்கும். எனவே இந்த அரிசியை சமைக்கும் முன் இரண்டு தடவை நன்றாக அலசி விட்டு 1-2 மணி நேரம் ஊறவைத்த பின் சமைப்பதற்கு எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் இதை சாதாரணமாக பாயாசம், இனிப்பு பொங்கல், இட்லி, புட்டு, தோசை என பல முறைகளில் இதை பயன்படுத்த முடியும். இந்த கருப்பு கவுனி அரிசியை சமைப்பதற்கு முன் சுமார் இரண்டு மணி நேரங்கள் நீரில் ஊற வைத்தால் அவசியம். கருப்பு கவுனி அரிசியை குக்கரில் சமைக்க விரும்புவர்கள் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு நீரை விட்டு சமைக்க வேண்டும்.

கருப்பு கவுனி அரிசி மிக குறைந்த அளவிலேயே பயிரிடப்படுவதால் இதனுடைய விலை மற்ற அரிசிகளின் விலையைவிட சற்று அதிகமாகத்தான் இருக்கும். எனவே இதை தொடர்ச்சியாக பயன்படுத்த முடியாவிட்டால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவையேனும் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்..

கருப்பு கவுனி அரிசி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

  • கருப்பு கவுனி அரிசி
  • உப்பு
  • தண்ணீர்
  • ஏலக்காய்த்தூள்

செய்முறை
முதலில் அரிசியை இரண்டு முறை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும், பின்னர் அதில் சிறிதளவு உப்பை சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தை சூடாக்கி அதில் அரிசியை நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் வறுத்த அரிசியை ஆறவிட்டு மிக்ஸியில் ரவை போன்று பதத்திற்கு உடைத்து எடுக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கஞ்சிக்கு தேவையான நீரை ஊற்றி, தேவையான அளவு உப்பை சேர்க்கவும் கொதிக்கவிடவும். நீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் ரவை போன்று அரைத்து எடுத்த அரிசியை தேவையான அளவுக்கு கொதிக்கும் நீரில் போட்டு காஞ்சி காய்ச்ச வேண்டும் (ஒரு 10 தொடக்கம் 12 நிமிடங்கள்) நன்றாக கொதிக்கவிட்டு சிறிது ஏலக்காய் தூளை சேர்த்து எடுத்தால் கஞ்சி தயாராகிவிடும்.

இந்தக் கஞ்சியை உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும் காரணம் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கொஞ்சம் குடித்தாலே அடிக்கடி பசி எடுக்கும் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் மலச்சிக்கலை தீர்க்க இது வல்லமை கொண்டது.

இறுதியாக சில குறிப்பு: இந்த கருப்பு கவுனி அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைய இருப்பதால் இதய நோய் அதிகரிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.. சொல்லப்போனால் ஒரு கைப்பிடி அவுரிநெல்லி விட, ஒரு கைப்பிடி கவுனி அரிசியில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. மேலும் இந்த அரிசியைச் சாப்பிட்டபின் இரத்தத்திலுள்ளசர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் சீரான அளவில் வைத்துக் கொள்ள உதவுகிறது எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கின்றது.

Featured

Agriculture4 weeks ago

செடியை தாக்கும் மாவுப்பூச்சியை விரட்ட இயற்கை வழிகள்.

வீட்டுத் தோட்டத்தில் செடி, கொடிகளில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் மாவுப்பூச்சியை எந்த ரசாயனங்களும் இன்றி இயற்கையாகவே எப்படி விரட்டுவது என்பது பற்றி பார்க்க போகிறோம். கோடை காலம்...

Health1 month ago

உடல் ஆரோக்கியம் என்று நினைத்து நாம் செய்யும் சில தவறுகள்.

உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து நண்பன் சொன்னான், வெளிநாட்டில் இருக்கும் மச்சான் சொன்னார், இவர் சொன்னார், அவர் சொன்னார் என்று நாம்...

Health1 month ago

கருப்பு கவுனி அரிசியின் சில ஆரோக்கிய நன்மைகள்.

வெள்ளையா இருக்கிறது தான் நல்லது என்றும் கருப்பாய் இருக்கிறதெல்லாம் கெட்டது என்றும் நாம் பழக்கப்பட்டுவிட்டோம், ஆனால் அது உண்மை இல்லை. இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பாரம்பரிய அரிசி...

Agriculture2 months ago

இரசாயன உரங்களால் மலடான மண்ணை வளமுள்ளதாக மாற்ற சில வழிகள்.

சனத்தொகை பெருகும் போது தேவைகளும் அதிகரிக்கின்றது, மக்களுக்கு தேவை அதிகரிக்கும் போது விளைச்சலும் அதிகமாகத்தான் தேவைப்படுகின்றது. எனவே நம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையை விட்டுவிட்டு விளைச்சலை அதிகமாக...