Connect with us

Health

பாசிப்பயரை இப்படி செய்து போடுங்க சருமம் தங்கம் போல் பளபளக்க

அனைவருக்குமே தங்களது முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அதுவும் மெக்கப் எதுவும் போடாமலேயே முகம் பளிச்சிடும் அழகினை பெற வேண்டும் என்ற ஆசை நியாயமான ஒரு ஆசை தான்.. கெமிக்கல் பொருட்களை முகத்தில் அப்ளை செய்து முகத்தை சீரழிப்பதை விட இயற்கை பொருட்களை பயன்படுத்தி அழகு பெறுவது தான் உண்மையான அழகாகும்…

இயற்கை பொருட்களாலும் கெமிக்கல் பொருட்களை விட கூடுதல் அழகை உடனடியாக தர முடியும்.. அதுமட்டுமல்லாமல் இயற்கையான பொருட்கள் உங்களது அழகை சீரழியாமால் பாதுகாக்க வல்லது… இந்த பகுதியில் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முகத்தை எப்படி அழகுப்படுத்திக் கொள்வது என்பது பற்றி விரிவாக காணலாம்.

மஞ்சள் தூள், தயிர், பால், கடலை மாவு, பாசிப்பயறு மாவு போன்றவற்றை கொண்டே அழகை மேம்படுத்தி வந்தனர். பாசிப்பயறு மாவை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும்.

1 ஸ்பூன் பாசிப்பயறு மாவை, எடுத்து அதனுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதனை தொடர்ந்து செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகப்பருக்கள் மட்டுமின்றி அதன் தழும்புகளும் மறைந்து விடும்.

சில பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது பாசிப்பயறு மாவு மாஸ்க் தான். அதற்கு பாசிப்பயறு மாவில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கருமை விரைவில் போய்விடும்.

1 ஸ்பூன் பாசிப்பயறு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் சரும நிறம் அதிகரிக்கும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து பயன்படுத்தலாம்.

சில பெண்களுக்கு முகம் மற்றும் வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு பாசிப்பயறு மாவில் மஞ்சள் தூளை சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில் முடி வளரும் இடத்தில் தடவி ஊறவைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடியின் வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *