Connect with us

Health

சளி, மூக்கில் நீர் வடிதல், சைனஸ் அலர்ஜி , இருமல் குணமடைய

மூக்கு ஒழுகுதல் என்பது நம் அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று. இதனை எளிதில் விரட்டி அடிக்க முடியும். மூக்கு ஒழுகுவது என்பது ஒருவருக்கு சளி பிடிக்கும்போது உண்டாகும் ஒரு நிலை ஆகும்.

இது ஏற்பட சில காரணங்கள் உண்டு. இதற்கான பொதுவான காரணம் கிருமி பாதிப்பு மற்றும் சளி. சில நேரங்களில் ஒவ்வாமை, ஹே காய்ச்சல் என்னும் தூசியால் உண்டாகும் சளிக் காய்ச்சல் மற்றும் இதர காரணங்களாலும் மூக்கு ஒழுகலாம்.

மூக்கு ஒழுகுதலைப் போக்க பல எளிய தீர்வுகள் இயற்கை முறையில் உள்ளன. அதனைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம். நீங்களும் இவற்றில் ஏதேனும் ஒன்றை முயற்சித்து உங்கள் பிரச்சனையை போக்கிக் கொள்ளலாம்.

சைனஸ் பிரச்னையை கவனிக்காமல் விட்டால், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் உள்ள சிற்றறைகளில் தேங்கிய நீர், மூளை வரை சென்று, மூளைக் காய்ச்சல் வர வாய்ப்பு ஏற்பட்டு விடும். நவீன மருத்துவ சிகிச்சைகள் உள்ளதால், மக்கள் பயப்படத் தேவையில்லை. வீடுகளில்,
மின் விசிறிகளில், குளிர்சாதன இயந்திரங்களில், துாசி தேங்காமல் பார்த்துக் கொண்டால், மூக்கில் ஒவ்வாமை ஏற்படாமல் சைனசிலிருந்து தப்பிக்கலாம்

சைனஸ் என்றால் என்ன?
நம் மூக்கைச் சுற்றி, எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை, சைனஸ் அறைகள் என்கிறோம். புருவத்தின் மேல் நெற்றியில், ‘பிரன்டனல்’ என்ற அறைகளும், சற்று கீழே, ‘எத்மாய்டு’ அறைகளும், மூக்கின் இருபுறமும் கன்னத்தில், ‘மேக்சிலரி’ என்ற, சிற்றறைகளும் உள்ளன. இந்த சிற்றறைகள், காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் ஏதாவது ஒரு அறையில், நீர் அல்லது சளி தங்கிய பின், சில காரணங்களால், அந்த அறை வாசல் அடைத்துக் கொள்வதால், சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது.

இதன் அறிகுறிகள் என்ன? மூக்கடைப்பு ஏற்படுவது ஏன்?
தலை பாரமாக இருத்தல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், அதிக தும்மல், தலைவலி ஆகியவை முக்கிய அறிகுறிகள்; முற்றிய நிலையில் தொண்டை வலியும் இருக்கும். சிற்றறைகளில் இருந்து வெளியே வர வேண்டிய நீர், சளியாக மாறி, கட்டியாக அடைத்துக் கொள்வதால், மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஒரு வாரம், மருந்து, மாத்திரை சாப்பிட்டால், சரியாகி விடும். தொடர்ந்து சளி இருக்குமானால், காது, மூக்கு, தொண்டை நிபுணரை சந்திப்பது நல்லது.

சைனஸ் வந்தால் தீர்ப்பது எப்படி?


சளி பரிசோதனை செய்து, என்ன பாதிப்பு என கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் நீட்டித்தால், எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்து, ‘சைனஸ்’ அடைப்பை சரி செய்யலாம். ஒரு சில நேரங்களில், சளி, கட்டியாகி விடும். மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது. இதற்கு, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரும். இதில், ‘எண்டோஸ்கோபி’ முறையில், அறுவைச் சிகிச்சை செய்து, சளி கட்டியை அகற்றி விடலாம்.

சில நேரங்களில் சூடான தேநீர் சளியின் தொல்லையில் இருந்து விடுபட உதவியாக இருக்கும். இதற்குக் காரணம், இதில் இருக்கும் வெப்பம் மற்றும் ஆவி, மூக்கடைப்பைப் போக்கி மூக்கை திறக்க உதவுகிறது.

மூலிகை தேநீரில் சில மூலிகை மற்றும் மூக்கடைப்பைப் போக்கும் பண்புகள் உண்டு. அழற்சி எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை நீக்க பண்புகள் நிறைந்த தேநீர் பருகலாம். செவ்வந்தி, இஞ்சி, புதினா போன்றவை சேர்க்கப்பட்ட தேநீர் உடலுக்கு நன்மைத் தரும்.

ஒரு கப் மூலிகை தேநீர் குறிப்பாக காபின் சேர்க்கப்படாததாக தயாரித்து அதனைப் பருகுவதற்கு முன் அதில் இருந்து வெளிவரும் ஆவியை நுகருங்கள். வறண்ட தொண்டை மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை பெரும்பாலும் இணைந்தே வரும். ஆகையால் மூலிகை தேநீர் பருகுவதால் வறண்ட தொண்டைக்கும் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

நீராவி பேஷியல்

சூடான ஆவியை நுகர்வதால் மூக்கு ஒழுகுதல் தடுக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பொதுவாக உண்டாகும் சளி தொந்தரவிற்கு ஆவியை நுகர்வதால் சிறந்த நிவாரணம் கிடைப்பதாக அறியப்படுகிறது. ஆவியை நுகர்வதால் ஒரு வாரத்தில் நிவாரணம் கிடைப்பதாகவும், அதனை செய்யாமல் விடும்போது ஒரு வாரத்திற்கு மேல் சளி தொந்தரவு இருப்பதாகவும் அறியப்படுகிறது.

தேநீர் கப்பில் வெளிவரும் ஆவியை நுகர்வதை விட நீராவி பேஷியலை முயற்ச்சிக்கலாம் அது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

1. ஒரு அகலமான கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். ஆவி வரும் வரை அந்த நீரை சூடாக்கவும். கொதிக்க வேண்டிய அவசியமில்லை.

2. அந்த ஆவி வெளிவரும்போது அதில் உங்கள் முகத்தை 20-30 நிமிடம் காட்டவும். உங்கள் மூக்கு வழியாக மூச்சை இழுத்து விடவும். தண்ணீர் மிகவும் சூடாக இருந்தால் ஒரு இடைவெளி விட்டு பின்பு இந்த செயலைத் தொடரவும்.

3. அதன் பின்னர், மூக்கில் உள்ள சளியை வெளியில் எடுக்கவும்.

தேவைப்பட்டால் மூக்கடைப்பை போக்கும் அத்தியாவசிய எண்ணெய் பயன்படுத்தியும் ஆவி பிடிக்கலாம். சூடான நீரில் ஓரிரு துளிகள் எண்ணெய் சேர்ப்பது போதுமானது.

தைல எண்ணெய், புதினா எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய், டீ ட்ரீ எண்ணெய், தீம் எண்ணெய், ஜாதிபத்திரி போன்றவை சிறந்த தீர்வுகளைத் தரும். இந்த தாவரங்களில் இருக்கும் மென்தால் மற்றும் தைமால் போன்ற கூறுகள் மூக்கடைப்பை போக்க உதவுகின்றன/

இந்த மூலிகைகள் அடங்கிய எண்ணெய் இல்லாவிட்டால் இந்த மூலிகைகளைக் காய வைத்தும் பயன்படுத்தலாம். மூலிகை தேநீர் தயாரிப்பில் இதனை சேர்த்து இதன் ஆவியை நுகரலாம். இதனால் நல்ல நன்மை கிடைக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *