Connect with us

Food

உலகில் மிக அதிக விலை உயர்ந்த பழங்கள்

உலகில் பழங்கள் என்றாலே அதன் விலையும் அந்த பழங்களின் முக்கியத்துவத்தைப் பொறுத்தே அமைந்துள்ளது. ஆனால் இந்த கருத்து நம்முடைய இந்த பதிவிற்கு ஒரு விதிவிலக்காக அமையும் என்பது இப்பதிவை படித்ததும் நீங்களே அறிவீர்கள்.

பல லட்சங்கள் முதலீடு செய்தால் தான் ஒரு பழக்கடையை வைக்க இயலும். ஆனால் ஒரு பாக்ஸ் பழத்தை அல்லது ஒரு பழத்தை லட்சம் ருபாய் கொடுத்து வாங்கியதுண்டா? அப்படி உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கக்கூடிய பழங்களை பற்றி இப்பதிவில் காண்போம்.

1 . சிக்காய்க்கி ஆப்பிள்
ஜப்பான் மொழியில் சிக்காய்க்கி என்றால் “உலகிலேயே சிறந்தது” என்று அர்த்தம். எனவே ஜப்பான் மக்கள் இந்த ஆப்பிள் பழத்தை உலகிலேயே சிறந்த ஆப்பிள் என அழைக்கின்றனர். இந்த மிக பெரியதாகவும் ஒரு ஆப்பிள் சுமார் 1 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும். இந்த பழத்தை வெட்டினால் உள்ளெ சிவப்பாக இருக்குமாம். இந்த ஆப்பிள் 1100 டாலருக்கு விக்கப்படுகின்றது. இது நம்ம நாட்டின் மதிப்புப்படி ஒரு ஆப்பிள் 6000 ரூபாய்கள்.

2 . லாஸ்ட் கார்டன் ஆப் ஹெலிகாம் பைனாப்பிள் (Last garden of Heligam pineapple )
லாஸ்ட் கார்டன் ஆப் ஹெலிகாம் பைனாப்பிள் என்பது ஒரு அண்ணாச்சிப் பழ வகை ஆகும். இது தான் உலகிலேயே அதிக விலை உயர்ந்த அண்ணாச்சிப் பழம் ஆகும். இங்கிலாந்தில் உள்ள ஹெலிகாம் லாஸ்ட் என்னும் தோட்டத்தில் மட்டும் தான் இந்த பழம் கிடைக்கிறது. இந்த பழத்தை அறுத்துப் பார்த்தால் உள்ளே அதிக சிவப்பு நிறம் கொண்டதாக இருக்கும். அதன் சுவையோ மிகவும் இனிப்பாக இருக்குமாம். ஆனால் இதன் ஒரு பழத்தின் விலை 7௦,௦௦௦ (எழுபதாயிரம்) ருபாய்.

3 .டையோ நோ டமங்கோ மேங்கோ (Taiyo no tamango mango )
டையோ நோ டமங்கோ மேங்கோ உலகிலேயே அதிக விலை கொண்ட மாம்பழம் ஆகும். இந்த மாம்பழம் பார்க்க மிகவும் பெரியதாகவும், சிவந்தும் அழகாக இருக்கும். இந்த மாம்பழம் ஒவ்வொன்றையும் ஒரு அழகான அட்டைப் பெட்டியில் பேக்கிங் செய்து, உடன் அந்த பழத்தைக் குறித்த செய்திகள் அடங்கிய ஒரு அட்டையையும் (Catlog ) இணைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்தப்பழத்தை யாரும் பார்ப்பதில்லை. ஆனால் அந்த பழம் பழுக்கும் பொது, அதனை சுற்றி ஒரு வலையை கட்டிவைப்பர், அந்த பழம் முழுவதும் பழுத்து அது தானாக அந்த வலையில் விழுந்ததும் தான் அதை எடுத்து வந்து விற்பனை செய்வார்களாம். இதன் ஒரு பழத்தின் விலை 7000 ரூபாய்கள். இந்த பழத்தில் மிகப்பெரிதான பழத்தை ஒவ்வொரு வருடமும் ஏலம் விடுவார்களாம். இதில் கடந்த வருடம் 2 மாம்பழத்தை 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

4 . கிங்சிங் ஃப்ரூட் ( Ginseng Fruits )
இது புத்தர் வடிவில் இருக்கும். சீன நாட்டில் உள்ள லெகாங்கி கிராமத்தில் தான் இந்த பழம் விளைகிறது. இது புத்தர் வடிவில் இருப்பதால் அதனை புத்தர் பழம் என்றே அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த பழத்தை சாப்பிட்டால் அதிக நாள் உயர் வாழ இயலும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால் அவர்கள் ஒரு பழத்தை 10 ஆயிரம் ருபாய் கொடுத்து வாங்கி சாப்பிடுகிறார்களாம்.
இன்னும் ஒரு அதிர்ச்சி என்னவென்றால் நம் ஊரில் கிடைக்கும் பேரிக்காய் தான் இந்த பழம். இது வித்தியாசமான வடிவில் இருப்பதால் தான் இதன் விளையும் அதிகமாக இருக்கிறது.

5 .சதுர வடிவ தர்பூசணி பழம்.
இது நம் ஊரில் கிடைக்கும் சாதாரண தர்பூசணி பழம் தான். ஆனால் இது சதுர வடிவில் இருப்பதால் இதன் ஒரு பழத்தின் விலை 14 ஆயிரம் ருபாய்கள் ஆகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *