Connect with us

Health

சுகருக்கு மட்டுமில்லாது சிறுநீரக அடைப்பையும் நீக்கும் வல்லமை கொண்ட அரும்மருந்து துளசி வகை! திருநீற்றுப் பச்சிலை.

சிறந்த நோய் எதிர்ப்பு சக்திமிக்க கிருமிநாசினியாக, எண்ணற்ற ஆற்றலையும் நன்மைகளையும், தன்னக்கத்தே கொண்டு விளங்குகிறது. நோய் எதிர்ப்பு திறன் கொண்ட திருநீற்றுப் பச்சிலை செடியின் இலைகள், வேர்கள், விதைகள் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கவை.

திருநீற்றுப் பச்சிலையின் மருத்துவ குணமிக்க இலைகளை முகர்ந்து பார்த்தாலே, தலைவலி, மூக்கின் சுவாசக்கோளாறுகள் நீங்கும். மேலும், இரவில் தூக்கம் வராதவர்கள், இதன் இலைகளை முகர்ந்துவர, விரைவில் நல்ல சுகமான நித்திரை கிடைக்கும்.

சிறுநீரகக் கோளாறுகள் :
தாய்மார்கள் தினமும் திருநீற்றுப் பச்சிலை சாறு அருந்திவர, கடுமையான பிரசவ கால வலிகள் குறையும்.மேலும், திருநீற்றுப் பச்சிலை இலைச்சாறு அஜீரணக்கோளாறுகள், மற்றும் சிறுநீரகக்கல் அடைப்பை நீக்கும்.

திருநீற்றுப் பச்சிலை இலைகளைப்போல அதன் வேரும் நல்ல பலனகளைத் தரவல்லது. திருநீற்றுப் பச்சிலை வேரை உரலில் இடித்து, அதை நீருடன் கலந்து தீநீராக இரு வேளை அருந்தி வந்தால், இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரகத்தை பலமாக்கி, உடலின் நச்சு நீரை சிறுநீர் மூலம் அதிகம் வெளியேற்றி, உடல் நலம் காக்கும், மேலும் வயிற்றுப் புண்கள் ஆற்றும். குடல் பூச்சிகளை ஒழிக்கும்.

படர்தாமரை :
“பங்கஸ்” என ஆங்கிலத்தில் கூறப்படும் படர்தாமரை, அதிக வியர்வையினாலும், பூஞ்சைநச்சுத்தொற்றினாலும் வரும் இந்நோயைப்போக்க, கிருமிநாசினியான திருநீற்றுப்பச்சிலை இலைச்சாற்றை, அவ்விடங்களில் தடவிவர, அவை நீங்கிவிடும். மேலும் காயங்கள் மேல் தடவி வர, அவை விரைவில் குணமாகும்.

கண்கட்டி :
மேலும், இந்த திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன், அதிமதுரமும் சேர்த்து, பருக்களில் தடவி வர, எத்தனை நாள்பட்ட நச்சுத்தன்மை கொண்ட பருக்களானாலும், காய்ந்து, உதிர்ந்துவிடும். உதிர்வதோடு மட்டுமல்லாமல், பருக்களின் தழும்பையும் போக்கி முகத்தை பொலிவாக்கக்கூடியது, திருநீற்றுப் பச்சிலை மூலிகை.

அதுபோல இளைஞர்களுக்கு அதிகம் வருவது கண் கட்டி. உடல் சூட்டினால் வரும் இந்த கண் கட்டி கண்களை முடியாமல் அதோடு சேர்ந்து வரும் கண் வலியினால், அதிகம் துன்புறுவர். அவர்களெல்லாம், திருநீற்றுப் பச்சிலை இலைகளை சாறெடுத்து, கண் இமைகளின் மேல் பற்று போல தடவி வரவேண்டும். இந்த இலைச்சாற்றினை, அவ்வவ்போது கண் இமைகளின் மேல் தடவி வர, விரைவில் கண் கட்டிகள் உடையும், அதன் பின்னர், மீண்டும் இலைச்சாற்றை கண்கட்டிகளின் காயத்தில் இட்டுவர, சீக்கிரம் அவை ஆறிவிடும். மேலும் உடல் சூட்டுக் கட்டிகளையும் நீக்கும்.

 

தலைவலி :
உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றும் தன்மை மிக்க திருநீற்றுப் பச்சிலை இலைகளை நீரில் கொதிக்கவைத்து, அருந்திவர, மூக்கடைப்பு, தலையில் நீர் கோர்த்த வேதனை மற்றும் தலைவலி நீங்கும். திருநீற்றுப்பச்சிலை இலைச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட, நெஞ்சு வலி, இருமல் தீரும். திருநீற்றுப் பச்சிலை இலையை மென்றுவர, வாய்ப்புண்கள் நீங்கும்.

சர்க்கரை வியாதி :
நீரில் ஊறிய திருநீற்றுப் பச்சிலை விதைகள், அளவில் அதிகரித்து நீரில் வழுவழுப்புத்தன்மையுடன் இருக்கும், சர்ர்க்கரை பாதிப்புள்ளவர்கள் இவற்றை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வர, சர்க்கரை பாதிப்புகள் குறையும். உடல் உள் உறுப்புகளில் உள்ள புண்களை ஆற்றும்.

முகப்பரு முகத்தில் வந்துவிட்டாலே தங்கள் அழகெல்லாம் போய்விட்டது. எப்படியேனும் அதை நீக்க வேண்டும் என்று பதறி, அந்த பதட்டத்தில் ஏதேதோ முகப்பூச்சு கிரீம்கள் எல்லாம் தடவி, பருக்களை அழிக்கப்போராடுவர். சிலர் அந்தப்பருக்களை கைகளால் கிள்ளி எடுத்துவிட முயற்சித்து, அதுவே, நச்சாக மாறி முகத்துக்கு கடும் வேதனையையும், பருக்கள் பழுத்து கருமை நிறம் கொண்டு முகமும் விகாரமாக மாறிவிடும்.

இவர்களெல்லாம், திருநீற்றுப் பச்சிலையை உபயோகித்து வந்தால், முகப்பருக்கள் நீங்குவது மட்டுமல்லாமல் அந்தப்பருக்களால் உண்டான தழும்புகளும் மாறிவிடும். திருநீற்றுப் பச்சிலை இலைகளை எடுத்து, சாறு பிழிந்து அந்தச்சாற்றை பருக்களின் மேல் தினமும் அவ்வப்போது இட்டுவரவேண்டும்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *