Connect with us

Health

செல்போன்களால் பரவும் வினோத நோய்கள்: அதிர்ச்சி தகவல்!!

இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையில் பார்த்தாலும் செல்போன் இருக்கு. இருந்தாலும் இது இன்றை உலகில் ஆளை கொல்லும் அரக்கனாக மாறியுள்ளது.

ஏனென்றால் சமீபத்தில் நடத்தில் ஆய்வொன்றில் செல்போன் மோகத்தால் பல்வேறு புதிய பாதிப்புகள் பரவிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதில் செல்பி மோகத்தால் பரவும் ‘செல்பிடிஸ்’, வீடியோ கேம் பிரியர்களுக்கு ‘கேம் டிஸ்ஸார்டர்’, செல்போனை பிரிய நேர்ந்தால் ‘நோமோபோபியா’ மன கலக்கம் என பல்வேறு புதிய பாதிப்புகள் முக்கிய இடம் பெறுகின்றனர்.

அதைப் பற்றி விரிவாக பார்ப்போம்
  • ஸ்மார்ட்போன்களின் இயக்கங்களுக்கு பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை அதிகமாக பயன்படுவதால் பெருவிரலில் மற்றும் முன்கை, மணிக்கட்டுகளில் அதிக வலி ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
  • அதிக நேரம் செல்போனில் டைப் செய்வதால் ‘கார்பெல் டன்னல் சிண்ட்ரோம்’ எனப்படும் நரம்பு பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பிரச்சினையை தவிர்க்க தட்டச்சு செய்வதை குறைத்துக்கொண்டு குரல் ‘மெஸேஜ்’ அனுப்புவது நல்லது.
  • உலக சுகாதார அமைப்பு செல்போன் விளையாட்டுகள் மற்றும் வீடியோ கேம் விளையாட்டுகளில் மூழ்கி உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் ‘கேமிங் டிஸ்ஸார்டர்’ எனும் தீவிர விளையாட்டு ஆர்வத்துக்கு உள்ளானவர்கள் என்கிறது.
  • இதனால் தூக்க குறைவு, அலுவலக வேலை மற்றும் பொறுப்புகளில் பிடிப்பின்மை, அன்றாட வாழ்க்கையில் சலிப்பு கொண்டவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர்.
  • பிளேஸ்டேசன் மற்றும் கன்சோல், வீ.ஆர். போன்ற விளையாட்டு கருவிகளுடன் வீடியோ கேம் விளையாடுபவர்கள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியவருகிறது. அவர்கள் விரைவில் சோர்வடைந்துவிடுகிறார்கள். கண்கள், மூட்டுகளில் பாதிப்பு ஏற்படுகின்றது.
  • சிலரால் செல்பி எடுக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தவே மாட்டார்கள். சிலர் அதிகபட்சம் ஒரு நாளைக்கு 6 செல்பிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள்.
  • பலருக்கு தினசரி ஒரு செல்பி படமாவது சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும் என்னும் மனநிலைக்கு மாறி உள்ளனர். இல்லாவிட்டால் அவர்கள் கவலையில் தள்ளப்படுகிறார்கள். இத்தகைய தீவிர செல்பி மனப்போக்கை மருத்துவர்கள் ‘செல்பிடிஸ்’ பாதிப்பு என்று வரையறுக்கிறார்கள்.
  • செல்போனை அளவுக்கு அதிகமாக தலையை சாய்த்து வைப்பது கழுத்து தசை பாதிப்புக்கு காரணமாகிறது. அப்போது கழுத்தில் 60 பவுண்ட் அழுத்தம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இது கழுத்து தசைகளில் பிடிப்பு, வலி ஏற்பட காரணமாகிறது. இந்த பாதிப்பு ‘டெக்ஸ்ட் நெக்’ என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • இதிலிருந்து விடுபட கண்களுக்கு நேரான அல்லது சற்று கீழிறங்கிய நிலையில் திரைகளை வைத்து பணி செய்வதும், பார்வையிடுவதும் கழுத்து பாதிப்புகள், கண் பாதிப்புகளை குறைக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
  • பயணங்களாலோ அல்லது வேலைச் சூழலாலோ ஒருவருக்கு சிறிது நேரம் செல்போனை பயன்படுத்த முடியாத சூழலை உருவாக்கினால் அவர் ம னக் கலக்கத்திற்கு உள்ளாகுவதுண்டு.இந்த பாதிப்பை ‘நோமோபோபியா’ என்று மருத்துவர்கள் வரையறுக்கிறார்கள்.
  • 53 சதவீத செல்போன் பயன்பாட்டாளர்கள், சிறிது நேர செல்போன் பயன்பாட்டு குறைவு சூழலுக்கும், அதிக கலக்கம் அடைவதாக தெரியவந்துள்ளது.
  • கணினிகள், செல்போன் திரைகளை மணிக்கணக்கில் பார்வையிடும் போது கண்களில் ஏற்படும் பாதிப்பை கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் அழைக்கின்றனர். குறிப்பாக அதிகமாக எலக்ட்ரானிக் திரைகளை பார்ப்பதனால் கண்கள் உலர்வடைதல், கண் வலி மற்றும் பார்வைச் சிதைவு ஏற்படுகின்றது.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *