Connect with us

Food

10நிமிடத்தில் ஹெல்தியான Breakfast புதிய முறையில் செஞ்சி அசத்துங்க

வட இந்தியர்களின் விருப்ப உணவு சப்பாத்தி என்பது போல கேரளத்தில் அநேகமாக அனைவரும் விரும்பும் காலை உணவு என்னவென்றால் புட்டும் கடலையும்தான். அனைத்து டீக்கடை மற்றும் உணவகங்களில் கூட ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் புட்டு செய்து அடுக்கி வைத்திருப்பார்கள். சீப்பு சீப்பாக நேந்திரம்பழமும் தொங்க விடப் பட்டிருக்கும். பச்சைப் பயறையோ, கொண்டைக் கடலையோ புழுக்கி வைத்திருப்பார்கள். வருகிறவர்கள் எல்லாம் புட்டு வாங்குவார்கள். சிலர் அதில் நேந்திரம்பழத்தை உரித்து பிசைந்து ஆனந்தமாக உண்ணுவார்கள். மற்றும் சிலர், கொண்டைக்கடலை கறியோ அல்லது பச்சைபயறு சுண்டலையோ வாங்கி தொட்டு சாப்பிடுவார்கள்.

கேரளத்தில் பெரும்பாலான வீடுகளில் புட்டு செய்வதற்கான அரிசிப் பொடியைத் தாங்களே வீட்டில் தயாரித்துக் கொள்வார்கள். அதே நேரம் ரெடிமேட் புட்டுப்பொடியும் பல்வேறு பிராண்டுகளில் கடைகளில் கிடைக்கிறது. பாரம்பரியமான புட்டு என்றால் அது அரிசிப்புட்டுதான். ஆனால் இப்போது ராகி, கோதுமை, சோளம் என்று எல்லாவிதமான புட்டு மாவும் கடைகளில் கிடைக்கிறது. அரிசி புட்டு என்பது மாவுச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் யோசித்துதான் சாப்பிட வேண்டும். அவர்கள் ராகி, சோளம், சம்பா கோதுமை, சிகப்பரிசி போன்ற வகைகளை முயற்சி செய்யலாம்.

தேவையான பொருட்கள்

  • 1 ௧ப் சத்துமாவு
  • 1/2 ௧ப் நாட்டுசர்க்கரை
  • 1/2 ௧ப் தேங்காய் து௫வல்
  • 3ஏலக்காய் பொடித்து
  • உப்பு
  • தண்ணீர்

ஸ்டெப்ஸ்

  • சத்துமாவில் ஒ௫ சிட்டிகை உப்பு கலந்து விடவும். 1/2 டம்பளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தேவையான அளவு மட்டும் வெண்ணீரை சத்துமாவில் சேர்த்து புட்டு பதத்திற்கு பிசைந்து விடவும்
  • இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி ஆவி வ௫ம் வரை கொதிக்க வைத்து சத்துமாவை இட்லி தட்டில் அள்ளி வைத்து 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
  • அதில் தேங்காய் து௫வல் நாட்டுசர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி சூடாக சாப்பிடவும். சத்தான சத்துமாவு புட்டு
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *