Connect with us

Health

கேன்சர் கட்டி வளர்ச்சியை தடுத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத் வேண்டுமா? இத உணவில் தவறாமல் சேருங்கள்.

இஞ்சி மற்றும் மிளகாய் ஆகியவை மசாலா மற்றும் சுவையூட்டும் பொருட்களாக மட்டுமல்லாமல், புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இஞ்சி மற்றும் மிளகாயின் காமினேசன் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

இந்த மசால பொருட்கள் மூலம் நுரையீரல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டி வளர்ச்சிகள் ஏற்படாமலும் இவை தடுக்கின்றன.

மிளகாய், இஞ்சி மற்றும் 6-ஜிங்கர்சால் ஆகியவற்றின் கலவை புற்றுநோய் வராமல் தடுப்பதாகவும், 6-ஜிகனல், காப்சைசின் மிகுந்த வலுவான கலவையானது, உடலில் கட்டிகள் வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

மிளகாய் மற்றும் இஞ்சி கலவை புற்றுநோய்யை விரட்டும் மசாலாக்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, இஞ்சியில் குரோமியம், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் ஆகியவை உள்ளன. இது ஆரோக்கியமான மற்றும் முறையான இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது.

அமெரிக்க ஆய்வு!
கூடுதலாக, அமெரிக்க பிரகனன்சி அசோசியேஷன் (American Pregnancy Association ) இஞ்சியை பல்வேறு விதமாக சாப்பிட பரிந்துரைக்கிறது. தேனீர் உடன் இஞ்சியை கலந்து குடிப்பது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியை தடுக்கிறது. கொலம்பியா பல்கலைக்கலக மருத்துவர்கள், இஞ்சி மூச்சுக்குழாய் தசைகளை மென்மையாக்கி, நல்ல சுவாசத்திற்கு உதவுவதாக கூறியுள்ளனர்.

மிளகாயின் நற்குணங்களை தரக்கூடிய காப்டாசின் ( capsaicin) என்ற மிளகுத்தூள், மூளை வலி டிரான்ஸ்மிட்டரைத் தடுக்கிறது. இது தலைவலிகளை குறைப்பதோடு வீக்கத்தை தடுக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலம்!
ஒரு தேக்கரண்டி மிளகாயில், தினசரி தேவைகளுக்கு தேவையான 108 சதவிகிதம் வைட்டமின் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது

நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும் கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் யு சத்தானது அதிகம். அதனால், விழித்திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது. Capsaicin  என்கிற நிறமிதான் மிளகாயின் காரசார ருசிக்குக் காரணம். இந்த நிறமி அதிகமானால் மிளகாயில் காரம் அதிகரிக்கும். குறைந்தால் காரமும் குறையும்.

விட்டமின் ஊ சத்தும் அதிகம். அதனால் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக  செயல்படுகிறது. நரம்புப் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சொரியாசிஸ் என்கிற சரும நோய் உள்ளவர்களுக்கும் மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

மிளகாயில் உள்ள Capsaicin  பொருளானது, நம் உடலில் தோன்றும் வலியானது சருமத்திலிருந்து தண்டுவடத்துக்குப் போகாமல் காக்கிறது. அப்படி தண்டுவடத்துக்கு வலி இடம் பெயர்ந்தால், அது மூளையில் உணரப்படும். அடிபட்டவர்களுக்கும், வெட்டுக்காயம் பட்டவர்களுக்கும் காரமான உணவு கொடுக்கச் சொல்வதன் பின்ணணி இதுதான்.

மிளகாய் எடுத்துக் கொள்வதால், என்டார்ஃபின் எனப்படுகிற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. அதனால் ஒருவித ஓய்வான மனநிலை கிடைக்கிறது. இரவு காரசாரமான உணவு எடுத்துக் கொண்டால், காலையில் மிகவும் ஓய்வாக எழுந்ததாக உணர்வது இதனால்தான். தவிர மிளகாய் சேர்த்த உணவு, குடலை சுத்தப் படுத்தி, உடலை லேசாக்கி விடும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *