Beauty
10தே நிமிடத்தில் கழுத்தில் அசிங்கமாக இருக்கும் கருமையை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
சிலருக்கு முகம் என்ன தான் அழகாகவும், நிறமாகவும் இருந்தாலும் கூட கழுத்தில் உள்ள கருவளையங்கள் அவர்களது அழகையே சீர்குலைப்பதாக இருக்கும். கழுத்தில் உள்ள கருமையானது, வெயிலில் அதிக நேரம் அலைவதாலும், செயின் போன்றவற்றை அணிவதாலும் அந்த இடத்தில் கருமையாகிவிடுகிறது.
இந்த கருமையை வேறும் சோப்பு கொண்டு போக்குவது கடினம். அதே சமயத்தில் நீங்கள் முகத்திற்கு என்ன தான் அலங்காரம் செய்து இருந்தாலும் கூட, கழுத்தில் கருமை இருந்தால் உங்களது முகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள். கழுத்து என்ன இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என்று தான் மனதிற்குள் நினைத்துக் கொள்வார்கள்… இத்தகைய சர்ம சங்கடமான நிலை உங்களுக்கு தேவை தானா?
எனவே தான் உங்களுக்காக இந்த பகுதியில் சில இயற்கை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி உங்களது கழுத்தில் உள்ள கருமையை போக்கிக் கொள்ளுங்கள்.
மேலும் சில குறிப்புகள்
கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.
பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.
முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.
பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.
கழுத்து கருமையை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.