Connect with us

Health

ஆஸ்துமா வீசிங் இருமல் மூச்சிரைப்பு, முகத்தில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக குணமாக ஒரு பூ போதும்

நம் இந்துக்களின் விழாவான விநாயகர் சதுர்த்திக்கு எருக்கன் செடியின் பூ மொட்டை மாலையாக சாமிக்கு அணிவிப்பார்கள். நம் சாதாரணமாக நினைக்கும் எருக்கன் செடியில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பல நோய்களுக்கு அதிமருந்தாக எருக்கன் செடி பயன்படுகிறது.

இந்த வெண்ணிற எருக்கன் செடி உடலில் ஏற்படும் புண், தீக்காயங்கள், பாத வெடிப்புகள், நகங்களில் ஏற்படும் சொத்தைகள் இவற்றையெல்லாம் மருந்தாக பயன்படுகிறது.இந்த எருக்கன் செடி சாதாரண இடங்களிலும் இவை தானாக வளரக்கூடியவை. வறட்சி காலத்திலும் நன்கு வளரக்கூடிய தாவம் இது. எருக்கன் பூ பல நோய்களை விரட்டியடிக்கும் மருத்துவக் குணம் கொண்டது.

இதன் பால் தீ போல சுடும். இதன் பால் பட்ட இடம் புண்ணாகும். வயிற்றில் உள்ள புழுக்களைக் கொல்லும். விஷக்கடிகளை இச்செடி முற்றிலும் குணமாக்கும். பயிர்களுக்கு நல்ல எதிர்ப்பாற்றலை கொடுக்கும். இலை நஞ்சு நீக்கல் வாந்தியுண்டாக்குதல் பித்தம் பெருக்குதல் வீக்கம் கட்டிகளைக் கரைத்து வேதனை குறைதல் ஆகிய குணங்களை உடையது.

அதன் பயன்களை இப்போது பார்ப்போம் :

இந்த நிற எருக்கன் செடியில் உள்ள பூவின் நடு நரம்புகளை நீக்கிவிட்டு அதன் வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் இரைப்பு நோய் வலி அதிகரிக்கும் போது ஒரு உருண்டை சாப்பிட்டு நீர் அருந்தினால் உடனே வலி தணியும் இது முற்றலும் உண்மை .

அடுத்ததாக 10 கிராம் இஞ்சி, 3 வெள்ளெருக்கன் பூ, 6 மிளகு இவற்றை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி அதனை தினம் இருவேளை பருகி வந்தால் இரைப்பை நோய் குணமாகிவிடும்.

கட்டிகள் குறைய எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி வீக்கம், கட்டிகள் மீது வைத்துக்கட்ட வீக்கம், கட்டி குறையும்.

உங்களுக்கு ஏதேனும் ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வந்தால் சீக்கிரம் புண்கள் ஆறிவிடும்.

பாம்பு கடிக்கும் நல்ல மருந்து.நல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும். இதனால் பாம்பு கடியின் விஷம் இறங்கிவிடும்.இதன் பின்னர் மருந்துவரிடம் சென்று சிகிச்சை அளிப்பது நல்லது தேவையான சிகிச்சை அளிக்கலாம்.

இலையும் பயனளிக்கும் எருக்கன் செடியின் இலையை அரைத்து 5 கிராம் அளவு பாலில் சாப்பிட்டு வந்தால் கடிவாயில் கட்டினால் தேள், பாம்பின் விஷங்கள் இறங்கும். எலிக் கடிக்குக் கொடுக்கலாம்.பழுத்த இலையை குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து, வேங்கைச்சான்கள் அல்லது சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து, ஒத்தடம் கொடுத்துவந்தால் குதிகால் வலி குணமடையும்.

20 மி.லி. சிற்றாமணக்ககு எண்ணெயில் 3 – 5 துளி எருக்கன் பால் விட்டுக் கொடுத்தால் மலச்சிக்கல் தீரும்.சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, கொக்கிப் புழு இருந்து கொண்டு வயிற்று வலியை உண்டாக்கும். 5 கிராம் தேனில் 3 துளி இதன் இலைச் சாறு விட்டு மத்தித்துக் கொடுக்க புழுக்கள் வெளியேறும் குழந்தைகளுக்கு அருமருந்து.

காது வலியும் எருக்கன் இலைச் சாறு 50 மி.லி.கலந்து வைக்கவும். இதில் வசம்பு, பெருங்காயம், இலவங்கம், பூண்டு வகைக்கு 5 கிராம் அளவு போட்டு காய்ச்சி வடித்து வைக்கவும். இதனைச் சொட்டு மருந்தாகக்காதில் விட காதில் சீழ் வடிதல், குருதி கசிதல், காதில் எழுச்சியினால் வரும் வலிகளை குணமாக்கும்.

எருக்கன் இலையில் வெட்டுக்கிளி எச்சமிட்டிருக்கும். எருக்கன் செடி இலையை எடுத்து உலர்த்திய பொடி 30 கிராம், மிளகுத்தூள் 30 கிராம், உந்தாமணி இலைத்தூள் 30 கிராம் சேர்த்து இந்த சூரணத்தை மூக்கில் நசியமிட பொடி போடுவது போல் உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம், இலவங்கம், குங்கும்ப்பூ, கோரோசனை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து உலர்த்தி வைக்கவும். காலை, மாலை ஒரு மாத்திரையை தேனில் சாப்பிட்டு வந்தால் 48 முதல் 96 நாளில் ஆஸ்த்துமா, இரைப்பு, இருமல், காசம், ஜன்னி எல்லாம் சரியாகும் இந்த எருக்கன் செடியை சரியாக பயன்படுத்துங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *