Food
காலையில் ஓட்ஸ் இப்படி சாப்பிட்டால் உடல் எடை வேகமா குறையும்
ஓட்ஸில் விட்டமின் E, B6, B5 மற்றும் கனிமங்களான இரும்பு, செலினியம், மக்னீசியம், நார்ச்சத்து, காப்பர் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்கள் மிகுந்த ஓட்ஸை நீர் அல்லது பாலில் கொதிக்க வைத்து தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா? ஓட்ஸில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் நார்ச்சத்து, இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுத்து, கொழுப்பினை குறைக்க உதவுகிறது.
ஓட்ஸில் அதிகளவில் உள்ள நார்ச்சத்து, குடல் அசைவுகளை ஒழுங்குபடுத்தி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இரண்டாவது வகை நீரிழிவு நோயினால் உண்டாகும் ஆபத்துக்கள் அதிகரிக்காமல் குறைக்கிறது.
ஹார்மோன்கள் தொடர்பான மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.
நொதிகளின் செயல்பாட்டிற்கு உதவுவதுடன், இதய தசைகளை பாதுகாத்து, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கிறது. ஓட்ஸில் குறைந்த கலோரி உள்ளதால், இது பசியை குறைத்து, அதிகப்படியான உடல் எடையை குறைக்க உதவுகிறது.
ஓட்ஸ் சாப்பிடுவதால் தோல் அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்கி, சருமத்தின் Ph அளவை சீராக்கி, ஈரப்பதம் மிக்க மிருதுவான சருமமாக மாற்றுகிறது.
காலை உணவில் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுங்கள்: நன்மைகள் அதிகம்
காலை உணவுடன் முட்டை சாப்பிட்டு வருவது நல்லது. ஏனெனில் இதில் சரியான அளவில் புரோட்டின்களும், ஒமேகா 3 அமிலங்களும், வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலம் உள்ளது. மேலும் இவை உடலில் கலோரியின் அளவை குறைப்பதற்கு துணைபுரியும்.
பாலாடைக்கட்டி
பாலாடைக்கட்டி பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். பாலடைக்கட்டியுடன் சில தானியங்களை சேர்த்து சாப்பிடுவது மிகச்சிறந்த காலை உணவாகும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை செல்களுக்கு கடத்த உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஸ்டார்ச்சு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் கட்டுப்படுத்தும். எனவே தினமும் காலையில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
தர்ப்பூசணி
காலையில் வெறும் வயிற்றில் தர்ப்பூசணி சாப்பிடுவது நல்லது. அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கண்கள் மற்றும் இதயத்திற்கும் நல்லது.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி சர்க்கரை அளவை குறைக்கவும், அசாதாரண வளர்ச்சிதை மாற்றத்தை சரிசெய்யவும் பயன்படுகிறது. இதை ஓட்ஸ் அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
பாதாம்
பாதாம் பருப்பை தினமும் 6 வீதம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. அவை செரிமானத்தை எளிமைப்படுத்தும். அல்சர், வயிற்று கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். முதல்நாள் இரவில் ஊற வைத்து மறுநாள் சாப்பிட வேண்டும்.