Connect with us

Health

யாராலும் கணிக்க முடியாத உயிர் கொல்லி நோயை ஏற்படுத்தும் கொரோனா? ஆராச்சியாளர்கள் வெளியிட்ட புதிய தகவல்

கோவிட் -19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலருக்கு நீரிழிவு நோய் பாதிக்கப்பு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக, யாராலும் கணிக்க முடியாத நோய் இது என்பதை அனைவரும் அறிவீர்கள்.

அதுமட்டுமன்றி, இந்த வைரஸானது தனது குணத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கிறது. அதுதான், விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு கடினமான சவாலாகவே உள்ளது.

புதிய ஆய்வு

புதிய ஆய்வில், கோவிட்-19- ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடானது, ஆரோக்கியமானவர்களுக்கும் நீரிழிவு நோயைத் தூண்டக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, ஏற்கனவே இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

லண்டனின் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த குறுகிய காலத்தில் புதிய கொரோனா வைரஸுடனான மனித தொடர்புகளின் அடிப்படையில், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை வைரஸ் பாதிக்கும் சரியான வழிமுறை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

நீரிழிவு நோய் மிகவும் பரவலான, நாள்பட்ட நோய்களில் ஒன்றாகும். மேலும் இரண்டு தொற்றுநோய்களுக்கு இடையிலான தவிர்க்க முடியாத மோதலின் விளைவுகளை ஆராய்ச்சியாளர்கள் இப்போது தான் உணர்ந்துள்ளனர்.

இத்தகைய நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய நீரிழிவு நோயின் கடுமையான வெளிப்பாடானது, டைப் 1, டைப் 2 அல்லது நீரிழிவு நோயின் புதிய வடிவத்தைக் குறிக்கிறதா என்பது குறித்து தங்களுக்குத் தெரியவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நீரிழிவு நோயை உருவாக்கும் கோவிட்-19
  • கோவிடியாப் ரெஜிஸ்ட்ரி’ என்ற சர்வதேச ஆராய்ச்சித் திட்டம், கோவிட் -19 வழக்குகளைக் கண்டறியும் உலகளாவிய பதிவேட்டை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.
  • இது 17 நீரிழிவு நோய் நிபுணர்களால், சமீபத்தில் இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் நியூ மெடிசன் ஜர்னலில் வெளியிடப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கோவிட்-19 நோயாளிகளுக்கு, நீரிழிவு நோயின் வெளிப்பாடுகளின் அளவையும், சிறப்பியல்புகளையும் புரிந்து கொள்வதும், வைரஸ் தொற்றுகளின் போதோ அல்லது அதற்குப் பின்போ பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும், கண்காணித்திடவும் சிறந்த உத்திகளை கையாளுவதே இந்த பதிவேட்டின் ஒரே நோக்கமாகும்.
  • இதுவரை கவனிக்கப்பட்டதில், கோவிட்-19-க்கும் நீரிழிவு நோய்க்கும் இடையிலான இரு திசை உறவைக் காட்டுகின்றன.
  • ஒருபுறம், முன்பே இருக்கும் நீரிழிவு நோயானது கோவிட்-19-ஐ தீவிரமடைய செய்வதோடு, இறப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது. இந்த நோயால் இறந்த நோயாளிகளில் 20 முதல் 30 சதவீதம் பேருக்கும் நீரிழிவு நோய் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
  • ஆனால் மறுபுறம், புதிதாக ஏற்படக்கூடிய நீரிழிவு நோய் மற்றும் முன்பே இருக்கும் நீரிழிவு நோயின் மாறுபட்ட வளர்சிதை மாற்ற சிக்கல்களான, உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது உட்பட கோவிட்-19 -ஆல் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படுகின்றன. ஆனால் கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் சார்ஸ்-கோவ்-2 என்ற வைரஸ் நீரிழிவு நோயை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து இன்னும் தெளிவாக எதுவும் தெரியவில்லை.
COVID-19 குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தின் சிக்கலான செயலிழப்புகளை ஏற்படுத்துகிறது

வைரஸ் மனித உயிரணுக்களுக்குள் நுழைய அனுமதிக்கும் SARS-Cov-2 உடன் பிணைக்கும் ACE-2 என்ற புரதம் நுரையீரலில் மட்டுமல்ல, கணையம், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றங்களில் ஈடுபடும் உறுப்புகள் மற்றும் திசுக்களான சிறு குடல், கொழுப்பு திசு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய பகுதிகளிலும் அமைந்துள்ளதை முந்தைய ஆராய்ச்சிகள் காட்டுகிறன்றன.

இந்த திசுக்களுக்குள் நுழைவதன் மூலம், கொரோனா வைரஸ் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தின் பல சிக்கலான செயலிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பொதுவாக வைரஸ் நோய்த்தொற்றுகள் டைப் 1 நீரிழிவு நோயைத் தூண்டக்கூடும் என்பதும் பல ஆண்டுகளாகவே அறியப்பட்ட ஒன்று.

கோவிட்-19 தொடர்பான நீரிழிவு நோய் எவ்வாறு உருவாகிறது என்பதைப் புரிந்து கொள்ள இன்சுலின் சுரப்பு திறன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் ஆட்டோ இம்யூன் ஆன்டிபாடி நிலை ஆகியவற்றை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் வகையில், வழக்கமான சேகரிக்கப்பட்ட மருத்துவ தரவுகளின் பதிவேட்டில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

முடிவு
  1. கொரோனாவிற்கு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
  2. எனவே, மருந்தை கண்டுபிடிக்கும் வரையில் நம்மையும், நம் குடும்பத்தாரையும் நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும்.
  3. அப்பொழுது தான் அதன் விளைவுகளில் இருந்து தப்ப முடியும். நிபுணர்கள், மருத்துவர்கள் அறிவுரைகளை கேட்டு நடப்பதன் மூலம், வைரஸ் தாக்குதலில் இருந்து முடிந்த வரை நம்மால் தப்பிக்க முடியும் என்பதையும் மட்டும் மறவாதீர்கள்.
  4. இதை பற்றி முழுவதுமாக அறியாதவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நம் சமூகத்தை இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து காத்திடலாம்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *