Connect with us

Health

சளி இருமல் ஜலதோஷம் நெஞ்சு சளி அனைத்தும் குணமாகும் அதிசயம்

சளி மற்றும் இருமல் மிகவும் வேகமாக குறைவதற்கு சில மருத்துவ குறிப்புகள்.
ஒரே டம்லர் வென்நீர் எடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி தேன் மற்றும் சிறிதளவு மிளகு போட்டு பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு அதை குடிப்பதால் இருமல் மற்றும் சளி குணமடையும்.

தொண்டை வலி வந்து விட்டால் உடனே வெது வெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பிளிக்க வேண்டும். தொண்டையில் எற்பட்ட வீக்கத்தை குறைப்பதற்கும் தொண்டையின் உறுத்தலை நீக்குவதற்கும் சளியை குறைப்பதற்கும் இந்த உப்பு நீரால் வாயை கொப்பிளிக்க வேண்டும்.

இஞ்சி வரட்டு இருமலை விரைவில் நீக்க கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து அதில் சிறிதளவு உப்பை தூவி உப்பு கலந்த இஞ்சியை சில நாட்களுக்கு நன்கு மெல்லவும் இஞ்சியுடன் துளசி இலையை சேர்த்துக் கொண்டால் சளிக்கும் நல்ல பலன் கிடைக்கும்.

முருங்கை கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பை குழைத்து தொண்டையில் தடவி கொண்டால் இருமல் உடனே நீங்கும்.
வெற்றிலை சாறு எடுத்து அதனை தேனுடன் சேர்த்துக் குடித்து வந்தால் சளியிலிருந்து உடனடியாக தீர்வு கிடைக்கும்.

புதினா இலை ஒரு கைப்பிடி மிளகு மூன்று இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் சளி இருமல் நுரையீரல் கோளாறு நீங்கும்.

பூண்டு மிளகு தக்காளி கொத்தமல்லி சேர்த்துக் ரசம் வைத்து தினமும் உணவில் சேர்த்து வந்தால் சளி மற்றும் நுரையீரல் கோளாறுகளை உடனே குணப்படுத்தும்.

 

மங்சளை தீயில் சுட்டு மணந்தால் தலைவலி தலைபாரம் மூக்கடைப்பு நீங்கும். வெற்றிலையுடன் மிளகு மற்றும் பலங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவதால் தொண்டை புண் இருமல் குணமாகும்.

மேலே உள்ளவை அனைத்தையும் செய்வதன் மூலம் சளி மற்றும் இருமல் விரைவில் குணமாகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *