Connect with us

Health

வாய்வுத் தொல்லையால் சங்கடமாக இருக்கா? அதில் இருந்து விடுபட இதோ சில வழிகள்

செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருவதை தான் வாய்வு தொல்லை என்கிறோம்.

வாய்வு தொல்லை சில நேரங்களில் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கிவிடும்.

வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும்.

அதுமட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது துர்நாற்றம் மிக்க வாய்வு தொல்லைக்கு வலிவகுகின்றது.

அந்தவகையில் துர்நாற்றமிக்க வாய்வு வெளியேற்றம் மற்றும் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான சில இயற்கை தீர்வுகளைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

  • ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அதில் சிறிது துருவிய இஞ்சியை சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி, ஓரளவு குளிர்ந்ததும் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
  • ஒரு டம்ளர் நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் செரிமான செயல்பாடு சீராக நடைபெற்று, அஜீரண கோளாறு நீங்குவதோடு, துர்நாற்றமிக்க வாய்வு வெளியேற்றமும் தடுக்கப்படும்.
  • பெருங்காய பொடியை சுடுநீரில் கலந்து குடியுங்கள். இல்லாவிட்டால், பெருங்காய பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தொப்புளைச் சுற்றி தடவி உலர விடுங்கள்.
  • 1/2 டீஸ்பூன் ஓமத்தை நீரில் போட்டு கலந்து, குடியுங்கள். இல்லாவிட்டால், சிறிது ஓமத்தை வாயில் போட்டு மென்று, ஒரு டம்ளர் சுடுநீரைக் குடியுங்கள். ஓமம் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
  • ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதை வடிகட்டி குடிக்க, துர்நாற்றமிக்க வாய்வு வெளியேற்றம் தடுக்கப்படுவதோடு, அஜீரண பிரச்சனையும் நீங்கும்.
  • 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும். ஏனெனில் இது துர்நாற்றமிக்க வாய்வு வெளியேற்றத்தையும் தடுக்கிறது.
  • ஒரு ஸ்பூன் பட்டை பொடியை ஒரு டம்ளர் சுடுநீரில் கலந்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் செரிமான பிரச்சனையால் சந்திக்கும் அசௌகரியங்கள் மற்றும் வாய்வு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
  • நீங்கள் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளை சந்தித்தால், சிறிது சோம்பை தட்டி, ஒரு டம்ளர் சுடுநீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து வடிகட்டி குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • வாய்வுத் தொல்லையால் மிகவும் அவஸ்தைப்படுபவர்கள், சிறிது பார்ஸ்லியை நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, ஓரளவு குளிர்ந்த பின் வடிகட்டி குடிக்க , உடனடி நிவாரணம் கிடைப்பதைக் காணலாம்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *