Connect with us

Health

நைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுங்க… ஒரே மாசத்துல 15 கிலோ சரசரனு குறைக்கலாம்

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் ஏராளம். அதுமட்டுமில்லங்க. கொலஸ்ட்ரால் அதிகரித்து, இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் சதை போடுவது மற்றும் பானை போன்ற தொப்பையைத் தூக்கிக் கொண்டு, பிடித்ததை சாப்பிட முடியாமல், பிடித்த டிரஸ் போட முடியாமல் மற்றவர்களுடைய கேலி கிண்டலுக்கு ஆளாவதுண்டு. தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக தொடந்து வாரங்கள் மட்டும் இந்த பானத்தைக் குடித்து வந்தால் மிக வேகமாக உடல் எடை குறைந்துவிடும்.

இயற்கையான தீர்வு 
உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதற்கு நிறைய மருந்துகள், ஷேக், மாத்திரைகள் மார்க்கெட்டுகளில் கிடைகின்றன. அதேபோல் பண வசதி படைத்தவர்கள் அறுவை சிகிச்சை கூட செய்து கொள்வார்கள். ஆனால் இவற்றின் மூலம் ஏராளமான பக்க விளைகள் ஏற்படும். இதுபோன்று பக்க விளைவுகள் ஏதுமில்லாத இயற்கையான வழியில் எடையைக் குறைக்கும் பொருட்கள் நம்முடைய சமையலறையிலேயே இருக்கின்றன. எவ்வளவோ எடை குஐறக்கும் பானங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதைக் குடித்துப் பாருங்கள். நிச்சயம் 2 வாரங்களிலேயே உங்கள் உடல் எடையில் அபார மாற்றத்தைக் காண்பீர்கள். தெள் செய்முறையை கீழே பார்க்கலாம்.

சரசரனு வெயிட் குறைக்கும் மேஜிக் 

  • சுக்குப்பொடி
  • மஞ்சள் தூள்
  • கருஞ்சீரகம்
  • எலுமிச்சை சாறு
  • தேன் (தேவைப்பட்டால்)

செய்முறை 
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் முக்காலில் இருந்து ஒரு ஸ்பூன் வரைக்கும் காய்ந்த இஞ்சி என்று சொல்லப்படுகிற சுக்குப் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியும் அத்தோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தையும் போட்டு நன்கு கலக்குங்கள். கருஞ்சீரகத்தைப் பொடியாக்கிக் கூட சேர்க்கலாம்.

இந்த கலவையை நன்கு ஒரு நிமிடத்துக்குக் கலக்குங்கள். அதன்பின் அந்த நீரில் ஒரு அரை எலுமிச்சைப் பழத்தின் சாறினைப் பிழிந்து விட்டு கலக்கி, வெதுவெதுப்பாக இருக்கிற பொழுதே குடித்து விடுங்கள்.

எப்படி குடிக்க வேண்டும்? 
வெதுவெதுப்பாக இருக்கும்போதே குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் கூட குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்தால் தவறில்லை. ஆறவிட்டுக் குடிக்கக் கூடாது. அப்படிக் குடித்தால் பெரிதாகப் பலன் இருக்காது. தேன் சேர்க்காமல் குடிப்பது எடையை வேகமாகக் குறைக்க உதவும்.

எவ்வளவு நாள் குடிக்கணும்? 
பொதுவாக எடையைக் குறைப்பதற்கான ஏதாவது பானங்கள் குடித்தால், அதற்கான ரிசல்ட் மிக மெதுவாகத்தான் நமக்குக் கிடைக்கும். ஆனால் இந்த பானம் அப்படியல்ல. நீங்கள் குடிக்க ஆரம்பித்த ஓரிரு நாள்களிலேயே நல்ல ரிசல்ட் உங்களுக்குக் கிடைக்கும்.

இந்த பானத்தைப் பொருத்தவரையில், ஒரு மாதம் வரையிலும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் இந்த பானத்தைக் குடித்து வரலாம். அப்படி ஒரு மாதம் வரையிலும் குடித்தால் கிட்டதட்ட 15 கிலோ வரையிலும் குறைக்க முடியும். உங்களால் ஒரு மாதம் வரையில் குடிக்க முடியாது. ஏதாவது வீட்டில் ஃபங்ஷன் வருகிறது அதனால் வேகமாகக் குறைய வேண்டும். பிடித்தபடி கலர் கலர் டிரஸ் போட வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் இந்த பானம் உங்களுக்கு கைக்கொடுக்கும்.

தொடர்ந்து 15 நாட்கள் வரையில் இந்த பானத்தை தினமும் இரவு குடித்தீர்கள் என்றால், குறைந்தபட்சம் எட்டு கிலோ வரையில் உங்களால் உடல் எடையைக் குறைத்து விட முடியும்.

எப்படி செயல்படுகிறது? 
பொதுவாக இஞ்சி மற்றும் சுக்கில் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தி ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு என்பது நமக்கு தெரிந்தது தான். அதேபோலத்தான் மஞ்சளும் ஆண்டி இன்ஃபிளமேட்ரி தன்மை கொண்டது. அது நம்முடைய உடலில் தொற்றுக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

கருஞ்சீரகத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் மெட்டபாலிசமும் சீராகும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து இந்த கருஞ்சீரகத்தைச் சாப்பிட்டு வந்தால் மிக விரைவாகவே ரத்த அழுத்தம் குறைந்திருப்பதை உணர முடியும்.

எலுமிச்சை சாறு தொற்றுக்களைக் குணப்படுத்துவதில் முதன்மையானது. அதேபோல் உடல் எடையைக் குறைக்கும் எல்லா பானங்கள் மற்றும் உணவுகளிலும் கட்டாயமாக எலுமிச்சை இடம் பெறும். ஏனெனில் அதில் அதிக அளவிலான வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.

அதனால் இவை எல்லாம் ஒன்றாக சேர்ந்திருக்கிற இந்த பானத்தை அதுவுமு் குறிப்பாக சூடான பானத்தை இரவில் துங்கச் செல்லும்முன் குடித்தால் இரவில் சாப்பிட்ட உணவும் வேகமாக ஜீரணமடைந்து, உடலில் கொழுப்பை தங்கவிடாமல் பார்த்துக் கொள்ளும். அதேபோல் காலையில் பசியின்மை போன்ற பிரச்சினைகள் இல்லாமல் சரியான அளவில் காலை உணவு எடுத்துக் கொள்ள வகை செய்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *