Connect with us

Food

உடும்பு மாமிசத்தை சாப்பிடுகிறீர்களா? அப்படியென்றால் இந்த நிஜத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்

உடும்புப் பிடின்னு கேள்விப் பட்டிருப்பீங்களே. விடாது இறுக்கப் பிடித்துக் கொள்வதற்கு உடும்புப் பிடி என்று சொல்வதுண்டு. அப்படி என்ன விசேஷம் அந்த உடும்புப் பிடியில்?

அந்த நாள் காதல் கதைகளில் சொல்லுவார்கள். ஒரு ராஜ குமாரன் தன் காதெலியைக் காண, அந்தப்புரத்தின் உயர்ந்த மதில் சுவற்றைத் தாண்டிட உடும்பின் இடுப்பில் கயிற்றினைக் கட்டி அதைத் தூக்கி சுவற்றின் மீது எறிந்து அது கெட்டியாகச் சுவற்றைப் பிடித்துக் கொள்ள கயிற்றைய்ப் பிடித்துக் கொண்டு அவன் சுவற்றின் மீது ஏறினான் என்று. உடும்பின் கால்களும் அதன் கூரிய நகங்களும் அவ்வளவு வலுவானவை.

உடும்பு (இதை ஆங்கிலத்தில் Monitor lizard என்று அழைப்பார்கள்) ஊர்வனவான பல்லி, ஒணான், முதலை இனத்தைச் சேர்ந்தது. உடும்புகளில் சுமார் நூறு வகையான உடும்புகள் உள்ளன. சுமார் 8 அங்குல (20 சென்டி மீடர்) நீளமுள்ள உடும்பில் இருந்து பத்தடி (3 மீட்டர்) வரை நீளமுள்ள உடும்பு இனங்கள் வரை உள்ளன.

இப்படி பட்ட உடும்பின் இறைச்சியை சாப்பிடுபவரா நீங்கள் அப்படியென்றால் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்

உடும்பின் நாக்கு பாம்பின் நாக்கினைப் போன்றே நுனியில் பிளந்திருக்கும். அவ்வப்போது நாக்கை வெளியே துருத்தி இந்தப் புறமும் அந்தப் புறமுமாக ஆட்டிப் பின் உள் இழுத்துக் கொள்ளும். இது அப்படிச் செய்வது பாம்பினைப் போலவே தன் இரை சென்றதை நுகர்ந்து கண்டறிவதற்காக இருக்கலாம்.

அரசு தடை
உடும்பு இனம் அழிந்து வருவதால் அவ்வினத்தை பாதுகாக்க அரசு பிடிக்க, கொல்ல, உண்ண, அல்லது விற்பனை செய்ய தடை விதித்து உள்ளது. என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *