Connect with us

Agriculture

பயிர் ஊக்கி மற்றும் பூச்சிவிரட்டியை தயாரிப்பது எப்படி?

வீட்டுத் தோட்டம் என்ற ஒன்றை ஆரம்பித்து விட்டாலே கூடவே இந்த பூச்சி தொல்லைகளும் வந்து சேர்ந்து விடுகின்றது. பூச்சிகளை விரட்ட எவ்வளவு முயற்சி எடுத்தான் சிலருக்கு பலனளிப்பதில்லை. ஆனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்றாகி எப்படி இருக்கும்! இந்தப் பதிவில் எலுமிச்சைத் தோல், ஆரஞ்சு தோல், சாத்துகுடி தோல்களைக் கொண்டு நல்ல பலனளிக்கக் கூடிய பூச்சி விரட்டியுடன் பயிர் ஊக்கியையும் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். ( இது பூச்சி விரட்டியாக மாத்திரம் பயன்படுத்தாது செடிக்கு ஒரு பயிர் ஊக்கியாகவும் நன்மை தரக்கூடிய இயற்கையான உரம்)  முதலில் இதை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை

  • ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி தோல்
  • பிளாஸ்டிக் பாட்டில்
  • நீர்

செய்முறை

எடுத்துக் கொண்ட ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, தோள்களை பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு நீரை ஊற்றி பாட்டிலை நன்றாக மூடி இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஏதேனும் ஒரு இடத்தில் ஊறவைக்கவும். இதிலிருந்தே எந்த ஒரு கெட்ட வாடையும் வராது எனவே இதை உங்கள் வீட்டிலே வைத்துக்கொள்ளலாம்.

இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊற வைத்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த ஊறவைத்த நீரானது 7 – 8 நாட்களுக்கு கெடாமல் இருக்கும். காரணம் இதில் இருக்கும் புளிப்புத்தன்மை. மேலும் வடிகட்டிக் கொண்டு நீரை நேரடியாக செடிக்கு பயன் படுத்த கூடாது.

பயன்படுத்தும் முறை
சாதாரண நீர் ஒரு லிட்டருக்கு அரை லிட்டர் ஊறவைத்த நீரை கலந்து கொள்ள வேண்டும். பின்னர் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பிக் கொள்ளுங்கள் இப்போது பூச்சிவிரட்டி + பயிர் ஊக்கி தயாராகிவிட்டது.

இந்த கலவையை செடிகளின் இலைக்கு பின்னாலும், செடிகளின் மொட்டுக்களிலும் மெல்லியதாக ஸ்பிரே செய்ய வேண்டும். அத்துடன் இந்த கலவையை செடிகளில் வேர் பகுதியிலும் ஊற்றிக் கொள்ளலாம். முக்கியமாக இது வேர் பகுதிகளில் பூச்சித் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது, மேலும் இதை பயன்படுத்துவதால் செடியில் பூக்கும் பூக்கள் பெரிதாகவே பூக்கின்றன.

அஸ்வினி பூச்சி
செடிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி வகைகளில் ஒன்றுதான் இந்த அஸ்வினி. பெரும்பாலும் இந்த அஸ்வினிப்பூச்சியானது அவரை, பீன்ஸ் மற்றும் காராமணி போன்ற செடி, கொடிக ளையே அதிகம் தாக்கும்.

கீழே பார்க்கப் போகும் பூச்சிவிரட்டி அக்னி அஸ்திரம் எனும் பூச்சி பிரண்டையின் ஒரு வகைதான். அக்னி அஸ்திரம் எனும் பூச்சிவிரட்டியில் பிரதானமாக கோமியம் பயன்படுத்தி இருப்பார்கள் அது மாத்திரமில்லாமல் பெரும்பாலான பூச்சி விரட்டிகளை தயாரிப்பதற்க கோமியம் ஒரு முக்கிய பொருளாகவே இருக்கின்றது காரணம் இதில் உள்ள நுண்ணுயிர்கள்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பூச்சி விரட்டியானது கோமியத்தை பயன்படுத்தாது பூச்சி விரட்டி எப்படி தயாரிப்பது பற்றித்தான். இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பதற்கு அதற்கென்று ஒரு குறிப்பிட்ட சூத்திரம் இல்லை, ஏனென்றால் புகையிலையை கொண்டே பூச்சிவிரட்டி தயாரிக்கின்றார்கள். ஏனென்றால் புகையிலையை இயற்கை பூச்சி விரட்டியாக பயன்படுத்துவது பலரிடம் விவாதத்துக்குரிய விடயமாகவே இருந்து வருகின்றது.

இரண்டு லிட்டர் பூச்சி விரட்டியை தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்

  • வேப்பிலை – தேவைக்கு என்றால்போல்
  • ஒரு கற்றாழை
  • 3 லிட்டர் நீர்
  • மிளகாய் – 100 கிராம்
  • பூண்டு – 100 கிராம்
  • மோர் ஒரு டம்ளர்

செய்முறை
பூண்டு மற்றும் மிளகாயை நன்றாக இடித்து எடுத்து அத்துடன் கற்றாலையை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்று லிட்டர் நீரை ஊற்றி, அதில் மோரை தவிர மேலே எடுத்துக்கொண்ட பொருட்களை நீரில் போட்டு நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

ஒரு லிட்டர் நீர் வற்றும் வரை கொதிக்கவிட்டு எடுத்து ஒரு நாள் முழுக்க அப்படியே ஆறவிட வேண்டும். அடுத்த நாள் கலவையை நன்றாக வடிகட்டி நீரை எடுத்து அதில் ஒரு டம்ளர் அளவு மோரை சேர்த்து மேலும் ஒரு நாள் விடவேண்டும் இப்போது அருமையான பூச்சிவிரட்டி தயாராகிவிட்டது.

பயன்படுத்தும் முறை
பூச்சித் தாக்கம் அதிகமாக இருக்கும் போழுது ஒரு லிட்டர் நீருக்கு 100 மில்லி லிட்டர் கலவையைக் கலந்து ஸ்பிரே மூலம் வேகமாக செடிகளுக்கு தெளிக்கவேண்டும். அதிகமான பூச்சித் தாக்கம் இருந்தால் இடைவெளி எதுவும் இல்லாமல் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு தெளிக்கவேண்டும். பூச்சித் தாக்கம் குறைவாக இருக்கும்பட்சத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தெளிப்பது சிறந்தது.

வேப்பம் புண்ணாக்கு பூச்சி விரட்டி

இயற்க்கை முறையில் அஸ்வினி பூச்சிகளை விரட்டும் திறமை கொண்ட மற்றுமொரு பூச்சிவிரட்டிதான் இந்த வேப்பம் புண்ணாக்கு கரைசல். அதிகமாக வீட்டுத் தோட்டம் வைத்திருக்கும் சிலர் இந்த வேப்பம் புண்ணாக்கை மண் கலவையில் சேர்த்துக் கொள்வார்கள்.

தயாரிக்கும் முறை
200 கிராம் வேப்பம் புண்ணாக்கை எடுத்து இரண்டு லிட்டர் நீரில் நன்றாக கலந்து கொள்ளவேண்டும். பின்னர் வேப்பம் புண்ணாக்கின் சாரு நீரில் கரையும் வரை மூன்று மணி நேரத்திற்கு ஊற விடவேண்டும். பின்னர் இதைவடிகட்டி நீரை எடுத்துக் கொண்டால் பூச்சிவிரட்டி தயாராகிவிட்டது

குறிப்பு: வடிகட்டிய வேப்பம்புண்ணாக்கு சக்கையை செடிகளின் வேர்ப்பகுதியில் விடுவது நல்லது.

பயன்படுத்தும் முறை
எடுத்துக்கொண்ட நீரை நேரடியாக ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி செடிகளில் பூச்சி இருக்கும் பகுதியில் தெளிக்கவேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கலவைகளை செடிகளுக்கு தெளிக்கும் போது இலைகளின் பின்பாகத்தில் படும்வாறு, செடி முழுதும் நனையுமாறு தெளிக்க வேண்டும். பூச்சி விரட்டிகளை பயன்படுத்த உகந்த நேரமாக மாலை நேரம் இருக்கிறது, அதாவது வெயில் மறைந்த பிறகு பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *