Connect with us

Health

இதை குடிச்ச ஒருமணிநேரத்தில் நாள்பட்ட மலச்சிக்கல் தீரும், குடல் புழுக்கள் அழியும்.

சில பேர் கழிப்பறைக்கு சென்று அரை மணி நேரம் அல்லது 1 மணி நேரம் கூட கழிப்பறையை விட்டு வெளியே வர மாட்டார்கள். ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டால் மலச்சிக்கல் என்று சொல்வதை கேட்டிருக்கிறீர்களா?

இன்றையக் காலக்கட்டத்தில் மனிதனின் உணவு முறை மாற்றங்களே இதற்கு முக்கியமாக காரணமாக அமைந்துள்ளது.

மேலை நாடுகளின் மோகத்தில் பீட்சா, பர்கர், நூல்ஸ்டுன்னு வெளுத்து வாங்குகிறோம். தொடர்ந்து இப்படியே நாம் சாப்பிட்டு வந்தால் நாளடைவில் அது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நாம் உண்ணும் உணவு இரைப்பைக்கு சென்று பின்னர் சிறுகுடலுக்கு வரும். சிறுகுடல் வழியாக பயணம் செய்து தன்னிடமுள்ள சத்துகளையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கைகள் பெருங்குடலுக்கு அனுப்பும்.

பெருங்குடலில் 80 சதவீதம் தண்ணீர் இருக்கும். இந்தத் தண்ணீரில் பெரும்பகுதியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு சுமார் 250 மி.லி. அளவில் மலத்தை வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை.

சில சமயங்களில் பெருங்குடல் தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்ளும். போதிய அளவு தண்ணீர் பெருங்குடல் இல்லாமல் போனால் அப்போதுதான் மலம் கட்டியாகும். அதைத்தான் மலச்சிக்கல் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒரு மனிதன் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அப்படி மலச்சிக்கல் ஏற்பட்டால் மனிதனை அடுத்தடுத்து நோய்கள் தாக்க ஆரம்பமாகிவிடும். மலச்சிக்கலை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது.

மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் ஆசனவாயில் விரிசல் ஏற்பட்டு ரத்தக்கசிவு வந்துவிடும்.

எது சாப்பிட்டாலும் அஜீரணம், வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் போன்றமாதிரியான உணர்வு உடம்பில் இருக்கும். நாளடைவில் அது குடலிறக்கம், குடல் அடைப்பு, சிறுநீர் அடைப்பு, நெஞ்சுவலி, மயக்கம் போன்ற பிரச்சினைகளையும், நோய்களையும் ஏற்படுத்தும்.

நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாக சாப்பிடுபவர்களுக்கும், தண்ணீர் குறைவாகக் குடிப்பவர்களுக்கும், காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதவர்களுக்கும் மட்டுமே இந்த மலச்சிக்கல் ஏற்படும்.

குறிப்பாக, மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறைக்கு போகாமல் முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், பயணத்தில் இருக்கும்போது சில சந்தர்ப்பங்களால் மலம் கழிக்காமல் இருப்பவர்களுக்கும் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழக்க நேரிடும். அதுவே பின்னடைவில் மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வை இல்லாமல் ஆக்கிவிடும்.

பொதுவாக வயதானவர்களுக்கு மலம் போவது சற்று குறையும். முதுமையில் உணவுமுறையும் அவர்களுக்கு மாறும். உடற்பயிற்சிகள் அவர்களால் செய்ய முடியாது. அவர்கள் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள்.

வயதானவர்களுக்கு மூட்டுவலி, இடுப்புவலி போன்றவைகள் அதிகளவில் ஏற்படுவதால் முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அதிகளவில் இப்பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் அதிகமாகக் குடிக்காமல் இருப்பது, கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், ஆசனவாய் சுருங்குதல் ஆகிய காரணங்களால் கர்ப்பிணிகளுக்குத் தற்காலிகமாக மலச்சிக்கல் ஏற்படும்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க முதலில் செய்ய வேண்டியவை

  • ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
  • நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு. தினை, வரகு, கொள்ளு போன்ற முழுத் தானிய உணவு வகைகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் அதிகளவில் சாப்பிட்டாலே மலச்சிக்கலை வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
  • பழங்களில் தண்ணீர் அதிகம் கொண்ட பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்வது நல்லது.
  • தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்யலாம்!
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *