Connect with us

Health

வாய் துர்நாற்றம் வீசுதா? இந்த இயற்கை மவுத்வாஷை மட்டும் யூஸ் பண்ணி பாருங்க

வாய் துர்நாற்றம் பேசுபவர், கேட்பவர் இருவருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளில் முக்கியமானதாகும்.

வாய் துர்நாற்றத்தை ஹளிடோசிஸ் என்று சொல்வார்கள். இது ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.

நாம் உண்ணும் உணவைப் பொறுத்து, மருந்து பயன்பாடு , ஈறு பிரச்சனை, புகை பிடித்தல் அல்லது வறண்ட வாய் அல்லது உதடு போன்றவையும் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.

இதற்காக நம்மில் பலரும் நாம் கடைகளில் கிடைக்கும் மவுத்வாஷ்களை பயன்படுத்துவது உண்டு.

இந்த மாதிரியான மவுத்வாஷ்களில் ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்கள் கலந்து இருக்கலாம். அவை உங்க வாயின் பி. எச் அளவை தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு பக்க விளைவுகள் உண்டாக வாய்ப்புள்ளது.

இந்த பிரச்சினையிலிருந்து விடுபட வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை கொண்டே இயற்கை முறையில் மவுத்வாஷை தயார் செய்யலாம். தற்போது அவை எப்படி என இங்கு பார்ப்போம்.

தேவையானவை
  • நீர் – 2 கப்
  • தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • இளஞ்சிவப்பு உப்பு – 1 சிட்டிகை
  • பெப்பர்மெண்ட் எண்ணெய் – 3-4 தேக்கரண்டி
செய்யும் முறை

ஒரு கண்ணாடி கொள்கலனில் மேற்கண்ட பொருட்களை எல்லாம் கலந்து உப்பு கரையும் வரை கரைக்கவும்.

பிறகு பயன்படுத்தும் போது நன்றாக குலுக்கிக் கொண்டு பயன்படுத்துங்கள்.

ஒரு வேளை சேர்த்த தேங்காய் எண்ணெய் திடமாகி விட்டால் சூடான நீரில் அதை வையுங்கள்.

இந்த மவுத்வாஷ் மிகவும் எளிமையானது, நச்சு இல்லாத மலிவான மவுத்வாஷூம் கூட. இரசாயனம் எதுவும் இல்லாமல் பல் ஆரோக்கியத்தையும் ஈறுகளையும் பாதுகாக்க உதவும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *