Health
சர்க்கரை நோய் தீர ஈசி டிப்ஸ்… ஒருவாரம் சாப்பிடுங்க!
நீரிழிவு நோய் தற்போது நாடு முழுவதும் அதிக அளவில் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பின்றி அனைவருக்கும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்பது தான் தற்போதைய பயம். இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? பெரும்பாலான காரணங்களாக கூறப்படுவது, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை தான்.
அதோடு மாறுபட்ட பணிகள், சரியான தூக்கமின்மை, உடற்பயிற்சி செய்யாமை போன்றவை உடலில் உள்ள ஹார்மோன்களை தொந்தரவு செய்து நீரிழிவு நோய்க்கு வழிவகுத்து விடுகின்றன.
நீரிழிவு நோயில் 2 வகை உள்ளன. டைப் 1 நீரிழிவு நோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய். இவற்றில் டைப் 1 நீரிழிவு நோய் எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படக்கூடும். உடலில் இன்சுலின் உற்பத்தி குறைவாகவோ அல்லது இன்சுலின் சுரப்பே இல்லாத போதோ ஏற்படக்கூடியது இது. டைப் 2 நீரிழிவு நோயானது பொதுவாக பெரியவர்களுக்கு காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் 90 சதவிகித பேர் இந்த வகையை சார்ந்தவர்கள். இது உடலில் சுரக்கும் இன்சுலின் பயன்படுத்தப்படாத போது ஏற்படக்கூடியது. இதற்காக செயற்கையாக இன்சுலின் மருந்துகள் வழங்கப்படும்.
சர்வதேச நீரிழிவு அறக்கட்டளையின் (ஐ.டி.எஃப்) கருத்துப்படி, உலகில் அளவில் மொத்தம் 463 மில்லியன் மக்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது. தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் மட்டும் 88 மில்லியன் மக்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 77 மில்லியன் மக்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் நீரிழிவு நோய் 8.9% என்று ஐ.டி.எஃப் கூறுகிறது. பொதுவாகவே, இந்த நோய் மரபணுக்கள் காரணமாக ஏற்படலாம். ஆனால் அவற்றை சீரான வாழ்க்கை முறை பழக்கங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் சிறுசிறு செயல்களே போதுமானது.
வழக்கமான உடற்பயிற்சி செய்யும் பழக்கமானது தொடரும் பட்சத்தில், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து கொள்வது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான இதயம், சிறப்பான சிறுநீரக செயல்பாடு மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை வழங்கிடக்கூடும். அதோடு, ஆரோக்கியமான உணவை உங்கள் அன்றாட உணவில் நாம் சேர்த்துக் கொள்வது பல அற்புதங்களை நிகழ்த்திடும்.
சுண்டைக்காயை காய்ச்சல் நேரத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன், காயங்களையும், புண்களையும் ஆற வைக்கும். மேலும் வாயுப் பிடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.
ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புச்சளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது.
சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும். பெண்களுக்கு நல்லது.
சர்க்கரை நோய் தான் உடல் நலப்பிரச்சனைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது. இதனை எளிதில் குறைக்க சில உணவுகள் பெரிதும் துணை புரிகின்றது. அதில் சுண்டக்காய் முக்கிய இடம் பெறுகின்றது. சுண்டக்காய் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து சர்க்கரை நோயாளிகளுக்கு குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகிறது.