Connect with us

Health

புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

நமது முன்னோர்களின் காலத்தில் இருந்து ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த காய்கறி வகைகளில் ஒன்றாக புடலங்காயும் ஒன்றாகும். புடலங்காய் கொடியாக வளரக்கூடிய கொடி இனத்தை சார்ந்தது. இதனை ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார்கள்.

புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன. இவை எல்லாவற்றையும் விட புடலங்காயில் மிக அதிகமாக நீர்ச்சத்து இருக்கிறது.

இது பல வகை நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. அந்தவகையில் தற்போது புடலங்காயை தினசரி உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

காய்ச்சலின் போது தினமும் சிறிதளவு புடலங்காயை பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட காய்ச்சல் நோய்களும் நீங்கும். மலச்சிக்கல் பிரச்சனை தீர தினமும் புடலங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சுலபத்தில் நீங்கும்.

தினமும் ஒரு வேளையாவது புடலங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் நாம் புடலங்காய் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்கள் சாப்பிட்டு வர கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி புடலங்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது. வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட நபர்கள் புடலங்காய் சேர்க்கப்பட்ட உணவினை தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுபோக்கு குணமாகும்.

புடலங்காயில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் குணமாகும்.

தினமும் இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிடுவதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *