Connect with us

Health

காலை உணவை தவிர்த்தால் கட்டாயம் இந்த நோய்கள் உங்களை தேடி வருமாம்!

இன்றைய அவசர உலகில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்கள் அவசரம் கருதி பெரும்பாலானவர்கள் தங்களது காலை உணவை தவிர்த்து வருகின்றனர்.

இதனால் அவர்கள் உடல் ஆரோக்கியம் எந்த அளவுக்கு சீரற்ற தன்மை அடையும் என்ற அபாயத்தை அறியாமல் பலர் உள்ளனர்.

காலை உணவை எந்த காரணத்தை முன்னிட்டும் தவிர்க்க கூடாது. ஏனெனில் இது பல நோய்களை உருவாக்கும்.

அந்தவகையில் காலை உணவைத் தவிர்ப்பதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று இங்கு பார்ப்போம்.

காலையில் சாப்பிடாமல் இருந்தால் குறிப்பாக பெண்களுக்கு , இன்சுலின் சுரப்பதில் பாதிப்புகள் உண்டாகி, டைப்-2 சர்க்கரை வியாதி உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

காலையில் உணவை தவிர்ப்பதால் போதிய புரதம் கிடைக்கப்பெறாமல் முடி உதிர்வு சொட்டை உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் கூந்தல் கற்றைகளுக்கு தேவையான கெரட்டின் உருவாக காலையில் சாப்பிடும் புரத உண்வால் அளிக்க முடியும்.

காலை உணவை தவிர்ப்பவர்கள்தான் அதிகம் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது சர்க்கரை அளவு குறைந்து, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் ஒற்றை தலைவலி உண்டாகும்.

காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு உடல் பருமன், ரத்த அழுத்தம், இவை மெல்ல உருவாகி இதனால் இதயத்தின் செயல்கள் பாதிக்கப்பட்டு இதய நோய்கள் உருவாகும் சாத்தியங்கள் உள்ளன.

காலை உணவு எடுத்து கொள்ளவில்லை என்றால் இயல்பாக சுரக்கும் ஜீரணிக்கும் அமிலங்கள் செரிமானம் செய்ய உணவு இல்லாததால் குடலை அரிக்க தொடங்கி விடும். இதனால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.

காலை உணவு சாப்பிடாதவர்கள் மதிய உணவையும் திருப்தியாக சாப்பிட முடியாது. கொஞ்சம் சாப்பிட்டவுடனே வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *