Connect with us

Beauty

முடி கொட்டுதல் பிரச்சினையை சரி செய்ய சில வழிகள்.

தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சினை தலை முடி கொட்டும் பிரச்சினையை எப்படி சரி செய்வது என்று. இந்த தலைமுடி கொட்டும் பிரச்சனை 80 சதவீதமான ஆண்களுக்கும், 60 சதவீதமான பெண்களுக்கும் இருக்கு இருக்கின்றது என்று ஆய்வில் சொல்லப்படுகின்றது.

தலைமுடி கொட்டுவதற்கு முக்கியமாக இருக்கும் ஒரு காரணி மன அழுத்தம்தான். மன அழுத்தம் ஏற்பட்டால் 100% தலைமுடி கொட்டுவதற்கு வாய்ப்புண்டு. ஆனால் மன அழுத்தம் மாத்திரம் தான் முடி கொட்டுவதற்கான காரணம் என்று சொல்லமுடியாது.

மன அழுத்தம் ஏற்பட்டால் உடலில் உள்ள அனைத்து ஹார்மோன்களும் சீர்குலைந்து விடும், இதன் காரணமாகவே சிலரின் உடல் எடை அதிகரித்து குண்டாகிறார்கள், சிலர் உடல் மெலிந்து போகிறார்கள், சிலருக்கு அதிகமாக தலை முடி கொட்டுகிறது. எனவே மன அழுத்தம் என்பது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த யோகாசனம் மற்றும் தியானம் போன்றவற்றை அடிக்கடி செய்யவும்.

சரி இப்போது முடி வளர்ச்சிக்கு என்னென்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

முடி வளர்வதற்கு சிவப்பு அரிசி, ஆரஞ்சு, வாழைப்பழம், அவகேடோ, வால்நட்ஸ் போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொண்டால் நாளடைவில் முடி வளர்ச்சிக்கு நல்ல பலனை பெறலாம்.

உடற்பயிற்சிசெய்யும் பொழுது இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும் எனவே இது முடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவியாக இருக்கும். தலைகீழாக நிற்கும் உடட்பயிற்சியை ஒரு பத்து நிமிடம் செய்துவந்தாலே ரத்த ஓட்டம் அதிகமாக தலைக்கு செல்லும் இதனால் முடி வளர்ச்சி தூண்டும்.

முடி கொட்டிய இடத்தில் மீண்டும் முடி வளர்வதற்கு புரோட்டீன் மற்றும் அயன் டயட் மிகவும் அவசியமாக உள்ளது. பாதாமில் அதிகளவில் உள்ள புரோட்டீனை முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனவே இரவு தூங்கும் முன் நாலு அல்லது ஐந்து பாதாமை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் பாதாமை சாப்பிட்டு அந்த நீரையும் குடிக்கவேண்டும். இது போன்று தினமும் செய்து வரும்போது நாளடைவில் முடி வளர்ச்சியை காணலாம்.

பேரிச்சம் பழத்தில் அதிக அளவில் அயன் சத்து இருப்பதால், ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து பேரிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே பாதாம் மற்றும் பேரிச்சம் பழத்தை தொடர்ச்சியாக எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இறுதியாக தலை முடி கொட்டுவதற்கான மற்றுமொரு காரணம், அதிக அளவிலான கெமிக்கல் உற்பத்திகளை பயன்படுத்துவது. உதாரணமாக ஃபேஸ் வாசால் முகத்தை கழுவும் போது அதனுடைய கெமிக்கல் நெற்றியின் மேல் உள்ள முடிகளில் படுவதனால் தலைமுடி உதிர்வதற்கு முக்கியமான ஒரு காரணமாக இருப்பதாக சொல்கிறார்கள். எனவே ஃபேஸ் வாசால் முகத்தை கழுவும் போது முடிகளில் படாதவாறு கழுவிக்கொள்ளுங்கள், மேலும் கெமிக்கல் பொருட்களை அதிகம் பயன்படுத்தாது தவிர்த்துக்கொள்ளுங்கள்.

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் ஊட்டச் சத்து குறைவாக இருப்பதே முடி உதிர்வதற்கு மற்றுமொரு காரணமாக இருக்கின்றது. முக்கியமாக விட்டமின் b5 அடங்கியுள்ள உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் இதனுடன் விற்றமின் சி அதிகம் அடங்கியுள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதும் சிறந்தது.

முடி உதிர்வை தடுப்பதற்கு சில வழிகளை பார்ப்போம்

நாம் தினமும் செய்யும் சில செயல்கள் தான் இந்த முடி உதிர்வுக்கும், வழுக்கை தலை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது. இதற்கு முதல் காரணியாக இருப்பது வெள்ளை சக்கரை. வெள்ளை சர்க்கரையை அதிகமாக உணவில் எடுத்துக்கொள்ளும்போது உச்சந்தலையில் உள்ள ஹார்மோன்களில் வீக்கம் ஏற்படுத்துவதால் முடி உதிர்வு ஆரம்பித்து சீக்கிரமே வழுக்கை தலை ஆகிவிடுகின்றது. இந்த வெள்ளை சக்கரை எனும் போது நாம் அடிக்கடி சாப்பிடும் உணவுப் பொருட்களிலேயே கலந்து இருக்கிறது. சாக்லெட், கேக் மிட்டாய் என மற்றும் பல இனிப்பு வகை உணவில் பெரும்பாலும் இந்த வெள்ளைச் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. எனவே இதை அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் தேவைகேற்ப குறைவாகவே பயன்படுத்துவது நல்லது.

குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். தலையில் வழுக்கை ஏற்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணியாக இந்த குடிப்பழக்கம் இருக்கின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மது அருந்துவதால் டி.எச்.டி என்னும் ஹார்மோன் அதிகமாக உள்ளதால் இந்த வழுக்கை ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. அத்துடன் புகைப்பழக்கமும் இதுபோன்ற தீங்குகளை ஏற்படுத்துகின்றது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்க நேரிடும். பதப்படுத்தப்படும் உணவுகளில் சோடியம் கலந்திருப்பதால் தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் முடி உதிவுக்கு ஒரு பொதுவான காரணமாக சொல்லப்படுகின்றது.

எனவே இதுபோன்ற பழக்கவழக்கங்கள் முடிந்தவரை தவிர்த்துக்கொள்வது நல்லது. முடி உதிர்வதற்கு பொதுவான சில காரணங்களை இந்தப் பதிவில் பார்த்தோம் மேலும் தகவலுக்கு முடி சம்பந்தமான ஒரு வைத்தியரின் ஆலோசனையை பெறுவது சிறந்ததாகும்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *