Connect with us

Health

வாரமொரு முறை இதை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டுவர நெஞ்சு சளி வெளியேறி, நிம்மோனியாவில் இருந்து பாதுகாக்கும்.

மனிதனின் உடல் வியாதிகள் மட்டுமல்ல மன வியாதிகளுக்கும் மருந்தாகிறது. செந்நாயுருவி இலைகளை வாரமொருமுறை, சமையலில் கூட்டு போலவோ அல்லது கடைந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டுவர, இருமல் குறைந்து, நுரையீரலில் தேங்கியுள்ள சளி, உடலில் இருந்து வெளியேறும்.

செந்நாயுருவி வேரை பாலில் கொதிக்கவைத்து, நிழலில் உலர்த்தி, பின்னர் தூளாக்கி, தினமும் இரவுவேளைகளில், பாலில் கலந்து பருகிவர, அனைத்துவகை மன பாதிப்புகள், இதய படபடப்பு மற்றும் தூக்கமின்மை வியாதிகள் யாவும் விலகிவிடும்.

பற்களை பிடுங்கவேண்டிய கடும் பல்வலிக்கு, செந்நாயுருவி வேரை, பாறை உப்புடன் சேர்த்து பல்துலக்கிவர, பல் வலிகள் விரைவில் நீங்கிவிடும்.

செந்நாயுருவி வேரை, நல்லெண்ணையில் இட்டு, தைலம் போல நன்கு சுண்டியபின் சேகரித்துவைத்துக்கொண்டு, மூக்கில் சில துளிகள் விட்டுவர, தீராத தலைவலிகள் விரைவில் நீங்கிவிடும்.

நீண்ட நாட்களாக மலச்சிக்கல்களால் அல்லல்பட்டு வருபவர்கள், செந்நாயுருவி இலைகளை நீரில் நன்கு கொதிக்கவைத்து, குடிநீராக பருகிவர, எத்தகைய நாள்பட்ட மலச்சிக்கலும் நீங்கி, உடனே பேதியாகி வெளியேறும்.


செந்நாயுருவி இலைகளை வாரமொருமுறை, சமையலில் கூட்டு போலவோ அல்லது கடைந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டுவர, இருமல் குறைந்து, நுரையீரலில் தேங்கியுள்ள சளி, உடலில் இருந்து வெளியேறும்.

செந்நாயுருவி இலைகளுடன் இரு மடங்கு மிளகு சிறிது பனைவெல்லம் சேர்த்து, மையாக அரைத்து சாப்பிட்டுவர, எல்லாவகை ஜுரமும் விலகிவிடும்.

மிகத்தீவிர ஜுரத்துக்கு, செந்நாயுருவி இலைகளோடு ஜீரகம் சேர்த்து சூடாக்கி பருகிவர, கடும் ஜுரமும், மெல்ல விலகிவிடும்.

மேலும், மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகள், சரும வியாதிகள், பிறப்புறுப்பு வியாதிகள் போன்ற எண்ணற்ற வியாதிகளை, குணமாக்கி, மனிதனுக்கு நற்பலன்கள் அளிக்கும் இயல்புடைய “மாமுனி” என்று சித்தர்களால் போற்றப்படும் தெய்வீக மூலிகை, செந்நாயுருவி.

சில மருத்துவ குணங்கள்

  • செந்நாயுருவி வேரைப் பொடியாக்கி, அத்துடன் சிறிது மிளகுப்பொடி,தேன் கலந்து சாப்பிட, வறட்டு இருமல் விலகி, சுவாசப்பிரச்னைகள் சீராகும்.
  • செந்நாயுருவி இலைச் சாற்றில் சிறிது பெருங்காயம் கலந்து சாப்பிட, வயிற்றுவலிகள் தீரும்.
  • செந்நாயுருவி அரிசியை, வீட்டில் அரிசி கழுவிய நீரில் இலேசாக கொதிக்கவைத்து பருகிவர,
  • மூல வியாதிகள், மூளைக்கட்டிகள் மற்றும் உடல் கட்டிகள் குணமாகும்.
  • செந்நாயுருவி இலைகளை அரைத்து பற்று போல நெஞ்சின் மேல் தடவிவர, நெஞ்சு குத்தல் மற்றும் வலிகள் நீங்கும்.
  • செந்நாயுருவி சமூலம் எனப்படும் வேர், இலைகள் மற்றும் விதைகளை இடித்து தூளாக்கி அதை, இரசத்தில் கலந்தோ அல்லது தினமும் ஒருவேளை நீரில் இட்டு கொதிக்கவைத்தோ பருகிவர, அனைத்து வகை கண் வியாதிகள் மற்றும் அதிகமாக பசி எடுத்தல் போன்ற பாதிப்புகள் சரியாகிவிடும்.
  • காதில் சீழ் வடிதலை நிறுத்த, செந்நாயுருவி இலைச்சாற்றை, இரு சொட்டுகள் காதில் விட, காது சீழ்வடிதல் பிரச்சினைகள் விலகும்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *