Connect with us

Livestock

வான்கோழிகளை நீங்களும் தாராளமா வளர்க்கலாம் வாங்க!

பொதுவாக வான்கோழிகளை இறைச்சிக்காகத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. வான்கோழியை வளர்க்க விரும்புபவர்கள் 50 தொடக்கம் 60 நாள் வயதுடைய வான்கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பது சிறந்ததாகும். காரணம் வான் கோழி குஞ்சு பொரித்தாது முதல் 30 நாட்களுக்கு கவனமாகவே வளர்த்தெடுக்க வேண்டும்.

நாட்டுக்கோழி குழம்பு சாப்பிட்டவர்கள் வான்கோழி குழம்பு சாப்பிட்டால் அதனுடைய சுவையானது நாட்டுக்கோழி குழம்பை விட சற்று குறைவாகத்தான் இருக்கும். ஆனால் வான்கோழியை பிரியாணி சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாகவே இருக்கும்.

வான்கோழியானது எட்டாவது மாதத்தில் இருந்தே இனப்பெருக்கத்திற்கு ஆரம்பமாகிவிடும். இதனுடைய எடையானது 8 கிலோ தொடக்கம் 12 கிலோ வரை வளரும். வான்கோழி வளர்ப்பதால் பண்ணைக்கு பாதிப்பை ஏற்படுத்த வரும் சில பிராணிகளிடமிருந்து பாதுகாக்கும்.

வான்கோழியின் உடல் ஆரோக்கியமானது மற்ற கோழிகளை ஒப்பிடுகையில் சற்று குறைவுதான் எனவே இதற்கு எந்த நோயும் எளிதில் தாக்கிவிடும். அதிகமாக வான்கோழியை தாக்கும் நோயாக இருப்பது அம்மை. எனவே வான்கோழியை ஆரோக்கியமான சூழலில் வளர்ப்பது மிகச் சிறந்தது.

வான்கோழிகளுக்கு நோய்கள் எதுவும் தாக்காமல் இருக்க சத்துக்கள் நிறைந்த தீவனங்களை கொடுக்கவேண்டும். சாதாரணமாக நாம் கோழிக்கு கடையில் வாங்கிக் கொடுக்கும் தீவனங்கள், கம்போஸ்ட் உரம் அல்லது பச்சை தானியங்களை கொடுத்து வளர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். நாட்டுக்கோழி உடன் வான்கோழியை வளர்க்கும் போது சண்டை பிடிக்க வாய்ப்புண்டு எனவே இவை இரண்டும் குஞ்சுகளாக இருக்கும் போது வாங்கி வளர்த்தால் ஒற்றுமையாக வளரும். ஆண் வான்கோழிகளுக்கு கழுத்தின் கீழ் பகுதியில் தாடி வளரும். இந்தத் ஆடையானது கோழி பருவமடைந்த திலிருந்து வளர ஆரம்பிக்கும்

வான் கோழி முட்டை உற்பத்தியானது நாம் கொடுக்கும் தீவனத்தைப் பொருத்து ஒரு வருடத்துக்கு அண்ணளவாக 120 முட்டைகளை இடக்கூடியது. அதாவது மூன்று நாட்களுக்கு இரண்டு முட்டை விகிதம் தரக்கூடியது. இந்த முட்டைகளை அடை வைப்பதற்காக சேமிக்கும்போது ஒரு மண்பானையில் பச்சை நெல்லை சிறிதளவு நிரப்பி முட்டையின் கூர்ப்பாகம் பாதி புதைந்த வாரும், மிகுதி ஆகாயத்தை பார்த்து வரும் திறந்தவெளியில் அதாவது காற்றுப்படும் இடத்தில் வைக்க வேண்டும்.

எத்தனை நாட்களில் ஒரு முட்டை அடை வைக்கலாம்?

முட்டைகள் அடை வைப்பதற்கு உகந்ததாக இருக்கும் நாட்கள் கால நிலையைப் பொறுத்தே மாறுபடும். கோடைகாலமாக இருந்தால் நான்கு தொடக்கம் ஐந்து நாட்களுக்குள் முட்டைகளை அடை வைக்க வேண்டும். கார்த்திகை காலம் என்றால் ஐந்து தொடக்கம் ஆறு நாட்களில் அடை வைக்க வேண்டும். மழைகாலம் என்றால் ஏழு தொடக்கம் எட்டு நாள் நாட்களுக்குள் அடை வைக்க முடியும். இதற்கு மேலும் நாட்கள் சென்றால் அந்த முட்டைகள் பொறியாமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. எனவே குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் முட்டைகளை அடை வைப்பது சிறந்தது.

வான்கோழிகள் 20 விகிதம்தான் முட்டைகளை அடைகாக்கும் எனவே இதனுடைய முட்டையை நாட்டுக்கோழிகளில் அடை வைப்பது சிறந்த ஒரு வழி. முட்டைகளை அடை வைப்பதற்கு பிரம்பினால் தயாரிக்கப்பட்ட கூடைகளை தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனென்றால் இது இடியின் மூலம் ஏற்படும் அதிர்வுகளை தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பதால் முட்டைக்குள் இடருக்கும் கருவை பாதுகாக்க உதவும்.

எப்படி அடை வைப்பது? தேவையான பொருட்கள் என்ன?

  • பிரம்பினால் தயாரிக்கப்பட்ட ஒரு கூடை
  • சாம்பல்
  • செம்மண்
  • இரும்பு ஒரு சுண்டு
  • மிளகாய் – 3
  • கரித்துண்டு – 3

முதலில் பிரம்பினால் தயாரிக்கப்பட்ட கூடையை எடுத்து அதில் முக்கால் பாகத்துக்கு செம்மண் உடன் சிறிது சாம்பல் கலந்து நிரப்ப வேண்டும். பின்னர் ஒரு நாட்டுக்கோழியில் இந்த வான்கோழி முட்டைகளை அடை வைக்க போகிறீர்கள் என்றால் அதிகபட்சம் 7 முட்டையை வைத்துக்கொள்ளுங்கள். எடுத்துக்கொண்ட இரும்புத் துண்டை அடைவைக்கும் மண்ணில் நட்டு வையுங்கள், அத்துடன் மிளகாய், கரித்துண்டுகளை மண்ணில் போட்டு வையுங்கள்.

மிளகாய் மற்றும் கரித்துண்டுகளை வைப்பதற்கு காரணம் என்ன? மிளகாய் ஆனது பூச்சி பொட்டுகள் வராமல் பாதுகாக்கும், மேலும் கரித்துண்டானது காற்றில் உள்ள அதிகமான ஈரப்பதத்தை உறிஞ்சி எடுக்கக் கூடியது. சாம்பலை மண்ணில் கலந்து வைப்பதற்கு காரணம் சுமார் 28 நாட்களுக்கு அடைகாக்கும் கோழிக்கு இலைப்பேன் வராமல் பாதுகாக்கும்.

கோழியை அடை வைப்பதற்கான உகந்த நேரம் மாலை 5 தொடக்கம் 6 மணி அளவில் ஆகும். நமது முன்னோர்கள் இந்த நேரத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்றால் அந்த நேரத்தில் கோழியில் இருக்கும் வெப்பநிலையும், காற்றில் இருக்கும் ஈரப்பதமும் சரியான அளவில் இருப்பதால் முட்டைகளில் கரு உருவாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

சாதாரணமாக ஒரு கோழி முட்டையை அடை வைக்கும் போது சுமார் நான்கு மணி நேரத்தில் அந்த முட்டை கரு உருவாக்க ஆரம்பித்து விடும். எனவே அடைவைத்த கோழியை தொந்தரவு செய்வது நல்லதல்ல. மேலும் கோழியை அடை வைப்பதற்கு மிதமான வெளிச்சமும், அமைதியான சூழல் நிறைந்த இடத்தில் வைப்பது சிறந்ததாகும்.

மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை சரியாக பின்பற்றி வான்கோழிக்கு சத்தது நிறைந்த தீவனங்களை கொடுத்து வளர்க்க வேண்டும் மேலும் வான்கோழிக்கு அடைவைத்த முட்டைகள் 28 நாட்களில் குஞ்சு பொறித்துவிடும். மேலும் வான்கோழி சம்பந்தமான ஏதும் சந்தேகங்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *