Connect with us

Health

இந்த இலையின் ரகசியம் தெரிந்தால் விட்டுவிடமாட்டீங்க இந்த கொடி உங்கள் வீட்டு அருகில் உள்ளதா?

சுழன்று சுழன்று ஏறக்கூடிய அழகிய சுழல்கொடி உத்தாமணி! கொத்தாய்ப் பூக்கும் உத்தாமணியின் மலர்கள் காற்றில் அசையும்போது, ‘மணி’ அடித்து நம்மை வரவேற்பதைப் போன்ற தோற்றத்தை அளிக்கும். கடந்த தலைமுறையில் ‘கூகுள்’ வசதி இருந்திருந்தால், ‘இரைப்பு, சளி, இருமல் போன்ற தொந்தரவுகளுக்கு உடனடி தீர்வைக் கொடுக்க, அதிகம் தேடப்பட்ட தாவரமாக உத்தாமணியே இருந்திருக்கும். அது குழந்தைகள் நலனுக்கான முத்தான மூலிகையும் கூட!

பெயர்க்காரணம்: வேலிப்பருத்தி, உத்தமமாகாணி, உத்தமக்கன்னிகை, அச்சாணி மூலி, உத்தமதாளி போன்ற வேறு பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. காய் முற்றி வெடிக்கும்போது, உள்ளிருக்கும் இதன் ‘பஞ்சு சூழ் விதைகள்’ காற்றில் மிதந்து வேலியோரங்களில் விழுந்து கொடியாகப் படரும். இதன் காரணமாக இதற்கு ‘வேலிப்பருத்தி’ எனும் பெயர் ஏற்பட்டிருக்கிறது.

அடையாளம்: இதன் இதய வடிவ இலைகளைத் தொடும்போது மென்மையான உணர்வைக் கொடுப்பதோடு, இலைக் காம்பைக் கிள்ளினால் பால் வெளியேறும். சிறு முட்களைக் கொண்ட காய்களை வைத்து இதை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். ‘பெர்குலாரியா டேமியா’ (Pergularia daemia) எனும் தாவரவியல் பெயர் கொண்டது. ‘அஸ்கிலிபிடேசியே’ (Asclepiadaceae) குடும்பத்தைச் சார்ந்தது. டானின்கள் (Tannins), ஃப்ளேவனாய்ட்கள் (Flavanoids), புரதங்கள் போன்ற நலக்கூறுகள் இதில் உள்ளன.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேலியோரங்களில் படர்ந்து கிடக்கும் அற்புதமான மூலிகைதான் வேலிப்பருத்து. இது இதய வடிவ இலைகளை கொண்டுள்ளது. இதற்கு ‘உத்தாமணி’ என்ற பெயரும் உண்டு. சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் உத்தாமணி என்றே குறிப்பிடுகிறார்கள்.
ஆஸ்துமா, வீசிங், பித்தம், கால் கை குடைச்சல், ரத்த அழுத்தம் போன்ற மேலும் பல வியாதிகளை போக்கவல்லது வேலிப்பருத்தி. இதன் வேர், இலை ஆகியவை மருத்துவ பயனுடையது.

வேலிப்பருத்தி இலைச்சாறுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாதவலி, வீக்கம் குணமாகும். தொடக்க நிலையில் இருக்கும் யானைக்கால் நோய் இருந்தால் 48 நாட்களில் குணமாகும்.

5 கிராம் அலவு வெலிப்பருத்து வேரை பாலில் அரைத்து கலக்கி காலையில் 3 நாட்களுக்கு கொடுக்க கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.

இதன் வேரை உலர்த்தி தூள் செய்து 2 சிட்டிகை அளவுவரை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளின் வாயு நீங்கி பேதியாகும். பேதியுடன் பூச்சி, கிருமிகள் நீங்கும். வேலிப்பருத்தி இலையை வதக்கி துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க கீல்வாதம், முடக்கு வாதம், வாத குடைச்சல், இடுப்பு வலி முதலியன குணமாகும்.

குழந்தைகளுக்கு நுரையீரலில் கபம் அதிகரித்து சுவாசம் மிகுந்திருந்தால் வேலிப்ப்பருத்தி இலையையும், துளசியும் சேர்த்து அதனுடன் கல்உப்பு ஒன்று சேர்த்து நன்றாக கசக்கி பிழிந்தெடுத்த சாற்றில் 1 தேக்கரண்டி அளவு கொடுக்க சிறிது நேரத்தில் கபம் வெளியாகும்.

4 Comments

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *