Connect with us

Health

எப்போதும் ஆரோக்கியமாக இருக்க இந்த 9 விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள்!

பொதுவாக அந்தகாலத்தில் நம் முன்னோர்கள் மண்ணின் தன்மைக்கு ஏற்ற நாட்டு விதைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்தனர்.

இதன் மூலம் கிடைத்த உணவுப் பொருட்களை உண்டு, மக்களும் நீண்ட நாள், நோய்களின்றி வாழ்ந்தனர் என கூறப்படுகின்றது.

இன்றும் சரிவிகித ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய உணவுகளின் பட்டியலில் விதைகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த விதைகளை நீங்கள் வறுத்தோ, சாலட் உடன் சேர்த்தோ சாப்பிட்டு வந்தாலே நல்ல பலன்களை நீங்கள் பெற முடியும்.

தற்போது அந்த விதைகள் என்ன என்பதையும், அதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம். ​

சியா விதைகள்
bursatv

இதை நீங்கள் தயிர் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். பாதாம் பாலுடன் ஊற வைத்து சாப்பிடுங்கள்.

இது நம் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால் பசி எடுக்காது.

ஓமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் மன அழுத்தத்தை போக்கி நிம்மதியான தூக்கத்தை தரும்.

​வொயில்டு ரைஸ்
samayam

இது மற்ற முழு தானியங்களை விட அதிகளவில் புரதச்சத்து கொண்டு உள்ளது.

வெள்ளை அரிசியை விட அதிக ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டு காணப்படும்.

இதில் ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் பி 6 மற்றும் நியாசின் போன்ற சத்துக்களை வழங்குகிறது.

இது ஒரு அரிசி வகை என்பதால் சமைத்தால் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த சூடான சாதம் பச்சை சாலட்டுடன் சுவையாக இருக்கும்.

​பூசணிக்காய் விதைகள்
netrigun

பூசணி விதைகளில் ஏராளமான மெக்னீசியம் சத்து காணப்படுகிறது. இதனால் நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்க உதவுகிறது.

தசைகளுக்கு சக்தியை வழங்குகிறது. இதை சூப் அல்லது சாலட்டுடன் சேர்த்து சாப்பிட்டு பலன் பெறலாம்.

​மாதுளை விதைகள்
myjewishlearning.

விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.

மாதுளை விதைகளை உங்க சிற்றுண்டியாக சேர்த்து கொள்ளலாம்.

மாதுளை விதைகள் நம் தோலில் மீது ஏற்படும் காயங்கள், தழும்புகளை குணமாக்கும் தன்மை கொண்டவை.

மூளையை சுறுசுறுப்பாக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது.

சீமைத்திணை
schaer

பாஸ்தா போன்ற பிற தானியங்களில் கூட இதை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

காலை உணவில் ஓட்ஸ்மீல் கஞ்சிக்கு பதிலாக சீமைத்திணை சேர்த்து கொள்ளலாம். இதனால் உங்களுக்கு புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து போன்றவை கிடைக்கும்.

இதில் பசையத் தன்மை இல்லை என்பதால் பசைய உணவு அழற்சி இருப்பவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதில் ஆக்ஸலேட் காணப்படுவதால் சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கிறது.

​ஆளி விதைகள்

ஓமேகா 3 கொழுப்பு அமிலங்களை பெற ஆளி விதைகளை உங்க உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

ஏனெனில் ஓமேகா 3 இதயத்திற்கான நல்ல கொழுப்பாகும்.

இது உங்களுக்கு நிறைய நார்ச்சத்துக்களையும் வழங்குகிறது. இவை உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

இதை சாலட் உடன் சேர்த்து சாப்பிடலாம். புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது.

​சணல் விதைகள்
Google

சணல் விதைகளில் ஏராளமான புரதங்கள் உள்ளன. சணல் விதைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் மூலமாகும்.

சாலட் மற்றும் வழக்கமான உணவுகளில் இதை சேர்த்து சாப்பிடலாம். வேண்டும் என்றால் சணல் பாலை குடியுங்கள்.

இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. சணல் விதைகளின் எண்ணெய் சரும நோய்களை விரட்டுகிறது.

​சூரியகாந்தி விதைகள்
shellingmachine.

1 அவுன்ஸ் சூரியகாந்தி விதைகளில் விட்டமின் ஈ அதிகளவு காணப்படுகிறது.

உங்கள் காலை சிற்றுண்டியை சுவையானதாக மாற்ற சூரிய காந்தி விதைகள் உதவும்.

இதய நோய்களை தடுக்கிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. விட்டமின் டி சத்து காணப்படுகிறது.

எள் விதைகள்
Google

இந்த விதைகள் கெட்ட கொழுப்புக்களை குறைக்க பயன்படுகிறது. எள் விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து போன்றவை அதிகமாக காணப்படுகிறது.

இரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. ஆரோக்கியமான எலும்புகள் உருவாக உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆர்த்ட்ரிக்ஸ் மூட்டு அழற்சியை குறைக்க உதவுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *