Connect with us

Health

நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற சில இயற்கை வழிகள்.

இரவு முழுக்க தூக்கமே இல்லாமல் ஸ்மார்ட் தொலைபேசியில் சமூக வலிதங்களில் அலைபாய்வதும், விளையாடுவது என பாதி இரவில் கடந்து விடுவோம். சிலருக்கு பாதி இரவை கடந்தும் தூக்கமே வராது! இப்படி கஷ்டப்படுபவர்கள் இனி நல்ல நிம்மதியாக தூங்குவதற்கு என்ன செய்யலாம் எனும் வழி முறையை இந்த கட்டுரையில் காணலாம்.

சும்மா தூங்கிட்டு இருக்காத என்கிற காலம் போய் இப்போ சரியான நேரத்தில் தூங்கு எனும் காலம் வந்துட்டு, நம்ம அனைவருக்கும் தெரியும் சரியான நேரத்தில் சரியான தூக்கம் இல்லை என்றால் நமது உடலில் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று, அதுவும் நல்ல காற்றோட்டமான அறையில் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் தூங்க வேண்டும். ஆனால் நிறைய பேர் இது போன்று தமது தூக்கத்தை அமைத்துக் கொள்கிறார்களா என்று பார்த்தால் “இல்லை” என்பதே உண்மை!

உண்மையிலேயே சரியான ஒரு தூக்கத்தை ஒருவர் பெறவில்லை என்றால், அவர் அன்று முழுக்க செய்யும் வேலை எதுவும் சரி வராது என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு சொல்லப்போனால் சரியான தூக்கம் இல்லாத மாணவன் காலையில் எழுந்து படிக்கவும் முடியாது, அப்படி அவன் படித்தாலும் அவனின் மனதில் எதுவும் நிற்காது. எனவே சரியான தூக்கம் ஒரு மனிதனுக்கு ரொம்ப முக்கியம்.

அதிலும் வேலைக்கு செல்பவர்கள் சரியான தூக்கம் இல்லை என்றால் அவர்களின் வேலைகளை சரியாக செய்ய முடியாது, காரணம் அவர்களின் உடலும், மனசும் அதற்கு ஒத்துழைக்காது என்பதே, எனவே தூக்கத்தை எந்த காரணமும் கொண்டு தவிர்க்க கூடாது. இதற்கு மேலும் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் பின்வரும் உதவிக் குறிப்பை முயற்சித்து பாருங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

நாம் தூக்கத்தை தொலைக்க முக்கியமான காரணமே மன உளைச்சலும், கவலையும் தான் முடிந்தவரை இவைகளை தவிர்த்து கொள்ளுங்கள். இதிலிருந்து விடுபட யோகாசனமும், தியானமும் செய்து கொள்ளுங்கள்.

நமது உடலில் மெக்னீசியம் குறையும்போது தேவையற்ற பதற்றம் மன அழுத்தமும் உண்டாகும் எனவே இதை தவிர்க்க இளநீரை அருந்துங்கள். இளநீரில் அதிக அளவு மக்னீசியமும் பொட்டாசியமும் இருப்பதனால் நிச்சயமாக இது நமது உடலுக்கு ஒரு ஆரோக்கிய நன்மையை கொடுக்கும்.

அடுத்து நாம் உறங்கும் இடத்தை மிகவும் தூய்மையாகவும், துர்நாற்றம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் தினமும் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள், பாதத்திலும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள். இது இந்த செயலை தினமும் தூங்கும் முன் செய்துவந்தீர்கள் என்றால் நிச்சயமாக நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

நீங்கள் இருக்கும் பகுதிகளில் நொச்சி இலை கிடைக்கும் என்றால் தலையணைக்கு பதிலாக நொச்சி இலையை தலையணையாக பயன்படுத்தினால் நல்ல உறக்கத்தைப் பெறலாம்.

அது மட்டுமில்லாமல் தினமும் தூக்கத்தை அதிகரிக்கக் கூடிய உணவுப் பழக்கத்துக்கு நீங்கள் மாற வேண்டும். உதாரணமாக மீன், முட்டை, கீரை, பாதாம், வாழைப்பழம் போன்றவைகள் உங்கள் தூக்கத்தை மேம்படுத்தக் கூடியது இவைகளை அன்றாட வாழ்க்கையில் தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டால் கண்டிப்பாக நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

படுத்த உடனே தூக்கம் வராமல் அலைபவர்கள் சிறிது நேரம் கதிரையில் அல்லது கட்டிலில் அமர்ந்து கொண்டவரே தூங்குங்கள் இவ்வாறு செய்யும் போது நாம் இரவு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாக உதவும், மனம் ஒருநிலைப்படும், உடல் சூடும் சீராகி நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

உடல் உழைப்பு இல்லாத பெரும்பாலானவர்கள் இரவு தூக்கத்தை தொலைத்து கொண்டு அலைகிறார்கள் எனவே இது போன்ற உடலுழைப்பு இல்லாது அமர்ந்துகொண்டே தொழில் புரிபவர்கள் தூங்கும் முன் சிறிது உடற்பயிற்சி செய்தாலே நிம்மதியான தூக்கத்தை பெறமுடியும்.

படுக்கைக்கு சென்று தூக்கம் வரவில்லை ஆனால் தூங்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும் சமயத்தில் கண்களை 30 வினாடிகள் தொடர்ச்சியாக சிமிட்டினால் உங்களை அறியாமலேயே நல்ல தூக்கத்தை பெற சூழல்கள் ஏற்படும்.

வெதுவெதுப்பான பாலில் 1 ஸ்பூன் கசகசாவை சேர்த்து தூங்கும் முன் பருகுவதால் அதிலுள்ள சக்தியானது உங்கள் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழித்து ஆழ்ந்த உறக்கத்தை கொண்டுவரும், மேலும் இது கெட்ட கனவுகள் வராமல் தடுக்கும். குழந்தைகள் இவ்வாறு குடித்து வந்தார்கள் ஞாபக சக்தியும் மற்றும் உடல் சுறுசுறுப்பும் குழந்தைகளிடையே அதிகரிக்கும்.

அமுக்குரா கிழங்கு எனவும் அஸ்வகந்தாவை பல காரணங்களுக்காக குறிப்பாக சித்த ஆயுள்வேத மருத்துவத்தில் உயர்நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அஸ்வகாந்தாவில் இருக்கும் சத்துக்களானது மூளையின் நரம்பு செல்களை இயக்குகின்றது, அதே சமயத்தில் நரம்பு ஊக்கியாகவும் செயல்படுகிறது. எனவே இந்த அஸ்வகந்தாவானது மன அமைதிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவதால் வீட்டிலேயே அஸ்வகந்தா சூரணத்தை நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கி 5 தொடக்கம் 10 கிராம் வரை பாலில் கலந்து இரவு தூங்கும் முன் பருகுங்கள்.

இரவு தூங்கும் முன் மன நிம்மதியை கெடுக்கும் காட்சிகளை பார்த்துவிட்டு உறங்கச் செல்வது கூடாது. எனவே இரவு நேரங்களில் தூங்கும் முன் நல்லவற்றையே பார்த்து பேசிவிட்டு தூங்கவேண்டும் அத்துடன் தொலைபேசியை தொலைத்துவிட்டு தூங்கினாலே நல்ல ஆரோக்கியமான தூக்கத்தை பெறலாம்.

இந்தப் பதவியில் தூக்கத்தை பற்றி நாம் பகிர்ந்து கொண்ட விடயங்கள் நிச்சயமாக உங்களுக்கு உதவியாய் இருக்கும் என்று நம்புகிறோம். மேலும் உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன, நன்றி

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *