Connect with us

Health

நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்கும் மூலிகை காபி,சகல நோய்களையும் துரத்தி அடிக்கும்

இன்றைய கால சூழ்நிலையில் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ அருந்தினால்தான் உடலில் புத்துணர்வும் சுறுசுறுப்பும் ஏற்படும் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம். இது மேலை நாட்டு கலாச்சார பழக்கமாகும்.

காபி, டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி.

ஆரோக்கியமான உடல் ஆரோக்கியமான வயிற்றைக் கொண்டிருக்கும். நம் வயிற்றுக்குள் வாழும் நுண்ணுயிர்களை ஒட்டுமொத்தமாக நுண்ணுயிர்த் தொகுதி என்று அழைப்பார்கள். கரோனா வைரஸ் போன்ற நோய்க்கிருமிகளை நம் உடல் எதிர்கொள்வதில் இந்த நுண்ணுயிர்த் தொகுதி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

ஆகவேதான், ஆரோக்கியமான வயிற்றுப் பகுதியைப் பராமரிப்பது முக்கியம். அதுதான், நுரையீரலையும் சுவாச மண்டலத்தையும் சேதப்படுத்தக்கூடிய செரிமானக் கோளாறைத் தடுக்க உதவும்.

இதுதான் நமது நோய் எதிர்ப்பு சக்தி மீது நாம் கவனம் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணம். வயிற்று நுண்ணுயிர்த் தொகுதிகளை நல்ல உணவுத் திட்டத்தைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காபி டீக்கு பதிலாக மூலிகை காபி (தேவையான மூலிகை பொருட்கள்)

  1. ஏலரிசி – 25-கிராம்.
  2. வால்மிளகு – 50 கிராம்.
  3. சீரகம் – 100 கிராம்.
  4. மிளகு – 200 கிராம்.

இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து கொள்ளவும்.இது அருகம் புல் காபிக்கு பயன்படும் பொடி ஆகும்.

நீண்ட கொடி அருகம்புல்லை வேர், தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500- மிலி நீர் விட்டு அடுப்பில்வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2- டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி அளவில் வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு வரலாம்.

காபி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக இருக்கும். இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம் பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன.

இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது. நரம்புத்தளர்ச்சி நீங்கும், அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும். குடல் சுத்தமாகும், மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகுகின்றது.

உடலின் உட்சூடு மறையும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் சீராகும், வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் யாவும் குணமாகும்.

குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள், கணை, மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்)ஏற்படாது. பசி நன்கு எடுக்கும். சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *