Connect with us

Top

கொசுக்களை விரட்டும் இதை 1 முறை செய்தால், வீட்டிலுள்ள அனைத்து கொசுக்களும் தப்பி ஓடும்….!

மழைக்காலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இது கடுமையான வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றினாலும் கூடவே ஒரு ஆபத்தையும் கொண்டு வருகிறது. அது தான் உங்களுக்கு தெரியுமே….கொசுவை பற்றி தான் பேசு கொண்டு இருக்கிறோம். மழைக்காலத்தில் தான் கொசுக்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்யும்.

மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா மற்றும் பல நோய்களை கொசுக்களினால் உண்டாகும். இது போன்ற கொசுக்களிடம் இருந்து நம்மை காத்து கொள்ள பல வகையான கொசு மருந்துகள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் இவற்றை இயற்கையான முறையிலே நாம் விரட்டி விடலாம். அப்படி கொசுக்களை விரட்ட உதவும் இயற்கையான வழிமுறைகளை தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம்.

மேலும் சில இதர வழிகள்

கொசுக்களிடம் இருந்து தப்பிக்க யூக்கலிப்டஸ் மற்றும் எலுமிச்சை எண்ணெய் பெரிதும் உதவுகிறது. யூக்கலிப்டஸ் மற்றும் எலுமிச்சை எண்ணெய் ஆகிய இரண்டிலும் சினியோல் என்ற பொருள் அமைந்துள்ளதால் இது ஆன்டிசெப்டிக்காகவும், பூச்சி விரட்டியாகவும் அமைகிறது. இதனை நம் சருமத்தில் தடவி கொள்வதினால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.

கொசுக்களை கொல்ல நம் அனைவரது வீட்டிலும் சுலபமாக கிடைக்க கூடிய ஒரு பொருள் தான் சாம்பிராணி. மரத்தில் இருந்து கிடைக்கப்பெறும் இந்த சாம்பிராணி பிற இயற்கை பொருட்களை காட்டிலும் கொசுக்களில் இருந்து நீண்ட நேர பாதுகாப்பை தருகிறது. உங்கள் வீட்டில் உள்ள கதவு மற்றும் ஜன்னல் ஆகிய அனைத்தையும் மூடி விட்டு சாம்பிராணியை கொளுத்தி வையுங்கள். பதினைந்து நிமிடங்கள் காத்திருந்த பிறகு கொசு இல்லாத வீட்டிற்குள் நீங்கள் நுழையலாம்.

பேரசைட்டாலஜி ரிசர்ச் ஜெர்னல் என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியாவது துளசி கொசு முட்டைகளை கொன்று கொசுக்களை விரட்டுவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஆயுர்வேதத்தை பொருத்த வரை உங்கள் வீட்டு ஜன்னலில் துளசி செடியை வளர்ப்பதன் மூலமே கொசுக்களை விரட்டி விட முடியும்.

கொசுக்களை எப்படி கொல்வது என தெரியாமல் நீங்கள் திகைத்து கொண்டிருந்தால் வேப்ப எண்ணெய் உங்களுக்கு உதவும். சம அளவு தேங்காய் எண்ணெயோடு வேப்ப எண்ணெயை கலந்து உடலில் தேய்த்து கொள்ளும் போது இது கொசு விரட்டியாக அமைகிறது. இது நமக்கு எட்டு மணி நேரம் வரை பாதுகாப்பு தரும்.

பல வகையான நோய்களை உண்டாக்கும் கொசுக்களை விரட்டும் இயற்கையான மற்றொரு பொருள் பூண்டு. இதன் மோசமான மணம் காரணமாக கொசுக்கள் பயந்து ஓடி விடும். கொசுக்களை உங்கள் வீட்டினுள் நுழைய விட கூடாது என நினைத்தால் பூண்டினை பயன்படுத்துங்கள். தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பூண்டினை போட்டு அந்த நீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். கொசு கடிக்காமல் இருக்க உங்கள் மீதும் தெளித்து கொள்ளலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *