Connect with us

Livestock

அடை வைக்கும் முட்டைகளின் பொறிப்புத் திறனை அதிகப்படுத்த சில வழி

கோழிக்கு அடை வைக்கும் எல்லா முட்டைகளையும் குஞ்சாக பொறிக்க வைப்பது ஒரு சவாலான விடயமாகத்தான் இருக்கிறது. இதை நமது முன்னோர்கள் சொல்வார்கள் கைராசிகாரர்கள் வைக்கும் முட்டை தான் பொறிக்கும் என்று ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. சரியான வழிமுறைகளை பின்பற்றி அடைவைத்தலே பொறிப்புத் திறனை அதிக்கப்படுத்தலாம். அடை வைக்கும் முட்டைகளை தரமானதாக தேர்ந்தெடுப்பது, மேலும் நாம் அடைவைக்கும் முட்டைகளை அடைகாக்கும் சக்தி கொண்ட ஒரு கோழியை நாம் தெரிவு செய்யது என இவைகள் சரியாக இருந்தாலே பொறிப்பு திறன் அதிகமாக இருக்கும். எனவே இது பற்றி விரிவாக பார்ப்போம்.

முதலில் நாம் தெரிவு செய்யும் அடைகாக்கும் கோழியானது எத்தனை முட்டைகளை அடைகாக்க திறன் வாய்ந்தது என்று நாம் அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக நாம் தெரிவு செய்த கோழி 9 முட்டைகளை மாத்திரம் தான் அடைகாக்க திறனுள்ளதாயில் அதற்குரிய அளவான முட்டைகளை வைப்பது தான் சிறந்தது.

அடைகாக்க முட்டையை தெரிவு செய்வது எப்படி?

அடை வைப்பதற்காக தெரிவு செய்யப்படும் முட்டை ஒரு கன்னி கோழி முதல் முதலில் இட்ட முட்டையாக இருக்கக்கூடாது. அதாவது சிறிய கன்னி முட்டையாக இருக்கக்கூடாது.

ஒன்று தொடக்கம் ஏழு நாட்களுக்கு இடைப்பட்ட முட்டைகளை மாத்திரமே அடை வைக்க பயன்படுத்த வேண்டும்

35 தொடக்கம் 40 கிராம் முட்டைகளையே அடை வைப்பதற்கு பயன்படுத்து சிறந்தது.

நீளமான வடிவத்தில் இருக்கும் முட்டைகளை அடை வைப்பதில் இருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நீளமான முட்டைகளின் பொறுப்பு திறன் குறைவாகத்தான் இருக்கும்.

அதிகமாக அழுக்கு படிந்த முட்டைகளை அடை வைக்க கூடாது, நாம் எவ்வளவு துடைத்தாலும் முட்டை ஓட்டில் இருக்கும் அழுக்கு போகவில்லை என்றால் அந்த முட்டைகளை அடை வைப்பது தவிர்க்க வேண்டும். காரணம் சரியான காற்றோட்டம் செல்லமுடியாமல் முட்டையில் கருக்கட்டும் விகிதம் குறைவாக இருக்கும்.

கல்சியம் குறைபாடு காரணமாக முட்டையோடு மிகவும் மெலிதாக இருக்கும் முட்டைகளை அடைவைப்பதிலிருந்து தவிர்க்க வேண்டும்.

எனவே ஒரே அளவுடைய சுமார் 35-40 கிராம் அளவு உடைய முட்டைகளை அடை வைக்கும் போது தான் ஒரு தரமான ஆரோக்கியமான குஞ்சு நமக்கு கிடைக்கும் . மேலும் இதில் சீரான வெப்பநிலை உருவாக்குவதால் பொரிக்கும் திறனும் அதிகமாக இருக்கின்றது.

அடை வைக்கும் முட்டைகளின் வயதை ஒரு பாத்திரத்தில் அரை அளவு நீரை நிரப்பி முட்டையை எடுத்து பாத்திரத்தில் இட்டால் அது பாத்திரத்தின் அடி பாகத்திற்கு சென்றால் அது ஒரு வாரத்துக்குட்பட்ட முட்டையாகும், அதுவே நீரின் அடிப்பாகத்தில் இருந்து சற்று தூக்கலாக இருந்தால் அது ஒரு வாரத்துக்கு அதிகமான முட்டையாகும், 3 வாரத்துக்கு அதிகமான முட்டைகள் செங்குத்தாகவே பாத்திரத்தின் அடியில் இருக்கும். ஒரு மாத காலமான முட்டைகள் தண்ணீரில் மேல்பாகத்தில் மிதக்கும். எனவே இந்த வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் கடைகளிலிருந்து அடைப்பதற்காக வாங்கிவந்த முட்டையின் வயதை தெரிந்து கொள்ளலாம்.

முட்டையை அடைவைத்து 6 தொடக்கம் 7 நாட்கள் கழிந்த பின் அடை வைத்த முட்டைகளை எடுத்து வீட்டில் பயன்படுத்தும் டார்ச்லைட் அல்லது மொபைல் போன்களின் லைட்டை கொண்டு கருக்கட்டி உள்ளதா என சோதித்துப் பார்க்க முடியும். சோதித்து பார்த்த முட்டைகளில் கரு உருவாகாவிட்டால் அந்த முட்டைகளை கோழியிலிருந்து தூரப் போட்டு விட வேண்டும். சரி இப்போது முட்டையில் கரு உருவாகி உள்ளது என்று எப்படி சோதித்து பார்ப்பது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு லைட்டை எடுத்து இருட்டறையில் முட்டையின் மேல் பாகத்தில் லைட்டை அடிக்கும் போது முட்டையைச் சுற்றி ரத்த நாளங்கள் உருவாகியிருக்கும் மற்றும் முட்டையினுள் கரு சிறியதாக இருக்கும்.

சாதாரணமாக நாம் கோழிக்கு அடை வைத்து 19ஆவது நாளிலிருந்து குஞ்சுகள் பொரிக்க ஆரம்பித்து 25 நாட்கள் வரை ஆகலாம். காரணம் சில முட்டைகளுக்கு வெப்பநிலையானது சரியாக பெற முடியாத காரணத்தினால்.

அடைகாக்கும் கோழிகள் உணவுக்காக வெளிய இறங்காவிட்டால் நாம் அதை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை வெளியே எடுத்து விட வேண்டும் இல்லையென்றால் நாம் அடை வைத்த முட்டையை அது உணவுக்காக பயன்படுத்தலாம். இவ்வாறான பழக்கம் ஒரு முறை அந்த கோழியிடம் வந்துவிட்டால் அது தொடர்ச்சியாகவே இருக்கும் எனவே இதுபோன்ற அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ள குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை யாவது கோழியை வெளியே எடுத்து விடவும்.

வெயில் காலங்களில் கோழி முட்டை அடை வைக்கும்போது குளிர்ச்சியான பகுதிகளை தேர்ந்தெடுப்பது உகந்ததாகும். மேலும் வெயில் காலத்தில் பொரிக்கும் குஞ்சுகள் நோய்வாய்ப்பட அதிக வாய்ப்புண்டு எனவே வெயில் காலங்களில் அடைவைப்பது தவிர்த்துக் கொள்வது நல்லதாகும்.

சுருக்கம்:- தரமான முட்டைகளையும் அதை அடைகாக்கும் திறன் கொண்ட ஒரு தாய் கோழியையும் தெரிவுசெய்ய வேண்டும், பின்னர் சிறிது குழி உடைய பாத்திரத்தில் அரைவாசிக்கு மண்ணை நிரப்பி அதில் கோழியை அடை வைக்க வேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *