Connect with us

Health

இந்த பழத்தின் தோலில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளதாம்! இனி தூக்கி எறிய வேண்டாம்

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டு சத்துள்ள பலமாக விளங்குகின்றது.

ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

சாதாரணமாகவே ஆரஞ்சுப் பழத்தை ஜுஸ் போட்டுக் குடிக்கவோ அல்லது சுவையாக அதன் சுளையைச் சாப்பிடவோ தான் பயன்படுத்துவோம்.

ஆனால் அதன் தோலைக் கண்டு கொள்ள மாட்டோம். உண்மையில் ஆரஞ்சு தோலும் பல வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.

அந்தவகையில் தற்போது ஆரஞ்சுப் பழம் தோலில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஆரஞ்சுப் பழத்தின் தோலில் கொழுப்புகளைக் குறைக்கும் குணங்களைக் கொண்டுள்ள சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்த சத்துக்களைக் கொண்டு நமது உடலிலுள்ள LDL அல்லது ‘மோசமான’ கொழுப்புகளை எதிர்த்துப் போராடி, இதயத்திற்கும் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்த்திட முடியும்.
  • ஆக்ஸிஜன் இல்லாத கிருமிகளை விரட்டுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான செல்களிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் குணத்தையும் ஆரஞ்சுப் பழத்தோல் கொண்டுள்ளது. இதன் மூலம் புற்றுநோயை வளர்க்கும் செல்களின் வளர்ச்சி முழுமையாகத் தவிர்க்கப்படுகிறது.
  • ஆரஞ்சுப் பழத்திலுள்ள சுறுசுறுப்பான வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவிகின்றது. சுமார் 20 நாட்களுக்கு ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தி வந்தால், நெஞ்செரிச்சல் சரியாகிவிடும்.
  • எரிச்சலூட்டும் வயிற்று நோயை (Irritable Bowel Syndrome) குணப்படுத்தவும், மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் ஆரஞ்சுப் பழத்தோல் பெரிதும் உதவுகிறது. ஆரஞ்சுப் பழத்தோலைக் கொண்டு தயார் செய்யும் தேநீருக்கு, நமது செரிமான உறுப்புகளை உறுதிப்படுத்தும் குணமும் உண்டு.
  • ஆரஞ்சுப் பழத்தோலில் அபரிமிதமாகக் குவிந்து கிடக்கும் வைட்டமின் சி ஒரு மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சத்தாகும். ஆரஞ்சு பழத்தின் வைட்டமின் சி-யில் உள்ள ஆக்சிஜன் எதிர்ப்பு பொருட்கள் மூச்சுக்குழாய் அழற்சி ,சளி, ப்ளூ, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து விடுபட பெரிதும் உதவுகின்றன.
  • ஆரஞ்சுப் பழத்தோலிலிருந்து எடுக்கப்பட்ட சத்துக்கள் அஜீரணம் உட்பட பல்வேறு வகையான ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்த உதவி செய்துள்ளன. இந்த தோலிலுள்ள உணவுக்கான நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதால், ஜீரண அமைப்பு நன்றாக இயங்கும்.
  • ஆரஞ்சுப் பழத்தோலை பசையாகவோ அல்லது நேரடியாக தோலை பற்களின் மீதோ தேய்ப்பதனால் மஞ்சள் கறை படிந்துள்ள பற்களை பளிச்சிட உதவுகின்றது.
  • ஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை தோலில் தடவிக் கொள்ளும் போது, தோல் பகுதி மென்மையாக மாறவும் மற்றும் கருப்பான கறைகள் மறையவும் கூடும்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *