Connect with us

Health

நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன? எவ்வாறு எடுத்துக்கொள்வது?

தற்காலங்களில் அதிகமாக பேசப்படுவது நோய் எதிர்ப்பு சக்தி பற்றித்தான். அதிலும் பெரும்பாலானோரின இடையே இருக்கும் அதிகமான கேள்வி இந்த நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி உணவாக எடுத்துக் கொள்வது என்றுதான். இதற்காக சிலர் பல மூலிகைகள், கசாயங்களை நோய் எதிப்புச்சக்தி அதிகரிக்கும் என்று எடுத்துக் கொள்வார்கள். ஆனால் உண்மையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன? இதை எப்படி எடுத்துக் கொள்வது? எப்படி நோய்கள் வராமல் பாதுகாக்கிறது? என்று இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு தனிப்பட்ட சக்தி கிடையாது அது ஒரு அமைப்பு. பல உறுப்புகள், பல இடங்ககள், பல விடயங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு அமைப்பாகும் இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். நமது உடலைத் தாக்கவரும் ஒரு கிருமி நமது உடம்பின் உள்ள சில வழிகளினால் மாத்திரமே உடலுக்குள் செல்ல முடியும். உதாரணமாக நாம் சாப்பிடும் உணவு மூலமாக வயிற்றுக்குள் செல்ல முடியும், நாம் சுவாசிக்கும் மூச்சுக் குழாய் மூலம் நுரையீரலுக்கு செல்ல முடியும், சிறுநீர் பாதை வழியாக அல்லது தோல் வழியாக என சில வழிகளில் மாத்திரமே நமது உடம்புக்கு செல்லமுடியும்.

இந்த கிருமியை முன்னாடியே தடுப்பதற்கு சில பாதுகாப்பு சுவர்கள் நமது உடம்பில் இருக்கின்றது. உதாரணமாக நமது மூக்கில் உள்ள முடிகள் அதில் உள்ள சளி, வாயில் சுரக்கும் உமிழ்நீர், நமது வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலம் என அடுக்கிக்கொண்டே போகலாம். இதுபோன்று ஒவ்வொரு உறுப்பிலும் நோய்க் கிருமிகள் உள்ளே வராமல் தடுப்பதற்கு பாதுகாப்பு சுவர்கள் இருக்கின்றது. இதையும் தாண்டி இந்த கிருமியை நமது உடலுக்குள் வந்துவிட்டால் நமது உடலில் இயற்கையாகவே வெள்ளையணுவை சேர்ந்த சில செல்கள் இதனுடன் போராடி அழிக்க முயற்சி செய்யும், பெரும்பாலான சமயங்களில் இது வெற்றியும் கொள்ளும். ஆனால் சில சக்தி வாய்ந்த கிருமிகளை இது தோற்கடிக்க முடியாமல் போய்விடும், இந்த சமயத்தில் தான் நமது உடல் குறித்த கிருமியை அழிப்பதற்கு சிறப்பான சில நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி அந்த கிருமியை அழிப்பதற்கு முயற்சி செய்யும்.

கிருமியை அழிப்பதற்கான செயல்பாடு  நடப்பதற்கு 4-5 நாட்களோ அல்லது 1-2 வாரம் கூட ஆகலாம். ஒரு தடவை உடலுக்குள் வந்த கிருமியை நமது உடல் ஞாபகம் வைத்திருக்கும். மீண்டும் அதே கிருமி நமது உடலில் நுழைந்து அது ஒரு நோயாக மாறுவதற்கு முன்னர் மிக வேகமாக நமது உடல் அதற்குரிய நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி அழித்து விடும். இதுபோன்று தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான கிருமிகள் நமது உடம்பு அளித்துக் கொண்டிருக்கின்றது. இது ஒரு அபூர்வமான நிகழ்வு என்று கூட சொல்லலாம். இதனால்தான் சொல்லுவார்கள் ஒரு முறை அம்மை நோய் வந்தவர்களுக்கு இனி வாழ்நாள் முழுவதும் அம்மை நோய் வராது என்று சொல்வார்கள். எனவே மேலே குறிப்பிடப்பட்ட இரண்டும் சேர்ந்ததுதான் இந்த நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு என்பது.

நோய் எதிர்ப்பு சக்திக்கும், உணவு முறைக்கும் சம்பந்தம் இருக்கின்றதுதான் ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ற பெயரில் விலை உயர்ந்த பழங்களையோ அல்லது சத்து பானங்களையோ குழந்தைகளுக்கு குடிக்க கொடுப்பதல்ல. சாதாரணமான ஒரு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறேன் என்று கண்ட உணவுகளை கொடுப்பதால் உடல் பருமன் அதிகரிக்கும். நிஜமாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன வழி?

ஒரு குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பாலை சரியாக கொடுத்தாலே அதுதான் நீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய நோய் எதிர்ப்பு சக்தியாகும். ஒரு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகச் சிறந்ததாக கிடைக்க தாய்ப்பால்தான் காரணமாகின்றது. ஒரு தாய் தனது குழந்தைக்கு பாலூட்டும் போது அவள் பிறந்ததிலிருந்து அவளுடைய உடலில் உருவாக்கப்பட்ட அனைத்து நோய் எதிர்ப்பு சக்தியும் அந்த அந்த குழந்தைக்கு சென்றடையும். எனவே ஒரு தாயானவள் 2 இரண்டு வருடம் தொடர்ச்சியாக குழந்தைக்கு பாலூட்டினாலே அக்குழந்தைக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். தாய்ப்பால்தான் ஒரு குழந்தைக்கு முதல் இரண்டு வருடத்திற்கு கிடைக்கக்கூடிய தடுப்பு மருந்தாகும்.

உணவு வகைகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் நிறைய வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், அண்டிஆக்சிடன்ட்ஸ் போன்றவை தேவைப்படுகின்றது இதற்காக நட்ஸ் வகைகள், கீரை வகைகள், பழவகைகள் சாப்பிட வேண்டும் என்று நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் நாம் மறந்து போன ஒரு சத்து இருக்கின்றது அதுதான் புரதச்சத்து இது நமது நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. எனவே இதை ஒதுக்கி விடாமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், முட்டை, பருப்பு வகை, கடலை வகை, பால், இறைச்சி, போன்றவற்றில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே நாம் புரதத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்திக்கு அது ஒரு பக்க பலமாக இருக்கும்.

ஒரு குழந்தை எத்தனை முறை நோய்க் கிருமி தாக்குகின்றது அந்தளவுவுக்கு அக்குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கும். உதாரணமாக சிறு வயதிலிருந்தே ஒரு குழந்தை எந்த ஒரு நோய்க்கிருமி தாக்குதலும் இல்லாமல் வளர்ந்தால் அந்தக் குழந்தைதான் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்குமாம். எனவே நோய்க்கிருமியை கண்டு பயப்படத் தேவையில்லை அதற்கு சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டாலே போதுமானது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *