Connect with us

Health

தேங்காய் சாப்பிட்டால் இதய நோய்கள் வருமா?

தேங்காய் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும், எனவே இதய மற்றும் உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது என்று ஒரு சாரரும். நல்ல கொழுப்பைத்தான் அதிகரிக்கச் செய்யும் ஆகவே சாப்பிடலாம் என்று ஒரு சாரரும் குழம்பிக் கொண்டிருப்பது நடைமுறையில் இருப்பதுதான். அறிவியல் பூரவமாகவே விஞ்ஞானிகள் இன்னும் தேங்காயை ஆய்விற்கு உட்புகுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மையே.

இந்த குழப்பமான நிலையில், தேங்காய் பால் மற்றும் தேங்காயை தாராளமாக உபயோகப்படுத்தலாம் ஆனால் தேங்காய் எண்ணெயில் நிறைவுறும் கொழுப்பு இருப்பதால் அதனை குறைவாக உபயோகப்படுத்தலாம் என அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷன் கூறுகின்றது. இந்த குழப்பங்களை தவிர்க்க முதலில் அவற்றின் குண நலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் தேங்காய் தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணெய் என தென்னையின் பாகங்களை பிரித்து அவற்றின் நன்மை தீமைகளை பட்டியிடலாம்.

தேங்காய் பாலில் அதிக புரதம் உள்ளது. இது அல்சர் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றும். நாம் தேங்காய் பாலை காய்கறிகளுடன் சமைப்பதால் தரமான சத்துக்களும் , நார்சத்தும் கிடைக்கப் பெறுவதால் அதிலுள்ள நிறைவுறும் கொழுப்பு சமன் படுத்தப்படுகின்றன. இதனால் தேங்காய் பாலில் சமைக்கப்படும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கும். அதோடு இவை HDL எனப்படும் நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது. இதனால் கொலஸ்ட்ரால் குறையும்.

  • தேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டம்.
  • தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது.
  • தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதைவிடச் சிறந்த ஒன்று இல்லை.
  • சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரைப் பருகுவதால் தணிக்க முடியும்.
  • முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம்.
  • வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது.
  • இளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமாணத்துக்கு மிகமிக ஏற்றது. குழந்தைகளுக்கும் இதனைப் பருகக் கொடுக்கலாம்.
  • வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் இளநீர் பருகினால் குணப்படும் வாய்ப்பு உள்ளது.
  • தீவிர வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100, 200 மில்லி இளநீரை தினமும் இரண்டு முறை அருந்தலாம்.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை நரம்பின் வழியாக செலுத்தலாம்.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.

சிறுநீரக தொற்று நோய்கள் குணமாக

மனிதர்களிலேயே மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி கூடிய நோய்களில் ஒன்று சிறுநீரக தொற்று நோய் ஆகும். இந்த நோய் ஏற்பட்டால் சிறுநீர்பை, சிறுநீர்க்குழாய், சிறுநீரகங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, அந்த நபர் ஒருவரை பாதிக்கப்பட்டு ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும் மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது. தேங்காயில் கிருமி நாசினி வேதிப்பொருட்கள் அதிகமுள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காயை மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு இந்த சிறுநீரக தொற்று நோய் படிப்படியாக குறைந்து சிறுநீரகம் மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் அனைத்தும் மீண்டும் பழைய ஆரோக்கியத்தை பெறுவதற்கு உதவுகிறது.

நீர்சத்து

கோடைக்காலங்களில் உடலில் நீர் மற்றும் உப்புச் சத்து இழப்பு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இக்காலங்களில் உடலில் நீர் சத்து மிகுதியாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கு தேங்காய் ஒரு சிறந்த நீர்ச்சத்தை வழங்கும் ஒரு உணவாக இருக்கிறது. தேங்காயில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற உடலுக்கு அத்தியாவசிய தாது சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அடிக்கடி தேங்காயை மென்று தின்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது. ரத்த ஓட்டத்தை சீரான அளவில் வைத்து உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *