Connect with us

Health

இதய அடைப்பைகூட சரிசெய்துவிடும் மாவிலை டீ! இந்த சீசன்ல தினமும் இத குடிங்க.

மாம்பழம்ன்னாலே யாருக்குத் தான் பிடிக்காது. அதிலும் மல்கோவா, அல்போன்சானனு சொன்னாலே சிலருக்கு எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவுக்கு மாம்பழ விரும்பிகள் அதிகம். சீசன் களைகட்ட ஆரம்பித்த உடனே நாம் அதிகமாக விரும்பி சாப்பிடுவது இந்த மாம்பழத்தை தான். கோடை காலம் தொடங்கிவிட்டாலே சீசன் தொடங்கிவிடும். சுவை, நிறத்தில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் ஊட்டச்சத்திலும் இதற்கு நிகர் எதுவுமில்லை எனலாம். அப்படிப்பட்ட மாம்பழ கனிகளை கொண்டு தேநீர் தயாரித்து பெறும் நன்மைகளை பற்றி தான் இக்கட்டுரையில் காண போகிறோம்.

சிலர் மாம்பழம் உடலுக்கு சூடு என்று சொல்வார்கள். அதனால் கொஞ்சம் அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நல்லது. இப்போது சீசன் வேறு தொடங்கிவிட்டது. எல்லா சமயங்களிலும் கிடைக்கவில்லை என்றாலும் அவை கிடைக்கிற பொழுது இந்த சீசனில் மட்டுமாவது இதுபோன்று டீ தயாரித்து தினமும் குடிக்கலாமே.

இந்த மாம்பழத்தை கொண்டு டயாபெட்டீஸ்யை குணப்படுத்தலாம் என்று ஐரோப்பியர்கள் கண்டறிந்துள்ளனர். இவை கணையத்தில் அடைக்கப்பட்டுள்ள இரத்த குழாய்களை சரி செய்து இன்சுலின் சுரப்பை சரியாக்குகிறது. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் வரு கின்றன. இதனால் டயாபெட்டீஸ் நோய் ஏற்படாமல் நீண்ட காலம் நிம்மதியாக வாழ இயலும்.


மாங்கோ டீ குடிப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். இவை இரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் இரத்த குழாய்கள் உடைந்து போவதை தடுக்கிறது. எனவே தினமும் ஒரு கப் மாங்கோ டீ போதும் நீங்கள் வளமாக நலமாக வாழ.

மாவிலைகளும் தேநீர் தயாரிக்க பயன்படுகின்றன. இதில் விட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற ஏராளமான விட்டமின்கள் அடங்கியுள்ளன. எனவே உங்கள் விட்டமின் பற்றாக்குறையை போக்கி போதுமான ஊட்டச்சத்துக்களை பெற்று வளமுடன் வாழ இந்த தேநீர் பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த தேநீரில் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கியுள்ளன. உலர்ந்த மாங்காயில் விட்டமின் சி என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைக்கவும், ஸ்கர்வி என்ற நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

இதில் உள்ள ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் வருவதை தடுக்கிறது. இதய நோய்கள் மற்றும் இதயக் குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து உயிரை காக்கிறது.

ஹாட் மேங்கோ டீ

  • 1 டீ ஸ்பூன் மாவிலைகள் (பச்சை அல்லது உலர வைத்த இலைகள்)
  • சர்க்கரை அல்லது தேன்
  • எலுமிச்சை சாறு

செய்முறை
ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். கொதிக்கும் நீரில் இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். கொதித்ததும் டீயை வடிகட்டிக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் தேன் அல்லது சர்க்கரையைச் சேருங்கள். அதில் அரைமூடி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பின் குடியுங்கள்.


மாங்கோ சில் ஐஸ் டீ
2 மீடிய வடிவ அல்பன்ஸோ மாம்பழம் அல்லது மற்ற மாம்பழங்களையும் பயன்படுத்தலாம். இந்த தேநீரில் சுவையான மாம்பழ கூழை பயன்படுத்தி தயாரிக்கின்றனர். அல்போன்சாவில் சதைப்பற்று கொஞ்சம் அதிகமாகவும் நார் இல்லாமலும் இருக்கும் என்பதால் இங்கு பரிந்துரைக்கப்படுகிறது.

  • 3 ஸ்பூன் டீ தூள் அல்லது டீ பேக்ஸ்
  • 3 கப் தண்ணீர்
  • எலுமிச்சை சாறு
  • நாட்டுச் சர்க்கரை
  • ஜஸ் கட்டிகள்

செய்முறை
மாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதை மிக்சியில் போட்டு நன்கு அடித்து, மாம்பழ கூழ் தயாரித்து இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.

மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். அதில் டீ தூளைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். பின் அந்த டீயை வடிகட்டி அதையும் குளிர வையுங்கள். டீ குளிர்ந்த பின்பு அந்த டீயையும் ஏற்கனவே அரைத்து வைத்த மாம்பழக் கூழையும் எலுமிச்சை சாறு மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுங்கள்.

அதை அப்படியே ஒரு கிளாஸில் ஊற்றி சில புதினா இலைகளை மேலே போட்டு குடித்துப் பாருங்கள். இந்த ஐஸ் டீயை விடவே மாட்டீர்கள். அதிலும் இந்த வெயில் காலத்துக்கு சும்மா ஜில்லுன்னு இருக்கும் பார்த்துக்கோங்க.

ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தாலே உங்களுடைய உடலில் ரத்த சர்க்கரை அளவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் சீராக இருப்பதை உங்களால் உணர முடியும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *