Connect with us

Health

கை, கால், முகத்தில் உள்ள முடி மாயமாய் மறைய வைக்கனுமா? இதைக் கொண்டு 5 நிமிடம் மசாஜ் செய்யுங்க

நம்மில் சில பெண்கள் தேவையற்ற முடியை நீக்க சிரமப்படுவதுண்டு.

முன்பெல்லாம் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்தது. ஆதலால் இயற்கையாகவே கால், கைகளில் அதிக முடி வளர்ச்சி பெண்களுக்கு இருக்காது

ஆனால் சருமத்தில் உள்ள முடியை நீக்குவதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன.

இதில் ஷேவிங், ,வாக்சிங் ,கிரீம் போட்டு முடியை நீக்குவது, லேசர் சிகிச்சையும் செய்து கொள்கின்றனர்.

இது சில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.

அந்தவகையில் பக்கவிளைவுகள் எதுவுமின்றி எப்படி கால், கை, முகத்தில் உள்ள முடிகளை நீக்கலாம் என பார்ப்போம்

  • 1 டேபிள் ஸ்பூன் அயோடின் 2% மற்றும் 1 கப் பேபி ஆயிலை ஒன்றாக கலந்து பின் அதை முடி உள்ள கை, கால் பகுதிகளில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் அப்பகுதிகளில் உள்ள முடி மாயமாய் மறைவதோடு, இனிமேல் அப்பகுதியில் முடியின் வளர்ச்சியும் குறைய ஆரம்பித்து, நாளடைவில் வளராமல் நின்றுவிடும்.
  • 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 10 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து, முடியுள்ள கை, கால், முகப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் கழித்து, நீர் பயன்படுத்தி கைகளாய் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வர, முடி நீங்குவதோடு, முடியின் வளர்ச்சியும் நின்றுவிடும்.
  • ஒரு பௌல் துவரம் பருப்பை நீரில் ஒரு இரவு முழுவதும் ஊற வைத்துக்பின் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோலை நீக்கி துண்டுகளாக்கி சாறு எடுத்து மிக்ஸியில் ஊற வைத்த துவரம் பருப்பை போட்டு அரைத்துக் அடுத்து அதில் உருளைக்கிழங்கு சாற்றினை சேர்த்து கலந்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பின் அந்த கலவையை முடியுள்ள பகுதிகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி கைகளால் மென்மையாக தேய்த்து கழுவ, முடி உதிர ஆரம்பிக்கும். இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்ய முடியின் வளர்ச்சியை தடுக்கலாம்.
  • ஒரு முட்டையை உடைத்து, வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, கை, கால், முகப் பகுதியில் தடவி 20-25 நிமிடம் கழித்து உரித்து எடுக்கவும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1-2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளர்ந்துள்ள பகுதிகளில் தடவி மென்மையாக தேய்த்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வர, முடியின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
  • பப்பாளியின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, அரைத்துக் கொள்ள வேண்டும். பின் 2 டேபிள் ஸ்பூன் பப்பாளி பேஸ்ட்டுடன், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகம், கை, கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை மேற்கொள்ள வேண்டும்.
  • 1/2 கப் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் பிரஷ் க்ரீம் மற்றும் 1/2 கப் பால் சேர்த்து கலந்து, முடியுள்ள கை, கால், முகப் பகுதிகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பேஸ்ட் நன்கு காய்ந்த பின் நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்ய நல்ல மாற்றத்தைக் காணலாம்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *